அழைப்புகள், அறிவிப்புகள், கட்டளைகள்

neurontin 100mg capsule அழைப்புகள், அறிவிப்புகள், கட்டளைகள்:

http://restginhisshadow.com/compassion/ அழைப்புகளும் அறிவிப்புகளும் கட்டளைகளுமாகக் கிடைத்துள்ளவை 18. இவை அடிகள் வடலூரிலும் மேட்டுக்குப்பத்திலும் எழுந்தருளியிருந்த காலத்தில் (வடலூரில் சத்திய தருமசாலை தொடங்கிய 1867 முதல் மேட்டுக்குப்பம் சித்திவளாகத்தில் சித்தி பெற்ற 1874 வரை எட்டாண்டுகளில்) அருளப் பெற்றவை. அடிகள் நிறுவிய ருளிய சன்மார்க்க சங்கம், சத்தியதருமசாலை, சத்திய ஞான சபை, சித்திவளாகம் ஆகிய நான்கு சன்மார்க்க நிலையங்களைக் குறித்தும் நிறுவத்திட்டமிட்டிருந்த மற்றும் சில நிலையங்களைக் குறித்தும் இவை அருளப் பெற்றனவாகலின், நிலையங்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் கொள்கை விளக்கங்கள் பற்பல இவற்றால் தெளிவாக அறியப்பெறுகின்றன. இவற்றுள் ‘சபை விளம்பரம்’ ஒன்று மட்டும் ‘அற்புதப் பத்திரிகை’ என்ற தலைப்புடன் 1885-ஆறாம் திருமுறை முதற்பதிப்பில் வெளியாயிற்று. ஏனைய பதினேழும் பாலகிருஷ்ண பிள்ளை பதிப்பில்தான் முதன் முதலாக அச்சாயின. இவற்றைப் பத்திரிகைகள், கட்டளைகள் என இருவகையாகப் பிரித்துப் பத்திரிகைகள் என்ற தலைப்பின் கீழ் ஐந்தையும் கட்டளைகள் என்ற தலைப்பின் கீழ் பத்தையும் காலவரிசைப்படி ஆ.பா. அமைத்திருக்கிறார். யாம் பதினெட்டையுமே ஒரு தொகுதியாக்கிக் காலவரிசைப்படி அமைத்துள்ளோம்.

follow 1. சாலைத் தொடக்கவிழா அழைப்பு

(1) இது துறவிகளுக்கு அடிகளின் பெயரில் அனுப்பிய திருமுகம். “ஓர் அன்பரின் கையெழுத்துப் பிரதியில் இவ்வளவே காண்கிறது” என ஆ.பா குறித்துள்ளார்.
(2) இது சங்கத்தார் பெயரால் மற்ற அன்பர்களுக்கு அனுப்பப் பெற்ற அழைப்பிதழ். அச்சிடப் பெற்றும் உள்ளது. “அச்சுப் பத்திரிகையில் மாதமும் தேதியும் கையொப்பமும் இல்லை. ஓர் அன்பரது கையெழுத்துப் பிரதியில் இதில் கண்ட மாத தேதித் தகவலும் கையொப்பமும் இருக்கின்றன. ஆனால் அதில் ‘ருஷப லக்கினத்தில்’ என்பதற்குப் பதிலாக ‘சிங்க லக்கினத்தில்’ என்று இருக்கிறது. என்பது ஆ.பா. குறிப்பு.

trazodone 50 mg tablet picture 2. சாலை விளம்பரம்
இது சத்திய தருமசாலைத் தொடக்க நாளில் வெளியிடப் பெற்ற அறிவிப்பு. கூடலூர் துரைசாமி என்பவர் அடிகளுக்கு எழுதிய கடிதத்தில் ‘நோட்டிசு ஆயிரங் காப்பி தயாராகின்றது. அதில் புருபு காப்பி வொன்று சமுகத்துக்கு அனுப்பியிருக்குது’ என்று குறிப்பிடும் நோட்டீஸ் இதுவாகவும் இருக்கலாம்.

3. கிளைச் சாலைகள்
இச் சிறுகுறிப்பு, இவ்வளவே, சாலைத் தொடக்க விழா அச்சிட்ட அழைப்பிதழைப் பிரதிசெய்து வைத்துள்ள மேற்குறிப்பிட்ட அன்பரால் அப்பிரதியின் பின்பக்கத்திலேயே எழுதப்பெற் றுள்ளதென்று ஆ.பா. குறிப்பிடுகிறார்.

4. சன்மார்க்க விவேக விருத்தி
இதில் தேதிக் குறிப்பு ஒன்றும் இல்லை என்றும் இதன்கண்ணுள்ள 49 வகைப்பட்ட எண் ஊர்ப்பேர் கையொப்பம் தொகை முதலியனவெல்லாம் அடிகள் உட்பட அவரவர்கள் கையெழுத்திலேயே இருக்கின்றன வென்றும் ஆ.பா. கூறுகின்றார். தொடங்கியதோடே நின்று போயிருந்த இச் சன்மார்க்க விவேக விருத்தி – திங்களிதழை 1969 முதல் யாம் நடத்தி வருகிறோம்.

5. சன்மார்க்க போதினி
“இவ்வளவே, முன்னுள்ள ஏடு கிழிபட்டும் இடையிலும் பின்னுமுள்ளவை எழுதப்படாமலும் ஓர் அன்பர் கையெழுத்தில் இருக்கிறது” என்று ஆ.பா குறிக்கிறார். இவ்வறிவிப்பு அரையும் குறையுமாகக் கிடைத்துள்ளதெனினும் இதன்மூலம் அருமையான செய்திகள் தெரிகின்றன. சன்மார்க்க போதினி தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளைப் போதிக்கும் மும்மொழிப் பாடசாலை. சிறுவர்க்கு மட்டுமின்றி முதியோர்க்கும் போதிக்கும் பாடசாலை. தமிழ்நாட்டில் முதியோர் கல்வியை முதன் முதலில் ஏற்படுத்தியவர் அடிகளே.

6. சன்மார்க்க சங்கம் விளங்கும் காலம்
“ஷடாந்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான தருமச்சாலையில் பிரமோதூத வருடம் சித்திரை மாதம் 16ஆம் நாள் புதவாரம் சுமார் பகல் 6 மணி நேரத்தில் வேலூர் ஆனந்த நாத ஷண்முக சரணாலய சுவாமிகள் பெருமானிடத்தில் சாதலைக் குறித்து விண்ணப்பித்த தருணத்தில் பெருமான் திருக்கரத்தால் எழுதித் தந்த பிரதம பத்திரிகை” என்று இதன் வரலாறு ஓர் பிரதியில் காண்கிறது என ஆ.பா குறித்துள்ளார்.

7. அன்பர்களுக்கு இட்ட சாலைக் கட்டளை
“இது பிரமோதூத வருடம் அற்பிசி மாதம் 11ஆம் நாள் சாலையிலுள்ளார்க்குப் பெருமான் மேட்டுக்குப்பமென்னும் சித்திவளாகத்திலிருந்து எழுதிய திருக்குறிப்பு” என்று ஒரு பிரதியிலும், “இது பிரமோதூத வருடம் ஐப்பசி மாதம் 11ஆம் நாள் சாலை நடத்தி வந்த புதுவை சதாசிவ செட்டியாருக்குப் பெருமான் திருக்கரத்தால் வரைந்தனுப்பியது” என்று மற்றொரு பிரதியிலும் இதன் வரலாறு காணப்படுகிறது என ஆ.பா. குறிப்பிடுகிறார்.

8. சாலை சம்பந்திகளுக்கு இட்ட சமாதிக் கட்டளை

இக்கட்டளைக்கு ஆ.பா. அடிக்குறிப்பு வருமாறு.
“பிரமோதூத வருடம் பங்குனி மாதம் 18ஆம் நாள் சாலை சம்பந்திகளுக்குப் பெருமான் மேல் விளையப் போகின்ற அற்புத விளக்கங்களின் திருக்குறிப்பைச் சாலை சம்பந்த முடையவர் வழிபட்டு உண்மை லாபத்தைப் பெற்று உய்யும் பொருட்டு தயவோடு சுயஹஸ்தலிகிதமாய் வெளிப்படுத்திய அற்புத மஹாபத்திரிகை” என்று இத் திருமுக வரலாறும், இத் திருமுகம் அனுப்பப்பட்ட அன்பர்க்கு ஓர் விசேஷக் குறிப்பாக “இந்தப் பத்திரிகையைச் சாலை சம்பந்திகள் தவிர மற்றவர்களுக்குக் காட்டொணாது. பணத்தாலாயினும் தேகத்தாலாயினும் உழைப்பெடுத்துக்கொண்டு உண்மை நம்பிக்கையுடன் இருக்கின்றவர்கள் விஷயத்தில் காட்டத் தடையில்லை. நான் சாலைக்கு வந்தவுடன் தெரிவிக்கின்றேன். அப்போது வரலாம், பெருங்களிப்பையடைவீர்கள். உண்மையுடனிருங்கள்” என்று மேல் கொண்டு எழுதப்பட்டிருப்பதும் ஓர் பிரதியில் காணப்படுகின்றன. இங்கு அச்சிட்டிருக்கும் இவ்வற்புத மஹாபத்திரிகை சுவாமிகள் திருவடிகளுக்கு மீளா ஆளெனத் தொண்டு பூண்ட பேரன்பர் சிலர்க்கே சுவாமிகள் சாலையை விட்டுத் தனித்து வேறிடத்திருந்த போது அருளிச் செய்யப்பட்டு, ஆவரவர்களாலும் அவரவர்க்குப்பின் அந்த அந்தக் குடும்பத்தினராலும் சன்மார்க்கப் பரம ரகசியம் ஒன்றாக இதுகாறும் போற்றி வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. கொஞ்ச நாளைக்குமுன் இஃது ஓர் துண்டுப் பிரசுரமாக வழங்கப்பட்டதாதலினாலும், பெரும்பாலும் சன்மார்க்க சாதகர்க்காகவே இப்பதிப்பு அச்சிட்டு வருவதாலும் ஓர் மெய்யன்பர் கையெழுத்தில் உள்ளபடி அச்சிடுவது ஒருவாறு அமையும் என்று கருதி இதை இங்கு சேர்த்திருக்கிறது. திருவருட்பிரகாச வள்ளலார் திருவடி வாழ்க. (ஆ.பா. அடிக்குறிப்பு)

ஓர் மெய்யன்பர் கையெழுத்தில் உள்ளபடி இக் கட்டளையை ஆ.பா. அச்சிட்டிருக்கிறார். அம் மெய்யன்பர் அடிகள் சுயஹஸ்த லிகிதமாய் எழுதியருளிய மூலத்திலிருந்து பிரதி செய்து வைத்திருக்கிறார்.
யாம் இக்கட்டளையின் மூன்று பிரதிகளைப் பார்த்திருக்கிறோம்.

1. அடிகளின் திருக்கரத்தால் எழுதியருளப் பெற்ற மூலப்பிரதி (original). 40 பக்க நோட்டு அளவுக் காகிதம் நான்கு பக்கங்கள். மூன்று பக்கங்களில் கட்டளை. நான்காம் பக்கம் எதுவும் எழுதப்படாத வெறும் பக்கம். அடிகள் கையெழுத்து. அடிகள் கையொப்பம். இந்த ஒரிஜினல் ஆள் மூலமாக ஆடூர் சபாபதி சிவாசாரியர்க்கு ஒரு உறையில் (கவரில்) வைத்து அனுப்பப் பெற்றது. உறையின் ஒரு பக்கம் ‘தென்னார்க்காடு ஜில்லா சிதம்பரம் தாலுக்கா ஆடூரில் பிரம்ம ஸ்ரீ ஆ. சபாபதி சிவாசாரிய சுவாமிகளுக்கு. பார்வதிபுரத்தி லிருந்து வருவது’ என்றும் ‘பிரமோதூத வருடம் பங்குனி மாதம் 19-பகல் 5 மணிக்கு கூடலூர் அப்பாசாமி செட்டியார் காரியஸ்தன் அயில் செட்டியார் மூலமாய் வந்தது’ என்றும் வேறு கையெழுத்தில் காணப்படுகிறது.

2. வேறு ஒருவரால் எழுதப்பெற்று அடிகளால் கையொப்பமிடப் பெற்று இறுக்கம் இரத்தின முதலியார்க்கு அவரது சென்னை முகவரிக்குத் தபாலில் சென்றது. வேறு ஒருவரால் எழுதப்பட்டு, அடிகளால் கையொப்பமிடப்பட்டிருக்கும் இதில் கையொப்பத்தைத் தொடர்ந்து வேறு சில செய்திகள் சில வரிகளில் அடிகளால் இறுக்கம் இரத்தின முதலியார்க்கு எழுதப் பட்டுள்ளன. இது கவரில் வைத்துத் தபாலிற் சென்றிருக்கிறது.

3. வேறு ஒருவரால் எழுதப்பெற்று அடிகளால் கையொப்பமிடப் பெற்றுப் பரமானந்த பிள்ளைக்கு அனுப்பப் பெற்றது. ராஜராஜ பரமானந்த பிள்ளையவர்கட்கு என்று தொடங்குகிறது. இஃது மகா ராஜராஜ ஸ்ரீ பிள்ளை அவர்கள் பரமானந்த பிள்ளை அவர்களுக்கு கொடுப்பது என்று 4ஆம் பக்கம் முகவரி எழுதப்பட்டுள்ளது.
சபாபதி சிவாசாரியருக்குச் சென்ற ஒரிஜினலில் காலக்குறிப்பு எதுவும் இல்லை. இ.இ.க்குச் சென்றதில் நான்காவது பக்கத்திலும் கவரிலும் வருடம் மாதம் உ இருக்கிறது. பரமானந்த பிள்ளைக்குச் சென்றதில் வருடமும் மாதமும் இருக்கிறது; தேதி இல்லை. பாலகிருஷ்ண பிள்ளை கொண்டுள்ள அன்பர் படியிற் காணப்படும் விசேடக் குறிப்பு இம்மூன்றில் ஒன்றிலுமே இல்லை.

அடிகளின் இக்கட்டளை ஒரு சுற்றறிக்கையாகச் சாலை சம்பந்திகள் (சாலைக்குச் சம்பந்தமுடையவர்கள்) பலருக்கும் அனுப்பப்பட்டதெனத் தெரிகிறது. அடிகளால் எழுதப் பெற்ற மூலம் ஒன்று. அதை அன்பர்கள் படிசெய்து அடிகளிடம் கையொப்பம் பெற்றுப் பலர்க்கு அனுப்பப் பெற்றுள்ளது. விசேஷக் குறிப்பைக் கொண்டது யாருக்குச் சென்றதென்று தெரியவில்லை. இது போல் ரகசியம் என்று அடிகளாற் குறிக்கப் பெற்ற வேறு சிலவும் உள. விசேடக் குறிப்பைக் கண்ட ஆ.பா எவ்வளவு அச்சத்தோடு இக்கட்டளையைப் பதிப்பித்திருக்கிறார் என்பது அவரது அடிக்குறிப்பாற் புலப்படுகிறது.

9. சன்மார்க்கப் பெரும்பதி வருகை

“ஷடாந்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சங்க சாதுக்களில் சிறந்த ஆனந்த நாத சண்முக சரணாலய சுவாமிகள் சந்நிதானத்திற் காலஹரண ஹேதுவைப் பற்றி விசாரிக்குங் காலத்தில் பத்திரிகை மூலமாய் தெரிவித்த சரிதம்” என்று இதன் வரலாறு ஒரு பிரதியில் குறித்திருக்கிறதென்பது ஆ.பா. குறிப்பு.

10. சமரச வேத பாடசாலை
இஃது மேட்டுக்குப்ப மென்னும் சித்திவளாகச் சந்நிதானத்தில் வெளியிட்ட பத்திரிகை என்பது ஓர் பிரதியிலுள்ள குறிப்பு என்று ஆ.பா. குறித்துள்ளார்.

11. சபை விளம்பரம்
ஞானசபையைப் பற்றிய இவ் வறிவிப்பு ஆறாத் திருமுறை முதற் பதிப்பில், ‘அற்புதப் பத்திரிகை’ என்ற தலைப்புடனும், இறுதியில் ‘சென்னபட்டணம் இராஜதானியைச் சார்ந்த கூடலூர் ஜில்லா மேற்படி தாலுகா பார்வதிபுரம் அல்லது வடலூர், ஸ்ரீமுக வருடம் தை மாதம் 19ஆம் நாள் சுக்கிரவாரம்’ என்ற இட, காலக்குறிப்புகளுடனும் காணப்படுகிறது. கையொப்பம் எதுவும் இல்லை. பொ.சு. பதிப்பிலும், ச.மு.க. பதிப்பிலும் ‘அறுபுதப் பத்திரிகை’ என்பதே தலைப்பு. ஆயின் இட, காலக் குறிப்புகள் இல்லை. ஆ.பா. பதிப்பில் ‘இங்ஙனம் சிதம்பரம் இராமலிங்க பிள்ளை’ என்று கையொப்பம் காணப்படுகிறது. அடியிற் குறித்த தருணந் தொடங்கி என அறிவிப்பிலேயே கூறப்படினும் இதனடியில் காலம் எதுவும் குறிப்பிடப்படவில்லை “வேறொருவரால் எழுதப்பட்டு சுவாமிகள் கையெழுத்திட்டிருக்கும் இதன் மூலத்தில் இந்தத் தருணத்தின் விபரம் எதுவும் குறிக்கப்பட்டிருக்கவில்லை. “மேற்படி பத்திரிகை பல பாஷையிலும் அச்சிட்டிருப்பதை அற்புதம் விளங்குங் காலத்தில் தினங் குறித்து மேற்படி பத்திரிகையைப் பிரசுரஞ் செய்யப்படும்’ என்று ஓர் அன்பர் பிரதியிலுள்ள குறிப்பையும், கிடைத்த பழந்துண்டு ஒன்றில் தேதி வரிசையாக விஷயங்களைக் குறித்திருப்பதில் இதைச் சுவாமிகள் திருக்காப்பிட்டுக் கொண்ட தேதியாகிய ஸ்ரீமுகவருடம் தை மாதம் 19 ஆம் நாளுக்கு எதிராகக் குறித்திருப்பதையும் கருதி இந்நாட் குறிப்பை ஒருவாறு உய்த்துணர்க” என்று ஆ.பா. அடிக்குறிப்பெழுதுகிறார்.

பலவகையாலும் ஆராயுமிடத்து இவ்வறிவிப்பின் காலம் அடிகள் சித்திபெற்ற நாளாகிய ஸ்ரீமுக தை 19 (30-1-1874) என்பது பொருத்தமாகத் தோன்றவில்லை. சத்தியஞானசபையின் தொடக்க நாளாகிய (சபையில் முதன் முதலாக வழிபாடு தொடங்கிய நாளாகிய) 25 – 1 – 1872 பிரஜோத்பத்தி தை 13 வியாழன் பூசநாள் என்பதே பொருத்தமாம்.

12. சாலையிலுள்ளார்க்கு இட்ட ஒழுக்கக் கட்டளை

தருமசாலையில் இருந்தவர்களைக் கண்டித்து அடிகள் மேட்டுக் குப்பத்திலிருந்து விடுத்த கண்டனக் குறிப்பு.

13. சன்மார்க்கப் பிரார்த்தனை

அடிகளுக்கு ஆட்பட்ட அன்பர்களுள் கல்பட்டு இராமலிங்க சுவாமிகளும் ஒருவர். இப்பிரார்த்தனை அவருக்காக அடிகளே எழுதித் தந்ததாகும். “இந்த விண்ணப்பம் கல்பட்டு சுவாமிகளுக்காகச் சந்நிதானமே எழுதி வைத்தது” என்று ஓர் பிரதியில் இத்திருமுக வரலாறு காணப்படுகிறது’ என்பது ஆ.பா. குறிப்பு.
யாம் பார்த்த ஒருபிரதி பூல்ஸ்கேப் 1/2 பேப்பரில் ஒரு பக்கம் வேறு ஒருவர் கையெழுத்தில் எழுதிக் கல்பட்டு இராமலிங்க சுவாமிகள் கையொப்பமிட்டது.

14. சபை வழிபாட்டு விதி

ஞானசபை வழிபாடு தம் கொள்கைப்படிச் செவ்வையாக நடைபெறாததை அறிந்த அடிகள் ஞான சபை வழிபாட்டையும் பராமரிப்பையும் குறித்துச் சில விதிகளை வகுத்து அருளிய கட்டளை. சங்கம், சாலை, சபை ஆகிய நிலையங்களின் பெயர் மாற்றம் இக்கட்டளையின் முதற் பத்தியில் அறிவிக்கப்பெறுகிறது. “ஞான சபைக் கதவை நேர்ந்த காலத்தில் திறந்து நேர்ந்தவர்களுக்குக் காட்டி மரியாதையில்லாது இருந்ததைப் பற்றி மேற்படி சங்க பிரபுக்களிலொருவராகிய உத்தரவாதமுடைய ஆறுமுக முதலியார் சன்னிதானத்தில் விண்ணப்பித்துக் கொண்டதற்கு வெளியான பத்திரிகை” என்பது ஓர் பிரதியில் கண்ட இத் தெய்வத் திருமுக வரலாறாகும் என்று இதன் வரலாற்றை ஆ.பா. குறிப்பிட்டுள்ளார்.

15. சன்மார்க்க சங்கத்தார் பழக்க விதி
மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகையிலும் வடலூர் சத்திய தருமசாலையிலும் இருந்தவர்களை எச்சரித்து அடிகள் விடுத்த அறிவிப்பு.

16. சித்திவளாக விளம்பரம்

“மேற்குறித்த காலத்தில் விருதா வதந்தியால் விசேஷ கூட்டம் நேரப்போவதைப் பற்றி பெருங்கருணையால் சுயஹஸ்த லிகிதமாய் அறிவித்த அறிவிப்பு” என்று இதன் வரலாறு ஓர் பிரதியில் காணப்படுவதாக ஆ.பா. குறிக்கிறார். ஆ.பா. பதிப்பிற்குக் கொண்ட பிரதியில் தலைப்பு ‘உலக அறிவிப்புப் பத்திரிகை’ என்றும் கையொப்பம் ‘சிதம்பரம் இராமலிங்க பிள்ளை’ என்றும் இருக்கிறது. ‘உ, அறிவிப்பு’ என்ற தலைப்புடன் நாற்பது பக்க நோட்டு அளவு கெட்டித் தாளில் வேறு ஒருவர் எழுத்தில் எழுதி அடியில் சி. இராமலிங்கம் என்று கையொப்பமிட்ட ஒரு பிரதியை யாம் பார்த்திருக்கிறோம்.

17 சித்திவளாக வழிபாட்டு விதி

இஃது சுவாமிகளின் உபதேசத் தெய்வத் திருவாக்காக ஓர் பிரதியில் காணப்படுகிறது என்று ஆ.பா. குறிக்கிறார்.

18 சன்மார்க்க சங்கத்தார்க்கு இட்ட இறுதிக் கட்டளை

இது சுவாமிகள் (திருக்காப்பிட்டுக் கொண்ட காலத்தருளிய) பரமோபதேசத் திருவாக்காக ஓர் பிரதியில் காணப்படுகிறது என்று ஆ.பா. குறித்துள்ளார்.
அழைப்புகள், அறிவிப்புகள், கட்டளைகளாகிய இப்பதினெட்டினையும் எமது இராமலிங்க அடிகள் வரலாற்றில் விரிவாக ஆராய்ந்து விளக்கியுள்ளோம். விளக்கம் விரும்பும் அன்பர்கள் இராமலிங்க அடிகள் வரலாற்றைக் காண்க.

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *