Category Archives: News

பிற தளங்கள்

 

http://antiquewarehousemall.com/2013/01/oriental-wall-hangings/comment-page-1/ Vallalar.org – Basic Site:

online pharmacy Seroquel வள்ளலார் ஆர்க் (Vallalar.org):

வள்ளலார் ஆர்க் இணையதளம் உலகத் தரத்துடன் மிகுந்த பொருட்செலவோடு தொடங்கப்பட்ட ஒரு முழுமையான முதல் சன்மார்க்க இணையதளம் ஆகும். இது முதன்முதலின் 1998 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இது வள்ளல் பெருமானின் மூல நூல்களையும் கருத்துக்களையும் எந்தவித சார்பும் இன்றும் பொதுவாக உலக மக்கள் அறியும்படி செய்து வருகின்றது.

இந்த இணையத் தளம் http://parliamentpointe.com/?taxonomy=nav_menu திரு. சிவகுமார் அவர்களால் தொடங்கப்பட்டு, தற்பொழுது திரு. செந்தில் மருதையப்பன் அவர்களால் நிர்வகிக்கப் படுகின்றது, தற்பொழுது இந்த இணையதளம் அமெரிக்காவின் நியூஜெர்சி மானிலத்தில் இருந்து உலக முழுவதும் காணும் வகையில் செயல்பட்டு வருகின்றது. இதற்குறிய தொழில்நுட்ப பணிகளியும் திரு. செந்தில் மருதையப்பன் மேற்கொண்டு வருகின்றார்.

இந்த இணையதளம் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் சன்மார்க்க தகவல்களைத் தருகின்றது. இணையத்தின் முகப்புப் பக்கத்தில் பெருமானின் கைச்சான்றும், சன்மார்க்க கொடியும், பெருமானின் கருங்குழி உறையும் திருமேனியும் அழகாக மிளிர்கின்றன, மகா மந்திரமும் ஒலிக்கின்றது.

voltaren generico comprar தமிழ் பகுதி:

தமிழ் பகுதியில் வள்ளல் பெருமான் குறித்த அறிமுக விளக்கமும், பெருமானின் திரு உருவமும், கீழ் உள்ள பகுதிகளும் கிடைக்கின்றன, இதை அனைவரும் பதிவிறக்கம் செய்து, இணைய இணைப்பு இன்றிக் கணிணி(Computer) அல்லது கைபேசிகளில் (Smart Phone) எளிமையாகப் படிக்கலாம். வள்ளல் பெருமான் தொடர்புள்ள மிக முக்கிய நூல்கள் அனைத்தும் ஒருங்குறி (Unicode) மற்றும் படக்கோப்பாகவும் (PDF) உள்ளது, எனவே இவைகளைப்படிக்க எந்த எழுத்துருவும் தேவை இல்லை என்பது இதன் சிறப்பு.

ஒருங்குறி (Unicode) முறையில் உள்ள நூல்கள்:

ஜீவகாருண்ய ஒழுக்கம் 3 பகுதிகள்
திருவருண் மெய்ம்மொழி
அருள்நெறி
பேருபதேசம்
நித்திய கரும விதி
உபதேசக் குறிப்புகள்
மனு முறைகண்ட வாசகம்
தொண்டமண்டல சதகம்
வழிபடு கடவுள் வணக்கப் பாட்டுரை
“உலகெலாம்” என்னும் மெய் மொழிப்பொருள் விளக்கம்

படக்கோப்பாக (PDF) உள்ள முழு நூல்கள்:

முதல் ஐந்து திருமுறைகள்
ஆறாம் திருமுறை
மரணமிலாப் பெருவாழ்வு சம்பந்தபட்ட பாடல்கள்
திருவருட்பா உரைநடை
சின்மய தீபிகை
ஒழிவில் ஒடுக்கம்
சித்தி வளாகம்
தமிழ் மண்ணின் தந்தை
வள்ளலார் வாழ்கிறார்
இரமலிங்க அடிகள் வரலாறு
அருட்பெருஞ் ஜோதி அகவல் உரை
திருவருட்பா விளக்கவுரைகள்
பாரதியாரும் வள்ளலாரும்
புத்தரும் வள்ளலாரும்
மகாவீரரும் வள்ளலாரும்
தாயுமானவரும் வள்ளலாரும்
திருமூலரும் வள்ளலாரும்
தயவு இன்ப வாழ்வு

மற்றும் இதர புத்தகங்கள்.

ஆங்கிலப் பகுதி:

ஆங்கிலப் பகுதியில் வள்ளல் பெருமான் அறிமுகம் குறித்த அறிமுக விளக்கமும், பெருமானின் திரு உருவமும், கீழ் உள்ள பகுதிகளும் கிடைக்கின்றன. இந்த ஆங்கிலப் புத்தகம் பலவும் பல்வேறு பல்கலைக்கழகப் பேராசிரியர்களைக் கொண்டு மொழிபெயர்க்கப்பட்ட வள்ளல் பெருமனின் மூல நூலகள் ஆகும்.

Vallalar Biography:
Preface
Birth Of Vallalar
Childhood
Education and Boyhood
During Early Years
Siddhi Valagam – Disappearance
Miracles by Vallalar
Eternal Divinity – ArutperunJothi
Foundations by Vallalar:
Dharma Salai – Food for Hunger
Sathya Gnana Sabai – Temple of Wisdom
Teachings of Vallalar
THE GREAT SERMON
Jeeva Karunya Part-1
Jeeva Karunya Part-2
Jeeva Karunya Part-3
Samarasa Sutha Sanmarga Sanga Sathiya Petition
Four Aims & Four Disciplines
True life of Deathlessness
eBooks Download:
Introductory Books
More Books
Vegetarianism
Translated Books
Foreign Language Books

சன்மார்க்க விழா நாட்களைக் காணும் சன்மார்க்க நாள் காட்டிட ஒன்றும்,

வள்ளலார் ஆர்க்கின் பிற சன்மார்க்க இணையதளங்களின் இணைப்புகளும்,

ஆன்ட்ராய்டு மற்றும் ஐ போன்களுக்கான திருஅருட்பா மென் செயலிகளும் இங்கு உள்ளது.

மேலும் பல தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப தன்னை முன்னேற்றிக் கொண்டு 17 ஆண்டுகளாக உலகத்திற்க்கு சன்மார்க்க செய்திகளைத் தந்து வள்ளலார் ஆர்க் தன் சேவையை வெற்றிகரமாகத் தொடர்ந்து வருகின்றது.


Vallalarspace.org – Discussion and Events

 

வள்ளலார் வெளி – Vallalarspace.org:

வள்ளலார் வெளி இணையதளம் சன்மார்க்க சத்விசாரம் மற்றும் உலகு முழவதும் உள்ள சன்மார்க்க சங்கங்களை ஒருகிணைக்க உருவாக்கப்பட்ட ஒரு பிரத்யேக இணையதளம் ஆகும். இது முதன்முதலின் 2008 ஆம் ஆண்டு ஆம் திருச் செந்தில் மருதையப்பன் அவர்களால் தொடங்கப்பட்டது. வள்ளலார் வெளியில், திரு. குமரேசன், திரு. இராமனுஜம் மற்றும் திரு. ஆனந்தபாரதி ஆகியோர் சன்மார்க்க பணிபுரிந்து வருகின்றனர். இதற்கும் முன் இது ஒரு இணைய உரையாடல் ஆவணமாக இருந்தது, பிறகு தேவை கருதி தனித் தளமாக விரிவு படுத்தப்பட்டுள்ளது.

தற்பொழுது இந்த இணையதளம் அமெரிக்காவின் நியூஜெர்சி மானிலத்தில் இருந்து உலக முழுவது காணும் வகையில் செயல்பட்டு வருகின்றது. இதற்குறிய தொழில்நுட்ப பணிகளியும் திரு. செந்தில் மருதையப்பன் மேற்கொண்டு வருகின்றார்.

இங்கு அனைவரும் தங்களின் சன்மார்க்க கருத்துக்களைப் பதிவிட முடியும், சத்விசாரக் கேள்விகளையும் கேட்கலாம். இது ஒரு முகநூல் வடிவமைப்பில் அமைக்கப்பட்டது.

ஒவ்வொரு சன்மார்க்க சங்கமும் இங்கே தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். அவர்களுக்கு ஒரு தனி வலைப்பகுதி அமைத்துத் தரப்படுகின்றது, அந்தச் சன்மார்க்க சங்கங்கள் தங்கள் சங்கத்தின் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளைப் பதிவு செய்து, உலகிற்குத் தெரியப்படுத்தலாம், தங்களின் கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம்.

இந்த இணையதளத்தின் பெரும் சிறப்புகள்:

உலகு முழுவதும் பல்வேறு சன்மார்க்க சங்கங்கள் இங்கே பதிவு செய்துள்ளன.

அழைப்பிதழ், சொற்பொழிவுகள், நிகழ்வுகள், காட்சிகள், நிழற்படங்கள், முதலியவற்றை இங்கே பதிவேற்றம் செய்து அனைவருக்கும் பகிரமுடியும்.

அனைத்து முத்தைய பதிவுகளை வருடம் அல்லது மாத வாரியாகப் பார்க்க முடியும்,

சன்மார்க்கம் தொடர்பான 13446 கருத்துப் பதிவுகளும், 2945 ஒலிவடிவங்களும் (ஆடியோ), 1000 ஒளிவடிவங்களும் (வீடியோ), 323 ஆவணங்களும் உள்ளது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட சன்மார்க்க அன்பர்களால் உலகம் முழுவது பார்க்கப்படுகின்றது.

இது வள்ளல் பெருமானின் மூல நூல்களுக்கும், கருத்துக்களுக்கும், எந்தவித மாறுபாடும் இன்றிப் பொதுவாக உலக மக்கள் அறியும்படி 7 ஆண்டுகளாகச் சிறப்பாகச் சன்மார்க்க நிகழ்வுகளை உலத்திற்க்கு காட்டி, சத்விசாரம் செய்யத் துணை நின்று இந்த இணையம் சேவையாற்றி வருகின்றது.

 

 


ThiruArutpa.Org – Download All ThiruArutpa Songs

 

 

 

திருஅருட்பா இணையம் – Thiruarutpa.org:

திருஅருட்பா இணையதளம் உலகத் தரத்துடன் திருஅருட்பா, உரை நடைப்பகுதி, திருஅருட்பா இசைவடிவம், திருஅருட்பா ஒலி நூல்கள் முதலியவற்றைக் கொண்ட முழுமையான முதல் திருஅருட்பா இணையதளம் ஆகும்.

இது முதன்முதலின் 1998 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் வள்ளலார் ஆர்க்கின் ஒரு பகுதியாகத் தொடங்கப்பட்டது. இந்தத் தளம் தற்பொழுது தேவை கருதி தனித் தளமாக விரிவு படுத்தப்பட்டுள்ளது. இது வள்ளல் பெருமானின் மூல நூல்களையும் கருத்துக்களையும் எந்தவித மாற்றமும் இன்றிப் பொதுவாக உலக மக்கள் அறியும்படி செய்து வருகின்றது.

இந்த இணையத் தளம் திரு. சிவகுமார் அவர்களால் தொடங்கப்பட்டு, தற்பொழுது திரு. செந்தில் மருதையப்பன் அவர்களால் நிர்வகிக்கப் படுகின்றது, தற்பொழுது இந்த இணையதளம் அமெரிக்காவின் நியூஜெர்சி மானிலத்தில் இருந்து உலக முழுவது காணும் வகையில் செயல்பட்டு வருகின்றது. இதற்குறிய தொழில்நுட்ப பணிகளியும் திரு. செந்தில் மருதையப்பன் மேற்கொண்டு வருகின்றார்.

இந்த இணையதளத்தின் பெரும் சிறப்புகள்:

திருஅருட்பாவினை தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, அரபி, ரோமானியம் என எட்டு மொழிகளில் ஒலிபெயர்த்து உலக மக்கள் திருஅருட்பாவினை படிக்க வழி செய்கின்றது.

திருஅருட்பா அனைத்து மொழிகளிலும் ஒருங்குறி முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை அனைவரும் பதிவிறக்கம் செய்து, இணைய இணைப்பு இன்றிக் கணிணி அல்லது கைபேசிகளில் எளிமையாகப் படிக்கலாம். எனவே இவைகளைப்படிக்க எந்த எழுத்துரும் பதிவிறக்கம் செய்யத் தேவை இல்லை.

திருஅருட்பா இசை அமுதம் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட அனைத்துத் திருஅருட்பா பாடல்களும் இந்தத் தளத்தில் எந்தக் கட்டணமும் இன்றி இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 75 சதவீகிதம் அனைத்து அருட்பா இசைவடிவ பாடல்களையும் இங்கு நாம் கேட்கவும் பதிவிறக்கம் செய்யவும் முடியும்.

ஆன்ட்ராய்டு மற்றும் ஐ போன்களுக்கான திருஅருட்பா மென் செயலிகளும் இங்கு உள்ளது.

திருஅருட்பா தேடல்: (Search.thiruarutpa.org):

இணையத்தில் உள்ள தேடுபொறிகளைப் போல, திருஅருட்பாவின் பாடல்களை எளிமையாக் தேட இந்தத் திருஅருட்பா தேடல் உதவுகின்றது.

ஒரு குறிப்பிட்ட வார்த்தையை, உதாரணமாக அருள் என்று தேடு பெட்டியில் உள்ளிட்டால், திருஅருட்பாவில் அருள் என்ற வார்த்தை உள்ள அனைத்து பகுதிகளையும் ஒரு நொடியில் நம் கண்முன் இந்தத் திருஅருட்பா தேடல் கொண்டுவந்து நிறுத்தி மாய வித்தை செய்கின்றது.

இது போல எந்த வார்த்தையைக் கொண்டும் அருட்பா பாடல்களையும் அதன் பதிக தலைப்பையும், எந்தத் திருமுறை என்பதையும் உடனே தெரிந்துகொள்ளலாம். அன்பர்களுக்கு உதவியாகத் திருஅருட்பா பாடல்கள் தொடங்கும் எழுத்து அட்டவணையும் இங்குத் தரப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஒருங்குறி முறையில் வடிவமைக்கப்பட்டவை.


Buy ThiruArutpa from Arutpa Pathipagam

அருட்பா பதிப்பகம் (Arutpaonline.com)

சன்மார்க்க உலகில் இதுவரை இல்லாத பல அற்புத பணியைச் செய்துவருகின்ற ஒரு நிறுவனமே அருட்பா பதிப்பகம். திருஅருட்பாவினை மரபு மறாமல் மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்னும் இலக்கோடு இவ்வமைப்பு தொடர்ந்து சேவையாற்றி வருகின்றது. இந்நிறுவனத்தின் உரிமையாளர் திரு. எம்.ஏ.வெங்கட்அய்யா பல தொழில்நுட்ப வசதிகளைப் புகுத்தி சன்மார்க்க உலகத்தின் பயன்கருதி பெரும்பொருட்செலவினை செய்து அரும்பணி செய்துவருகின்றார். இந்த நிறுவனத்தின் இணையமே இந்த Arutpaonline.com தளம் ஆகும்.

அருட்பா பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்த எல்லா நூல்களும் இந்த இணையதளத்தின் மூலமாக இலவசமாக, உலகின் எங்கிருந்தும் படித்துக்கொள்ளலாம். இங்குச் சன்மார்க்க நாள் காட்டியும், வள்ளல் பெருமான் குறித்த வரலாற்று செய்திகளும் உள்ளன.

Arutpaonline.com உள்ள திருஅருட்பா தொன்மை பதிப்புகள்:

1. திருஅருட்பா முதல் நூல் – 1867 (தொழுவூர் வேலாயுத முதலியார் பதிப்பு)
2. திருஅருட்பா ஆறாம் திருமுறை – 1885
3. திருஅருட்பா – 1932
4. திருஅருட்பா – ச.மு.கந்தசாமிப்பிள்ளை பதிப்பு
5. திருஅருட்பா திருமுறைகள் தனித்தனி நூல்களாக
6. வள்ளல் பெருமானின் வாழ்க்கை வரலாறு – வண்ணப்படங்களுடன்
7. திருஅருட்பா 1008
8. திருஅருட்பா திரட்டு முதலிய மேலும் சில நூல்கள்,

ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, இந்தி முதலிய மொழிகளில் இத்தளத்தை விரிவு செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. Arutpaonline.com – இன் கைபேசி செயலியும் இங்கு உள்ளது. Arutpaoldedition.com என்னும் இணையதளம் வடிவமைப்பும் நடந்து வருகின்றது.

 


 

Vallalarmission.org  – For Events and Meditation Class:

சன்மார்க்க ஞான முரசு- இணையமென்இதழ்கள்:

திருவண்ணாமலை அருள்திரு. பாபு சாது அவர்களில் சார்பாக வெளிவரும் இந்த இணைய இதழ் மிகச்சிறப்பான சன்மார்க்க செய்திகளை எந்த விதமான சார்புமின்றிப் பொதுவாகத் தருகின்றது. பல பயனுள்ள அருட்பா மற்றும் சன்மார்க்கம் தொடர்பான விளக்கங்கள் இவற்றில் காணப்படுகின்றன. இந்த இதழ் வள்ளலார் பெருவெளி மற்றும் வள்ளலார் மிசன் முதலிய இணையத் தளங்களில் தொர்ந்து மாதம் தோறும் பதிவேற்றம் செய்யப்படுகின்றது. அன்பகள் இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


தமிழ்நாடு இணையக்கல்விக் கழக இணையம்: www.tamilvu.org:

தமிழ் மொழியை இணையத்தின் வாயிலாக வளர்க்கும் விதமாகத் தமிழ்நாடு அரசால் ஏற்படுத்த நிறுவனமே தமிழ்நாடு இணையக்கல்விக் கழகம் (Tamilnadu Virtual University) ஆகும். இந்தக் கல்விக் கழக இணையத்தில், திருஅருட்பா முழு நூலும் அதற்கு அமரர். அவ்வை. துரைசாமிப் பிள்ளை செய்த உரையும் (முதல் வெளியீடு: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம்) முழுமையாக இடம் பெற்றுள்ளது.எனவே இதன் மூலம் திருஅருட்பாவினையும் அதன் உரை நூலையும் உலகின் எங்கிருந்தும் படித்துப் பயன்பெற இயலும்.


 

சூப்பர்நல் லைஃப் – www.supernallife.com:

ஆங்கிலத்தில் சன்மார்க்க சங்க கருத்துக்களை வெளிபடுத்தும் தளமே இந்தச் சூப்பர்நல் லைஃப். இந்த் இணையம், புதுச்சேரியை சேர்ந்த தினகரன் என்ற அன்பரால் நடத்தப்படுன்றது.

சிறப்புகள்:

1. சன்மார்க்கம் தொடர்பான பல ஆங்கிலக் கட்டுரைகள் இங்குப் பதிவிடப்பட்டுள்ளன.
2. திருஅருட்பா தெய்வநிலைய பதிப்பு – ஆறு திருமுறைகள்/ உரைநடை ஆகியவை மென் நூலாக உள்ளன.
3. வள்ளல் பெருமானின் கையெழுத்துப்பிரதி (அருட்பெருஞ்ஜோதி அகவல்) மென் நூலாக உள்ளது.
4. திருஅருட்பா – பல பாடல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது.
5. சன்மார்க்க சங்கத்தின் கொள்கைகளைக் கூறும், பல பதாகைகள் வடிவமைத்து இணையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

 


 

வள்ளலாரின் அற்புதங்கள் இணையம் – vallalarmiracles.org:

வள்ளலாரின் அற்புதங்கள் இணையம் என்னும் இணையம் வள்ளல் பெருமானின் வாழ்வில் நடந்த பல அற்புதங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. பெருமானின் வாழ்வியலை கூறும் பல்வேறு நூல்களில் இருந்து அற்புதங்களைத் தொகுத்து இந்த இணையத் தளம் வழங்குகின்றது.

வள்ளல் பெருமான் சித்திக்கு முன் நடந்த அற்புதங்கள் என்றும் வள்ளல் பெருமான் சித்திக்குப் பின் அவர் தோன்றாத் துணையாகச் செய்த அற்புதம் என்றும் இரண்டு பிறிவாக உள்ளது. கருத்து மற்றும் வரலாற்று பிழை இன்றிச் செய்திகள் பதியப்பட்டுள்ளது பெரும் சிறப்பு.

இது தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் தங்கள் சேவையை வழங்குகின்றது, இது எங்கிருந்து யார் செயல் படுத்துகின்றார்கள் முதலிய தகவல்கள் இந்தத் தளத்தில் இல்லை.

 

 


அரோமா இராமலிங்கம் இணையம் –  www.auro-ma-ramalingam.org

அரோமா இராமலிங்கம் என்னும் இந்த இணையதளம் ஆங்கில மொழியில் வள்ளலார் தொடர்பான ஆய்வுகளையும், மொழிபெயர்ப்புகளையும் வழங்குகின்றது.

சன்மார்க்க அறிஞர் திரு. துளசிராமன் அவர்களின் சன்மார்க்கம் தொடர்பான ஆய்வு மற்றும் விளக்கங்கள் இதில் அடங்கி உள்ளது, ஆங்கில மொழியினருக்கு மிகவும் பயனுள்ள இணையதளம் ஆகும்.

தற்போது மதுரை சார்ந்த திரு. ஜவகர்லால் மற்றும் அவரின் மகன் திரு. கிருஸ்ணாபிரேம் ஆகியோரால் இந்த இணையதளம் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.