வள்ளலார் வழி வாழ்வியல்

வணக்கம்,

where can i buy prednisolone for dogs in uk சன்மார்க்கம் (சத்து ‍- உண்மை, மார்க்கம்வழி) என்னும் சொல் திருமூலர் காலத்திற்கும் முற்பட்டு வழக்கில் இருந்து வருகின்ற சொல்லாகும். பல ஆயிரம் ஆண்டுகளாகஇன்னெறி ஒரு சிலரிடத்தில் மட்டும் வழக்கத்தில் இருந்தும், உபதேசிக்கப் பட்டும் வந்தது.

http://oceanadesigns.net/envira/bathrooms/ திருஅருட்பிரகாச வள்ளலார் என்னும் வடலூர் இராமலிங்க அடிகளின் மூலம் அவரின் தோற்றத்திக்கு பிறகே இந்த அற்புத சன்மார்க்க நெறி சாதி மத சமய பேதம் இன்றி உலகத்தில் உள்ள எல்லாருக்கும் பொது நெறியாகவும், எளிய வகையிலும் வழக்கத்தில் உள்ளது.

இந்த சன்மார்க்க நெறி  ஒரு எளிய இனிய வாழ்க்கை முறை ஆகும், இன்னெறியை கடைபிடிப்பதின் மூலம் உடல், மனம், உயிர் தொடர்பான அறிய பயன்களை நாம் பெற முடியும்.

source url இன்றைய  தனிமனித atarax 10mg sömn மற்றும் உலக சிக்கல்கள் பலவற்றுக்கும் தீர்வாக அமைவது சன்மார்க்க நெறியே!

இந்த தீர்வுகளை நன்றாக விளங்கிக் கொள்ள முதலில் சன்மார்க்கம் குறித்த அடிப்படை அறிதல் மற்றும் கடைபிடிக்க தொடங்குதல் அவசியம் ஆகும். இவற்றை விளக்கி பயிற்சி வழிகாட்டும் விதமாக இந்த இணையம் நான்கு பிரிவாக அமைக்கப்பட்டுள்ளது.

 

1. கேட்டல் (அறிதல்) ‍ –   முதல் நிலை
2. சிந்தித்தல் (சத்விசாரம்)  –  நடு நிலை
3. தெளிதல் (கடைப்பிடித்தல்) –  உயர் நிலை
4. அனுபவித்தல் (பயன் பெறுதல்) –  மேல் நிலை

படி நிலையாக பயின்று பயன் பெறுவோம்.

 

உற்றமொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே
உறவன்அன்றிப் பகைவன்என உன்னாதீர்   உலகீர்
கற்றவரும் கல்லாரும் அழிந்திடக்காண்         கின்றீர்
கரணம்எலாம் கலங்கவரும் மரணமும்சம் மதமோ
சற்றும்இதைச் சம்மதியா தென்மனந்தான்       உமது
தன்மனந்தான் கன்மனமோ வன்மனமோ அறியேன்
இற்றிதனைத் தடுத்திடலாம் என்னொடும்சேர்ந் திடுமின்
என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே.”

திருஅருட்பா (6) ஆம் திருமுறை                   (ஞானசரியைரணமிலாப் பெருவாழ்வு )

Vallalar way of Life