என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே!
28b57f72547919febf625a2df6ebc598

ஒழிவிலொடுக்கம் மூலமும் உரையும் - ஒலி நூல் வடிவம்

ஒழிவிலொடுக்கம் மூலமும் உரையும்

நூலாசிரியர்: திருஞானசம்பந்த சுவாமிகள் திருவருள் பெற்ற சீர்காழி கண்ணுடைய வள்ளல்

உரையாசிரியர்: திருப்போரூர் சிதம்பரசுவாமிகள்

பதிப்பாசிரியர்: திருஅருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகள்

                                                           ஒலிநூல்குரல்: ஆனந்தபாரதி.

பொதுவிலுபதேசம் - முதல் அதிகாரம்:

ஆசாரியத் தன்மை, சீடத்தன்மை:

பாடல் 0 - சிறப்புப் பாயிரம்
பாடல் 1 - குரு தோத்திரம் , திருஞான சம்பந்தசுவாமிகளின் பெருமை
பாடல் 2 - தற்போதம் நீங்க குருவின் திருவருள் அவசியம் வேண்டும் .
பாடல் 3 - உண்மை குருவை கண்டுகொள்வதும் அவரின் பெருமையும்.
பாடல் 4 - குருவை அல்லாதாரை பற்றுவதால் உண்டாகும் பாவம்
பாடல் 5- உண்மை குருவே தத்துவ நிக்கிரக முதலிய அனுபவத்திற்க்கு வழிகாட்ட இயலும் என்றி நிறுவுதல்
பாடல் 6 - உண்மை அனுபவம் இல்லாதார் ஞான உபதேசம் பிறர்க்கு செய்யின் அது அவர்க்கு பாவமாகும் என்றது.
பாடல் 7 - ஞானகுருவின் உபதேசத் தன்மை
பாடல் 8 - ஞானகுருவின் உபதேச காலமும் , சீடன் அதைக் கேட்கும் முறையும்
பாடல் 9 - ஞானகுரு திருவாக்கின் சிறப்பு
பாடல் 10 - ஞானகுரு திருவாக்கின் சிறப்பு
பாடல் 11 - ஒழிவிலொடுக்க நூல் திருஞானசம்பந்தர் தனக்கு உபதேசமாகக் கூறியது என்றது (நூல் மரபு)
பாடல் 12- ஒழிவிலொடுக்க நூல் இறைவனை அடையும் வழியினை பக்குவர்க்கு வெளிப்படையாக தெரிவிக்கின்றது என்றது.
பாடல் 13- ஒழிவிலொடுக்க நூல் பயன் கூறுதல்
பாடல் 14 - ஒழிவிலொடுக்கம் உபதேச கலையாகிய ஞான நூல் என்று கூறியது
பாடல் 15 - ஒழிவிலொடுக்கம் அதிபக்குவம் உடைய பக்குவர்களுக்கே பயன்படும் என்றது.
பாடல் 16 - ஒழிவிலொடுக்கம் நூலினை கேட்கும்/கற்கும் முறை
பாடல் 17 - ஒழிவிலொடுக்கம் நூல் அவைஅடக்கம்
பாடல் 18 - ஒழிவிலொடுக்கம் நூல் இலக்கண வரம்பிற்கு உட்பட்டது இல்லை எனக்கூறுதல்
பாடல் 19 - இறைவனை குறிப்பினால் குரு உணர்த்த அறியலாம் என்றது.
பாடல் 20- இறைவனை குறிப்பினால் குரு உணர்த்த ஞானத்தால் அறியலாம் என்றது.
பாடல் 21 - பக்குவம் இல்லாதாரின் மாயா உபதேசங்களை கேட்பின் கேட்பவர்க்கும் பாவம் உண்டாகும் என்றது.
பாடல் 22 - பக்குவர்க்கு உரிய இலக்கணம் இது என்றது.

பதி பசு பாசம் ஆகியவற்றின் தன்மைகள்:

பாடல் 23 - பதி (இறைவன்) நிச்சயம் கூறல்.
பாடல் 24 - பதி (இறைவன்) இலக்கணமும் அவர் ஐந்தொழில் செய் விதமும்.
பாடல் 25 - தற்போத ஒழிவில் பதியும் (இறைவன்) ஆன்மாவும் ஒன்றுபட்டு இருக்கும் என்றது.
பாடல் 26 - பதியின் (இறைவன்) அருட்சத்தியின் தன்மை
பாடல் 27 - ஆன்ம ஞான பெற்றவிடத்தில் பதிக்கும் (இறைவன்) ஆன்மாவிற்கும் இடம் ஒன்றே எனல்.
பாடல் 28 - ஆன்மா சார்போதன் என்று உணர்த்தியது.
பாடல் 29 - இறைவனை எதிரிட்டு அறிய இயலாது என்றது.
பாடல் 30 - இறைவனை அறிய ஆணவ மலமே தடை என்றது.
பாடல் 31 - ஆன்மாக்கள் கன்மத்திற்க்கு ஈடாக நடத்தப்படும் என்றது.
பாடல் 32 - ஆன்மா இது தான் என்று அறிவித்தது.
பாடல் 33 - ஐந்து தொழில்களால் உயிருக்கு ஐந்து அவத்தைகள் நடைபெறுகின்றன எனல்.
பாடல் 34 - ஐந்து அவத்தைகளினால் பாதிக்கப்படாது இருக்க உபாயம்.
பாடல் 35 - ஐந்து அவத்தைகளினால் சிவ ஞானிகள் பாதிக்கப்படார்கள் என்றது.
பாடல் 36 - சிவயோகி உபதேசிக்கும் பொருட்டு நீ, நான் என பேதம் கூறினும், அப்பேதம் அவருக்கு இல்லை என்றது.
பாடல் 37 - ஆன்மா தன்னை உணரும் நிலையில் வேறு அனுபவங்கள் தோன்றாது என்றது.
பாடல் - 38 - ஆன்மா தன்னை சிவத்தில் இருந்து பிறித்து அறியாமல் இருப்பதுவே பக்குவம் பெற வழி என்றது.
பாடல் - 39 - ஆன்மா தன் சிற்றறிவால் சிவத்தை ஊன்றி அறிய இயலாது என்றது.
பாடல் - 40- ஆன்மாவானது சிவத்தை தன்னிடம் இருந்து பிரித்தறிய ஆணவ மலமே காரணம் என்றது.
பாடல் - 41 - ஆன்மா சிவத்தோடு கலந்த அத்துவிதம் இது எனக்கூறியது.
பாடல் - 42- வேத முடிவாகிய சிந்தாந்தமே முத்திக்கு வழி காட்டும் என திருஞானசம்பந்தர் உபதேசித்தது.
பாடல் - 43 - திருஞானசம்பந்தர் தனக்கு அருளிய அருளனுபவத்தை வாக்கு முதலியவற்றால் கூற இயலாது என்றது.
பாடல் - 44- திருஞானசம்பந்தர் தனக்கு “அருளே நாம்” என அருளிச்செய்தமை.
பாடல் - 45 - திருஞானசம்பந்தர் தனக்கு ஞானத்தை அறிவித்தலால் தான் அறிந்தேன் என்றது.
பாடல் - 46- ஆணவ, கன்ம, மாயைகளின் நீக்கமே உண்மை நிஷ்டை என்றது.
பாடல் - 47 - ஆன்மபோதம் ஜீவியாது அசைவற்ற நிலையே அருள் நிலை என்றது.
பாடல் - 48 - 36 தத்துவங்களும் நீங்கி, அருளையும் பரையையும் ஆணவ மல வாசனை அற கடந்த நிலையில் சிவாந்தம் தோன்றும் என்றது.
பாடல் - 49 - முத்தி நிலையில் ஆன்மா தன்னையும் சிவத்தையும் பிறித்தறியக் கூடாது என்றது.
பாடல் - 50 - தத்துவ நிக்கிரகம் முதலிய நிலைகளின் ஆனந்தம் தோன்றும் எனவே அவற்றையும் கடந்து சிவத்தோடு அத்துவிதமாய் நிற்க வேண்டும் என்றது.
பாடல் - 51 - சகல,கேவல நிலையில் இருந்து கொண்டு நிட்டை கூறுதல் ஆகாது என்றது.
பாடல் - 52 - சிவாத்வைதத்தில் சிந்தாந்த வேதாந்த பேதம் இல்லை என்றது.
பாடல் - 53 - உலகியல் ஆசாரங்கள் சிவ ஞானிகளுக்கு இல்லை என்றது.
பாடல் - 54 - தவம் முதலிய ஆசாரங்கள் சிவ ஞானிகளுக்கு இல்லை என்றது.
பாடல் - 55 - பாவமும், அசுத்தமும் சிவ ஞானிகளுக்கு இல்லை என்றது.
பாடல் - 56 - உலகத்தாரின் இகழ்ச்சியும், புகழ்ச்சியும், ஞானிகள் தாக்காது என்றது.
பாடல் - 57 - சன்மார்க்கம் நிறைவாக உள்ள நான்கு மார்க்கங்களையும் திருஞானசம்பந்தப் பெருமான் தனக்கு அருளிச்செய்தமையைக் கூறியது.
பாடல் - 58 - சிவஞானிகளுக்கு பக்தியும் தொண்டும் செய்வோர் முத்தி, சித்தி இன்பங்களை அடைவார்கள் என்றது.
பாடல் - 59 - இறைவன் திருவடியை அடைந்தோர்க்கே சிவபோகம் அனுபவிக்க இயலும் என்றது.
பாடல் - 60 - சிவஞானிகளுக்கு கிரியை முதலியவை அவசியம் இல்லை மற்றவர்களுக்கு அவசியம் என்றது.
பாடல் - 61 - தீவிரதர பக்குவர்க்கு குருவின் உபதேசமே போதும் மற்றையர்க்கு உபதேசத்தோடு வேதாகமங்களால் உணர்த்த வேண்டும் என்றது.
பாடல் - 62 - பரையோகத்தில் நிற்கும் சிவயோகியே சீவன் முத்தராவர் என்றது.
பாடல் - 63 - சிவஞானம் இல்லாதவர்களுக்கு சிவ வேடத்தால் பயன் இல்லை என்றது

முதல் அதிகாரம் பொதுவிலுபதேசம் முற்றும்.

சத்திநிபாதத்து உத்தமர் ஒழிவு – அதிகாரம் 2:

பாடல் - 64 - நான்கு பாதம், அதற்குரிய பதம், அதில் உயரிய ஞான பாதத்திற்குரிய நால்வரின் இலக்கணம் முதலியவற்றை ஞானசம்பந்த பெருமான் தனக்கு அருளிச் செய்தார் என்றது.
(இரண்டாம் அதிகாரம் சத்திநிபாதத்து உத்தமர் ஒழிவு தலைப்பின் விளக்கமும் இங்கே காண்க.)
பாடல் - 65 - திருஞானசம்பந்த பெருமான் ஆனந்தாதீதராய் எழுந்தருளி தெய்வ வாக்கின் வழி தனக்கு உபதேசம் அருளிச் செய்தார் என்றது.
பாடல் - 66 - நால்வகை பக்குவத்தாற்கு ஞானாச்சாரியர் உபதேசிக்கும் முறை இது என்றது.
பாடல்  - 67 - அறிவு முதிர்ந்தோர் விடயங்களில் செல்லாது போதத்தை அடக்கி, சிவானந்தத்தில் செல்வார்கள் என்றது.
பாடல் - 68 - பதி, பசு, பாசம் ஆகியவற்றின் இலக்கணங்களை அறிந்தும் சிவானுபவம் அடைய முயற்சி செய்யாதார் அறிவு பயனற்றது என்றது.
பாடல் - 69 - ஞானசாத்திரங்களை கேட்டும் அதன்படி நடவாது விடயச்சேற்றில் அழுந்துவது குற்றம் என்றது.
பாடல் 70 - ஞானாசாரியர் உபதேசம் கூறுமிடத்து சீடன் சகல கேவலங்களில் தாக்கற்று நின்று கேட்பின் மூவகை வினைகளும் அறும் என்றது.
பாடல் 71 - ஞான பாதத்தில் உள்ள பக்குவர்கள் நால்வகையினர் என்றது.
பாடல் 72 - உலக போகங்களில் பற்று நீங்கிய பக்குவர்களுக்கே ஞானகுருவைத் தேடும் நாட்டம் உண்டாகும் என்றது.
பாடல் 73 - ஞானகுருவை விரும்பி தேடும் மாணாக்கர்க்கு உண்டாகும் எண்வகை குணங்கள் இவை என்றது.
பாடல் 74 - ஞானகுருவை விரும்பி தேடும் மாணாக்கர்க்கு உண்டாகும் பத்து அவத்தைகள் இவை என்றது.
பாடல் 75 - ஞானகுருவை மாணாக்கர் வணங்கும் முறையும், அவர் அருளும் அருவகை தீக்கைகளும் இவை என்றது.
பாடல் 76 ஞான ஆச்சாரியர் சீடர்க்கு தீக்கையினால் தற்போதத்தை நீக்கும் முறைமை இது என்றது.
பாடல் 77 - ஞானகுரு மாணாக்கர்க்கு அளிக்கும் உபதேசத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் முறை இது என்றது.
பாடல் 78 - ஞானகுரு அளித்த உபதேசத்தை ஏற்றுக்கொண்ட பக்குவர் ஒழியாமல் ஒழியும் முறையை கண்டது இவ்வாறு என்றது.
பாடல் 79 - ஞானகுரு அனைவருக்கும் ஒருமுறையாய் உபதேசிக்கினும் மாணாக்கரின் பக்குவ தரத்திற்கு ஏற்பவே பரிபாகம் உண்டாகும் என்றது.
பாடல் 80 - மந்த பக்குவர்க்கு ஞானம் தோன்றும் முறை இவ்வாறு என்றது.
பாடல் 81 - மந்ததர பக்குவர்க்கு ஞானம் தோன்றும் முறை இவ்வாறு என்றது.
பாடல் 82 - தீவிர பக்குவர்க்கு ஞானம் தோன்றும் முறை இவ்வாறு என்றது.
பாடல் 83 - தீவிரதர பக்குவர்க்கு ஞானம் தோன்றும் முறை இவ்வாறு என்றது.
பாடல் 84 - பக்குவர்க்கு பாசம் இவ்வாறு நீங்கும் என்றது.
பாடல் 85 - பக்குவர்க்கு பாசம் நீங்கிய போது உண்டாகும் அதிசய குணங்கள் இவை என்றது.
பாடல் 86 - பக்குவர்க்கு உண்டாகும் அனுபவம் பிறர்க்கு அதிசயமாய் தோன்றும் என்றது.
பாடல் 87 - பாசத்தை நீக்கி பதியை அடைந்தோரை மீட்டும் பாசங்கள் தாக்கா என்றது.
பாடல் 88 - பாசத்தை நீக்கி பதியை அடைந்தோர்க்கு வேறு சார்புகள் இல்லை என்றது.
பாடல் 89 - பாசத்தை நீக்கிய பக்குவரை வேறு சார்புகள் பற்றாவண்ணம் பதி தன்னுள் முழுவதும் ஐக்கியம் கொள்ளும் என்றது.
பாடல் 90- ஞானிகள் அடைந்த சிவபோகத்தை இங்ஙனம் என்று அவர்களால் குறிப்பிக்க முடியாது என்றது.
பாடல் 91 - பரஞானத்தை அடைந்த ஞானிகளுக்கு வேதாகம அனுபங்கள் யாவும் சரியே என்றது.

இரண்டாம் அதிகாரம் சத்திநிபாதத்து உத்தமர் ஒழிவு முற்றும்.

யோகக் கழற்றி – அதிகாரம் 3:

பாடல் 92 - யோகத்தில் ஆதார தலங்களில் அழுந்தினால் மீளுவதும் மீட்பதுவும் கடினம் என்றது.
பாடல் 93- யோகத்தால் பிறப்பினை நீக்க இயலாது என்றது.
பாடல் 94 - கிரியா யோகம் முதலியவற்றால் ஆன்ம ஞானம் சித்திக்காது என்றது.
பாடல் 95- கோவல சகல நிலைகள் தாக்காது அருள் வடிவாய் நிற்றலுக்கு உபாயம் இது என்றது.
பாடல் 96 - தத்துவங்களை தன்மேல் முட்டாக மூடிக்கொண்டு சமாதிகூடுவது சரியன்று என்றது.
(யோகக் கழற்றி அதிகாரத்தை எப்படி புரிந்துகொள்வது? என்பதன் விளக்கமும் இங்கு காண்க)
பாடல் 97- ஆதார மூர்த்திகள் தரிசனமும், விந்து நாத தரிசனமும் பொருளன்று என்றது.
பாடல் 98 - தற்போதத்தால் தியானிப்பதால் யோகிகளுக்கு பயன் இல்லை என்றது.
பாடல் 99 - கிரியா யோகத்தால் தவசி தன்னை கருவிகளில் மறைத்துக்கொள்வது கூடாது என்றது.
பாடல் 100- சிவத்தை அடைய அருளை முன்னிட்டு அதன்வழி ஆன்ம போதம் பின்னிட்டு செல்ல வேண்டும் என்றது.
பாடல் 101- சட யோகத்தால் அருள் நிலை தோன்றாது என்றது.
பாடல் 102 - சட யோகத்தால் மனாதிகளைக் கடந்த பூரணத்தை அடைய இயலாது என்றது.
பாடல் 103- மனாதிகளைக் அசையாது நிறுத்துவதால் மூடமாய் நிற்பதால் பயன் இல்லை என்றது.
பாடல் 104 - மனத்தையும் பிராணனையும் பிரம்மரந்திரத்தில் நிற்கச்செய்வது முத்தியன்று என்றது.
பாடல் 105 மனத்தை ஆன்மா தன் போதத்தால் அடக்க இயலாது என்றது.
பாடல் 106 - மனத்தை ஆன்மா தன் போதத்தால் ஒரு கணம் அடக்க இயலுமா? என வினவி, அன்று என மறுத்தது.
பாடல் 107 - திருவருளுக்கு இடமாக நம்மை நிறுத்தினால் கரண மயக்கங்கள் ஆன்மாவை பற்றாது என்று உபாயம் கூறியது.
பாடல் 108- கரணங்கள் அடக்க முயற்சித்தால் மேன்மேல் எழும் எனவே திருவருளுக்கு இடமாய் இருந்து அவற்றை அடக்கு என உபாயம் கூறியது.
பாடல் 109 - திருவருளை தனக்கு அன்னியமாய் எதிரிட்டு நோக்காது, அதுவே தானாய் அத்துவிதாமாய் பார்க்க அதன் நிறைவில் கருவி கரணங்கள் நீங்கும் என்றது.
பாடல் 110 - தற்போதத்தை திருவருள் போதத்தால் அடக்கினால் கருவி கரணங்கள் அடங்கும் என்றது.
பாடல் 111 - கருவிகளும் போதமும் கடந்த சுத்த நிலையில் நின்றால் ஆனந்த லாபம் உண்டு என்றது.
பாடல் 112 -தற்போதம் நீங்கிய நிலையில் ஆன்ம ஞானம் தோன்றும் என்றது.
பாடல் 113 - பிரபஞ்சம் முதலிய எல்லாவற்றையும் பகுத்து அறியாது திருவருள் வடிவாய் காண்க என்றது.
பாடல் 114- ஞானிகள் ஆன்மாக்களுக்கு அத்துவித உண்மையைக்காட்டிக் கொடுத்தாலும், அது பழக்கவசத்தால் துவித பாவனையில் நிற்கும், இது சரிஅன்று என்றது.
பாடல் 115 - ஆன்மபோதம் அசையாது அத்துவிதமாய் இறைவனை நோக்கு என்றது.
பாடல் 116 - ஞானயோகத்திற்கு உபாயம் இவைகள் என்றது.
பாடல் 117 கிரியை முதலான யோகத்தில் பழகுவோர் அந்த பழக்கத்தை நீக்கி ஞானயோகத்தில் பழகினால் சிவானுபவம் பெறலாம் என்றது.
பாடல் 118 - தற்போதம் நீக்கி அருள்வழி வருவோரை இறைவன் முழுவதும் தன்மயமாய் ஆக்கிக்கொள்வான் என்றது.
பாடல் 119 - நூலறிவினால் தான் பிரமம் என்போர்க்கு தற்போதம் நீங்காது என்றது.
பாடல் 120 - தியானத்தில் ஓர் உருவத்தை தியானித்தும் பிறகு அதைவிடுத்து வேறு உருவத்தை தியானிப்பது முதலிய செய்கைகளை ஞானபக்குவன் செய்யலாகாது என்றது.
பாடல் 121- அபக்குவராய் இருந்த தன்னை திருஞானசம்பந்தர் திருவடி தீட்ஷை அருளி என்னை உய்யக்கொண்டார் என்றது.

யோகக் கழற்றி – அதிகாரம் 3 – முற்றும்.கிரியைக் கழற்றி - – அதிகாரம் 4:

பாடல் 122 - கிரியையாளரைப் பார்த்து ஞானிகள் நடையை எடுத்துக்காட்டி, ஞான நிலையை பின்பற்றுக என்றது (அதிகார விளக்கம் முன்னுரை)
பாடல் 123 - கிரியையை நீக்கி ஞானம்பெற விரும்பும் சீடனின் தற்போதம் அடங்குமாறு உபதேசிக்கும் குருவே ஞானகுரு என்றது.
பாடல் 124 இறைவனின் தன்மைகளை அறிந்தும் அதை உணராது கிரியையில் செல்வோர்க்கு அறிவுறுத்தியது.
பாடல் 125- கிரியாகுரு உபதேசத்தால் ஆன்மலாபம் இல்லை என்றது.
பாடல் 126 - ஞானிகள் கிரியை முதலானவை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றது.
பாடல் 127 - கிரியை நீங்கி அதன் நிறைவில் தோன்றியதே ஞானம் அதனால் ஞானிகளுக்கு கிரியை செயதல் அவசியம் அன்று என்றது.
பாடல் 128 - கிரியை செய்யும் காலத்தில் தெய்வகதியாய் ஞானம் தோன்றினாலும் கிரியையின் மேலுள்ள பழக்கத்தால் தோன்றிய ஞானம் நிலைபெறாது மறையும் என்றது.
பாடல் 129 - கிரியை செய்யும் காலத்தில் கருவி கரணங்கள் அசைந்து தொழில் படுவதால் இவற்றை கடந்த இறை நிலையை இம்முறையை கொண்டு அடைய இயலாது என்றது.
பாடல் 130 - தொழில் ஒழிவில் நின்ற ஞானிகளைக் கண்டு அவர் போல் நிற்றி என்றது.
பாடல் 131 - கிரியையாளரின் செய்கைகள் ஞானிகளுக்கு பரிகாசமாய் தோன்றும் என்றது.
பாடல் 132- சாத்திர அறிவினால் ஞான நிலைக் கைகூடாது என்றது.
பாடல் 133 - அறிவையும் அருளையும் கடந்து நிற்கும் சிவத்தை தற்போதத்தால் செய்யும் கிரியைகளால் அடைய முடியாது என்றது.
பாடல் 134 - தற்போத ஒழிவை அடந்தவர்க்கே சிவஞானம் வாய்க்கும் என்றது.
பாடல் 135- தற்போத ஒழிவை பெறுவதற்கு உபாயம் இது என்றது.
பாடல் 136 - தற்போதம் சீவியாது அருளில் மறைந்து நிற்றற்கு உபாயம் இது என்றது.
பாடல் 137 - தற்போதத்தை சிவத்துக்கு கொடுத்து அந்த சிவத்தில் அசைவற நிற்றலே முத்திக்கு வழி என்றது.

கிரியைக் கழற்றி – அதிகாரம் 4 – முற்றும்.

சரியைக் கழற்றி - – அதிகாரம் 5:

பாடல் 138 - உண்மை முத்தியை பெறுவதற்கு சரியை முதலானவை சரியான வழியன்று என்றது.
பாடல் 139 - சரியை குருவின் உபதேசங்கள் முத்திப்பயன் தராது என்றது.
பாடல் 140- ஆன்மாக்கள் தங்களின் அற்ப சுதந்திரத்தால் முத்தி அடைய இயலாது என்றது.
பாடல் 141 - அகத்தில் ஞானமில்லாமல் தவசிபோல் புறவேஷம் கட்டுவதால் பயன் இல்லை என்றது.
பாடல் 142 - ஞான நிட்டை கைகூடாதவர் ஞானியைப்போல் வெளியில் நடிப்பதெல்லாம் மாயையின் மயக்கம் என்றது.
பாடல் 143 - அகத்தில் ஞானமில்லாமல் ஞானியைப்போல் வெளியில் நடிப்பவர்க்கு அவ்வேடத்தால் உலக இன்பம் கிடைக்குமே அன்றி முத்தி இன்பம் கைகூடாது என்றது.
பாடல் 144 - பிறவிப்பித்துன்பம் பொறாமல் ஞானத்தில் விருப்பம் கொண்ட மாணாக்கனுக்கு ஞான ஆச்சாரியர் கூறுவது இது என்றது.
பாடல் 145 பேரின்பம் ஆன்மாவை விட்டு நீங்காது, அதனைப் பெறுவதற்கு உபாயம் இவை என்றது.
பாடல் - 147 - தற்போத நீக்கத்தை பெற்ற நிலையே பேரின்பம் தோன்றும் இடம் என்றது.
பாடல் - 148 - கருவிகளை உள்ளபடி அருளால் அறிந்து அருள்மயமாய் இருந்தால் அவற்றினால் மயக்கம் உண்டாகாது என்றது.
பாடல் - 149 - திருவருளைப் பெறுவதற்க்கு உடலை நீக்க வேண்டும் என்னும் அவசியம் இல்லை என்றது.
பாடல் - 150- சிவாத்வைதம் அடைந்தவர்க்கு வேதாந்த சித்தாந்த முத்தி என்கின்ற பேதம் இல்லை என்றது.
பாடல் - 151 - தற்போதம் அற்று, கருவி கரணம் நீங்கி சும்மா இருந்தால் முத்தி நிச்சயம் என்று ஞானசம்பந்தப் பெருமான் உபதேசித்தது.

சரியைக் கழற்றி - – அதிகாரம் 5 முற்றும்.

விரத்திவிளக்கம் - அதிகாரம் 6:

பாடல் - 152 - ஆன்மாக்கள் சார்ந்ததின் வண்ணமாகும் தன்மையது என்று ஞானசம்பந்தப் பெருமான் உபதேசித்தது. (ஒழிவிலொடுக்கத்தின் 6ஆம் அதிகாரம் விரத்திவிளக்கம் ஆகும், இதன் அதிகார விளக்கமும் இங்கு காண்க.)
பாடல் - 153 - உண்மைத் துறவியரை ஆறுவகைச் சமயத்தாரும் போற்றி அங்கீகரிப்பர் என்றது (திருக்குறளின் அதிகாரம் காட்டல்)
பாடல் - 154 - தேகம், உணவு முதலிய விடய இச்சையை நீக்கியோர்க்கே இன்னூல் பயன் தரும் என்றது. (நூலும், அதிகாரப் பயனும் இது)
பாடல் - 155- பாசங்களாகிய மும்மலம் நீங்கினால் ஆன்மாவிற்கு இடம் இறைநிலை என்றது.
பாடல் - 156 - கருவி கரணங்களை தான் (ஆன்மா) அன்று என உணர்ந்தால் திருவருள் தோன்றும் என்றது.
பாடல் - 157- ஆன்மாக்களின் சொரூப, ரூப, சுபாவங்கள் இவை என்றது.
பாடல் - 158- பதியின் (இறைவனின்) சொரூப, ரூப, சுபாவங்கள் இவை என்றது.
பாடல் - 159 - சுத்தத் துறவியரின் இலக்கணம் இது என்றது.
பாடல் - 160- சுத்தத் துறவியர்கள் உலகவாதனையால் தாக்கப்படார்கள் என்றது.
பாடல் - 161- ஆன்மாக்கள் சத்து விசாரம் செய்து உண்மை விளக்கம் பெறவேண்டும் என்றது.
பாடல் - 162 - கருவி கரணங்களின் உண்மையை விசாரித்து அறிந்தபின் உலகவாதனைக் காட்சி மாத்திரமாய் தோன்றும் என்றது.
பாடல் - 163- கருவி கரணங்களின் உண்மையை விசாரித்து அறிந்த தெளிவே ஞானம் என்றது.
பாடல் - 164 - வாசக ஞானிகளியும் அனுபவ ஞானிகளியும் உள்ளபடி உணர உபாயம் இது என்றது.

விரத்திவிளக்கம் - அதிகாரம் 6 முற்றும்.

துறவு:

பாடல் - 165 - உண்மைத் துறவியர்களுக்கு உலக உறவுகள் பொய்யாத் தோன்றும் என்றது.
(துறவு அதிகாரம் விளக்கமும் இங்கு காண்க.)
பாடல் - 166 - அரி பிரமாதியர் வாழ்வும் அநித்தியம் என்றது.
பாடல் - 167 - பட்டினத்தார், பத்திரக்கிரியார் துறவின் சிறப்பு இது என்றது.
பாடல் - 168 - போகப்பற்றையும் தேகப்பற்றையும் நீக்கி ஞானத்தில் நிற்போர்க்கே இனி பிறப்பில்லை என்றது.
பாடல் - 169 - உண்மைத் துறவியருக்கு பொருளாசை கூடாது என்றது
பாடல் - 170 - செல்வம், இளமை, உடம்பு ஆகியவற்றின் நிலையாமையை உணர்ந்து தற்போதம் நீக்குவதே உண்மைத் துறவு என்றது.
பாடல் - 171 - நிராசையே பேரின்பம் பெற வழி என்றது.
பாடல் - 172 - தற்போத நீக்கமே உண்மைத்துறவின் நிலை என்றது.
பாடல் - 173 - தற்போதம் அகன்ற ஞானியர்களுக்கு ஐம்புலன்களால் வரும் துன்பம் இல்லை என்றது.
பாடல் - 174 - தனு கரண புவன போகங்களில் பற்றின்றி இருக்க வேண்டும் என்றது.
பாடல் - 175- துறவு நெறியில் தலைப்படுவோர்க்கு தேகாதி இச்சைகள் ஆகாது என்றது.
பாடல் - 176- ஆணவமல நீக்கமே உண்மைத் துறவின் இலக்கு என்றது.
பாடல் - 177 - உத்தம பக்குவர்க்கு குடும்ப வாதனைக் கூடாது என்றது.
பாடல் - 178 - அனித்திய விவேகம் வருவதே துறவுக்கு முதல் நிலை என்றது.
பாடல் - 179- அனித்திய விவேகம் வந்த பக்குவர்கள் இங்ஙனம் துறவை நாடுவார்கள் என்றது.
பாடல் -180 - அனித்திய விவேகம் வந்த பக்குவர்கள் விரைந்து துறவை நாடுவார்கள் என்றது.
பாடல் - 181 - உத்தமத் துறவியர் சுட்டறிவு நீங்கி என்றும் அருள்போதத்தில் இருப்பார்கள் என்றது.
பாடல் - 182 - உத்தமத் துறவியரின் அறிவு இச்சை செயல்கள் இவை என்றது.
பாடல் - 183 - உத்தமத் துறவியர் தேக உணர்வின்றி அருள் உணர்வில் இருப்பார்கள் என்றது.
பாடல் - 184 - உத்தமத் துறவியர் இத்தேகத்தில் இருப்பினும் அவர்களை அது கருதி பிரபஞ்சிகளைப்போல் எண்ணுதல் கூடாது என்றது.
பாடல் - 185 - உத்தமத் துறவியர்கள் பிரபஞ்சிகளின் உபசாரங்களை விரும்பார்கள் என்றது.
பாடல் - 186 - உத்தமத் துறவியர்கள் இத்தேகத்தையே மிகை எனக் கருதுவார்கள் என்றது.
பாடல் - 187 - உத்தமத் துறவியர்களின் பிறப்பு முத்திக்குரியது என்றது.
பாடல் - 188 - உத்தமத் துறவியர்களுர்களுக்கு பற்றற்ற தன்மையே பெருமை என்றது.
பாடல் 189 உண்மைத் துறவிகளின் சரியை, கிரியை, யோகம், ஞானம் இவை என்றது.

துறவு - - அதிகாரம் 7 முற்றும்.

அருளவத்தைத் தன்மை:

பாடல் - 190 - திருவருள் உதயமாகிய காலத்தில் உலகபோகங்கள் பொய்யாத் தோன்றும் என்றது.
பாடல் - 191 - பக்குவத்தார் திருவருளை இங்ஙனம் வேண்டி நிற்பார் என்றது.
பாடல் - 192- சுத்தாவத்தையில் நிற்போரின் தன்மைகள் இவை என்றது.
பாடல் - 193 - சுத்தாவத்தையில் நிற்போர்க்கு முத்தி அனுபவங்கள் இவை என்றது.
பாடல் -194 - கருவிகள் நீக்கியவிடத்து வருங்குணமும், தன்னை அறிந்தவிடத்து வருங் குணமும், திருவருள் தோன்றியவுடத்து வரும் குணமும், ஆநந்தந் தோன்றிய இடத்து வரும் குணமும் இவைகள் என்றது.
பாடல் - 195 - கருவிகள் பொய்யென்று அறிந்த விடத்து வருங்குணமும், திருவருள் உதித்த இடத்து வரும் குணமும் இவைகள் என்றது.
பாடல் - 196 - திருவருள் உதித்த நாளில் வரும் குணங்கள் இவைகள் என்றது.
பாடல் - 197 - திருவருளைப் பெறாது வீண்கழித்த காலத்தை நினைத்து பக்குவர்கள் இங்ஙனம் வருந்துவார்கள் என்றது.
பாடல் - 198 - அருள் மேலீட்டை உடையோர்க்கு பிறப்புக்கள் இல்லை என்றது.
பாடல் - 199 - அருள் மேலிட்ட போது ஞானிகளின் குணம் இவ்வாறு இருக்கும் என்றது.
பாடல் - 200 - அருள் மேலிட்ட போது ஞானிகளுக்கு ஆடலும் பாடலும் உண்டாகும் என்றது.
பாடல் - 201 - திருவருளைப் பெற்ற ஞானிகள் அருள் நிலையில் நிலைத்து நிற்பார்கள் என்றது.
பாடல் - 202 - திருவருளைப் பெற்ற ஞானிகள் நிருவிகாரிகளாய் இருந்து ஆடுவர் படுவர் என்றது.
பாடல் - 203 - பொய்த்துறவிகளின் உள்ளத்தை இறைவனே அறிவான் என்றது.
பாடல் - 204 - ஞானிகள் நகைப்பதும், ஆனந்தப்படுவதும் இவைகளுக்கு என்றது.
பாடல் - 205- ஞானிகள் பொய் உலக ஆசாரங்களைக் கண்டு நகைப்பார்கள் என்றது.
பாடல் - 206- ஜீவன் முத்தர்கள் மற்றும் பரமுத்தர்களின் நிலை இவ்வாறு என்றது.
பாடல் - 207- உலகத்தார் பழிச்சொல் ஞானிகளைப் பற்றாது என்றது.
பாடல் - 208- உலகியலாரும், சரியாதி மார்க்கத்தாரும் ஞானிகளின் பெருமையை உணரமாட்டார்கள் என்றது.
பாடல் - 209 - ஞானிகளின் உண்மைத்தன்மையை இந்திரன் முதலிய தேவர்கள் அறிந்து பணி செய்வார்கள் என்றது.
பாடல் - 210 - ஞானிகளுக்கு தேசம், இடம், குறியீடு முதலியவை இல்லை என்றது.
211 - ஞானிகளுக்கு குணமாறுபாடும், விரும்பிச்செல்லும் ஊரும் தவிர்க்கும் ஊரும் இல்லை என்றது.
பாடல் - 212 - ஞானிகளுக்கு எவ்விடமும் ஒன்றே என்றது.
பாடல் - 213 - ஞானிகளுக்கு தற்போதம் அற்ற இடமே கருத்து என்றது.
பாடல் - 214 - ஞானிகளுக்கு சமயம் மதம் முதலியவைகள் இல்லை என்றது.
பாடல் - 215 - ஞானிகளின் நடை உலகர் மற்றும் சமயிகள் நடையோடு பொருந்தாது என்றது.
பாடல் - 216 - ஞானிகளின் பெருமையை முழுவதும் கற்றுணர்ந்த பண்டிதராலும் அறிய இயலாது என்றது.
பாடல் - 217 - ஞானிகளுக்கு அருள் பெற்ற காலத்தில் தோன்றும் குணமும், அதை உணராத உலகத்தார் செயலும் இவை என்றது.
பாடல் - 218 - இல்லற ஞானிகளின் (குடும்ப வாழ்வில் இருந்துகொண்டே ஞானம் அடைந்தவர்கள்) தன்மைகள் இவை என்றது.
பாடல் - 219 - பெரும் சுகபேகம் உடையோராயினும் அதன்மீது பற்றின்றி இல்லற ஞானிகள் இருப்பர் என்றது.
பாடல் - 220- ஞானிகளுக்கு வினை உடல் ஊழாய் நீங்கும் என்றது.
பாடல் - 221- ஞானிகளுக்கு உண்டாகும் ஆகாமிய கர்மம் அவர்களுக்கு தொண்டு செய்வோர்பால் ஏகும் என்றது.
பாடல் - 222- ஞானிகளுக்கு நிகரான பேரின்பம் அடைபவர் யாரும் இல்லை என்றது.
பாடல் - 224- ஞானிகளுக்கு ஆச்சாரமாதி நியமங்கள் இல்லை என்றது.
பாடல் - 225- ஞானிகளுக்கு விதிவிருத்தங்கள் இல்லை என்றது.
பாடல் - 226 - ஞானிகளை ஞானிகள் விரும்புவார்கள் என்றது.
பாடல் - 227 - ஞானிகளின் திருமேனி அழகு இது என்றது.
பாடல் - 228 - ஞானிகளின் திருமேனி அழகு தன் கருத்தை விட்டு நீங்காது என்றது.
பாடல் - 229 - ஞானிகளுக்கு இவையெல்லாம் திருப்பெயர்கள் என்றது.
பாடல் - 230 - ஞானிகளின் இருவேறு வகை என்றது.
பாடல் - 231 - துறவு நெறியை கைக்கொண்டோர் அந்த நிலையில் வழிவாமல் நிற்க வேண்டும் என்றது.

அருளவத்தைத் தன்மை - அதிகாரம் 8 முற்றும்.

வாதனை மாண்டார் தன்மை:

பாடல் - 232 - தற்போத இழப்பே ஞானம் பெற வழி என்றது.
பாடல் - 233- தற்போத இழந்த இல்லறத்தாரும் பிறப்பை நீக்கலாம் என்றது.
பாடல் - 234 - உண்மைத்துறவு என்பது இது என்றது.
பாடல் - 235 - பற்று அற்றார்க்கே பிறப்பறும் என்றது.
பாடல் - 236 - இல்லற ஞானிகள் பிரபஞ்ச போகத்தை அனுபவித்தாலும் அதில் பற்றின்றி இருப்பார்கள் என்றது.
பாடல் - 237 - இல்லற ஞானிகள் எப்போதும் பாசங்கள் தம்மிடம் பற்றாது இருப்பர் என்றது.
பாடல் - 238- இல்லற ஞானிகள் மீண்டும் பிறப்பில்லை என்றது.
பாடல் - 239 - இல்லற ஞானிகள் எச்செயல்களிலும் திருவருள் சிந்தையினராய் இருப்பார்கள் என்றது.
பாடல் - 240 - இல்லறத்தில் இருந்து முத்தி, சித்தி பெற்றோர்கள் இன்னார் என்றது.

வாதனை மாண்டார் தன்மை - - அதிகாரம் 9 முற்றும்.

நிலை இயல்பு:

பாடல் - 241 - கருவி கரணங்களை திருவருள் போதத்தால் அடக்க வேண்டும் என்றது.
பாடல் - 242 - ஆன்மபோதம் ஜீவியாது அருட்போதத்தை நாடி நின்றால் அருளை அறியலாம் என்றது.
பாடல் - 243 - ஆன்மபோதத்தால் கேவல, சகலங்களை நீக்க இயலாது என்றது.
பாடல் - 244- அருட்போதரானேரின் தன்மை இது என்றது.
பாடல் - 245 - சிவாத்வைதம் பெற அனுபவப் படிகள் இவைகள் என்றது.
பாடல் - 246 - அறிவு அருளோடு கூடி இருக்க வேண்டும் என்றது.
பாடல் - 247 - துறவு நெறி அடையும் முன் ஏற்படும் அனுபவம் இவை என்றது.
பாடல் - 248 - எந்நிலை சிவயோகம் என்று கூறியது
பாடல் - 249 - சச்சிதானந்த நிலை இது என்றது
பாடல் – 250 - பஞ்சமலங்கள் நீங்க உபாயம் இது என்றது
பாடல் – 251- சலக கேவலங்களில் இருந்து சத்குரு சீடனை மீட்டு சுத்தத்தில் வைப்பார் என்றது.
பாடல் - 252 - ஒழிவிலொடுக்கம் கூறும் வழியே உண்மை முத்திக்கு உபாயம் என்றது
பாடல் - 253 - திருஞானசம்பந்தப் பெருமானைத் தான் என்றும் துதித்து வழிபடுவேன் என்றது .

நிலை இயல்பு -- அதிகாரம் 10 முற்றிற்று.

ஒழிவிலொடுக்கம் முற்றிற்று.

இராமலிங்காய நம: இராமலிங்காய நம: இராமலிங்காய நம: