அனுஷ்டான விதி – உபதேசங்கள் (தனி)

உபதேசங்கள்:

அனுஷ்டான விதியும், கணபதி பூஜா விதியும் இறுக்கம் இரத்தின முதலியாருக்கு உபதேசித்தவை. செவ்வாய்க்கிழமை விரத முறை சென்னை ராயல் ஹோட்டல் புதுவை வேலு முதலியார்க்கு உபதேசித்தது.பின்னிணைப்பாக அச்சிடப் பெற்றுள்ள இரு வியாக்கியானங்களும் மூன்று உபதேசங்களும் சமயஞ் சார்ந்தனவாயிருப்பதால் அடிகளின் ஏனைய சமரச சுத்த சன்மார்க்க உபதேசங்களினின்றும் இவற்றைத் தனிப்படுத்திப் பின்னிணைப்பாக அச்சிடலாம் என்ற எண்ணத்துடன் இவ்வாறு அச்சிடப் பெற்றன. ஆயின் இவற்றை நூலுள் உரிய இடங்களிற் சேர்ப்பதே நேரிதென்று இப்போது (முன்னுரையெழுதும் போது) தோன்றுகிறது. என்னை? அடிகளின் உபதேசங்களிற் சமயஞ் சார்ந்தவை என இவற்றைப் பின்னிணைப்பிற் றள்ளின், ஏனைய வியாக்கியானங்களிலும், உபதேசங்களிலும் ஆங்காங்கே விரவிக் கிடக்கும் சமயக் கருத்துக்களை என் செய்வது? எங்கே தள்ளுவது? இக்காரணம் பற்றியே முன்னுரையில் அடிகளின் உரைநடை அருளிச் செயல்களை வரிசையாகக் கூறும்போது இவற்றை உரிய இடங்களிற் குறிப்பிட்டதுமாம்.

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *