Category Archives: Sanmarkkam

இராமலிங்க வள்ளல் ஓர் அறிமுகம்

source site இராமலிங்க வள்ளல் ஓர் அறிமுகம்

http://fiona-kerr.com/wp-json/oembed/1.0/embed?url=http://fiona-kerr.com/ இதுவரை உலகில் தோன்றிய பெரியோர்களில் தலைசிறந்தவர்கள் வள்ளல் பெருமான்.

buy gabapentin online cod அவர்களது வரலாறு, நிலையங்கள், விழாக்கள், நெறிமுறைகள் பற்றிய தகவல்கள் இதில் கூறப் பட்டுள்ளன.

இது வளரும் தலைமுறைக்கான வெளியீடு!

அவற்றைப் படித்துப் பயன் பெறுவோம்! வாருங்கள்!!

வள்ளலார் இளைஞர் மன்றம், வடலூர்.

 

 1. வடலூர் என்பது எந்த ஊர்?

அது கடலூர் மாவட்டத்தில் உள்ள பார்வதிபுரம் என்னும் ஊர்.

 1. அதற்கு என்ன சிறப்பு?

அந்த ஊர் வள்ளற் பெருமான் தொடர்புடைய தெய்வ நிலையங்கள் உள்ள ஊராகும்.

 1. எது எது இராமலிங்கப் பெருமானின் தெய்வ நிலையங்கள்?

1.மருதூர், 2.கருங்குழி, 3.வடலூர், 4.மேட்டுக்குப்பம் முதலிய ஊர்கள்.

 1. அங்குள்ள தெய்வ நிலையங்கள் எவை எவை?

வள்ளலார் அவதரித்த இடம் மருதூர்.

 1. அடுத்து?

வள்ளற்பெருமான் சன்மார்க்க சங்கம் உண்டாக்கிய இடம் கருங்குழி.

 1. மேலும்?

இராமலிங்க அடிகள் ஏழைகட்கு அன்னதானம் தொடங்கிய இடம் சத்திய தருமச்சாலை, வடலூர்.

 1. அத்துடன்?

அருட்பெருஞ்ஜோதி தரிசனம் நடக்கும் இடம் ஞானசபை, வடலூர்.

 1. மற்றபடி?

இராமலிங்க அடிகள் ஜோதியாகச் சித்திபெற்ற சித்திவளாகம், மேட்டுக்குப்பம் என்னும் ஊரில் உள்ளது.

 1. எப்போது ஐயா பிறந்தார்கள்?

1823, அக்டோபர் 5ல் புரட்டாசி மாதம் சித்திரை நட்சத்திரத்தில்.

 1. பெற்றோர்கள் பெயர்?

மருதூரில் கணக்கு வேலை பார்த்த ராமையா அவரது அன்பு மனைவி சின்னம்மை.

 1. ஐயா (வள்ளலார்) படித்தது எங்கு?

சென்னையில், முதலில் அண்ணனிடம்.

 1. அப்புறம்?

திருமுருகனிடம்!!

 1. படிப்பு எப்படி வந்தது?

எல்லா கலைகளிலும் ஐயா A1 ஸ்டூடண்டாக விளங்கினார்கள்

 1. அதன்பின்?

திருமணம் நடந்த்து.

 1. அதனைத் தொடர்ந்து?

நூல்கள் சில வெளியிட்டார்கள்.

 1. அதனுடன்?

1858ல் தென்தேச திருத்தல யாத்திரை தொடங்கினார்கள்.

 1. தொடங்கிய காலத்தில்?

வடலூருக்குப் பக்கமுள்ள கருங்குழிக்கு வந்தார்கள். இங்கு 9 ஆண்டுகள் தங்கினார்கள்.

 1. தங்கி?

அகில உலக சகோதர அறத்தைப் பின்பற்றும் சன்மார்க்க சங்கம் என ஒரு சங்கம் உண்டாக்கினார்கள்.

 1. எந்த ஆண்டு?

1865ஆம் ஆண்டு.

 1. யார் யார் அதில் அங்கத்தினர்கள்?

ஊர் மக்கள், கல்விமாங்கள், யோகிகள், ஞானிகள், புலவர்கள், அடியார்கள் இப்படிப் பலப்பலர்.

 1. முக்கியமானவர்களை கூறலாமா?

கூறலாமே! ஒருவர் கல்பட்டு ஐயா மற்றொருவர் தொழுவூர் வேலாயுத முதலியார்.

 1. கல்பட்டு ஐயா யார்?

ஐயாவுடன் இருந்தபோதும் ஐயாவுக்குப் பின்னும் 26 ஆண்டுகள் வடலூர் தருமச்சாலையைச் சீரும் சிறப்புடனும் நடத்தி கொடுத்த சன்மார்க்க பெருந்தொண்டர்.

 1. தொழுவூர் வேலாயுதனார்?

அவர் சமஸ்கிருதம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிப் புலமை உடைய பேரறிஞர்.

 1. சன்மார்க்க சங்கம் உண்டான பின்பு நடந்தது என்ன?

ஐயாவின் உள்ளத்தில் கடவுள் காட்சி தந்து கட்டளை ஒன்று இட்டார்.

 1. அது என்ன கட்டளை?

எவ்வகை ஆதரவும் இல்லாத ஏழைகளுக்கு மூன்று வேளையும் பசிப்பிணிப் போக்க வேண்டும் என்ற கட்டளை.

 1. அதற்காக?

வடலூரில் சத்திய தருமச்சாலை என்னும் தொண்டு நிறுவனம் வடலூர் மக்கள் உதவியுடன் உருவாயிற்று.

 1. எப்போது?

1867ல் வைகாசி 11ல்.

 1. உண்டாகி?

இன்றும் என்றும் ஏழைகளின் பசி நீக்கப்பட்டு வருகிறது.

 1. அதற்குப் பிறகு?

மீண்டும் ஐயா உள்ளத்தில் கடவுள் வெளிப்பட்டார்.

 1. வெளிப்பட்டு?

ஏழையின் பசிபோக்கும் இனிய தருமச்சாலை உண்டாக்கினாய்! அத்துடன்

 1. அத்துடன்?

எல்லா மக்களும் ஒன்றுபட்டு வழிபடும் ஒரு ஜோதிக் கோயில் எழுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டார்.

 1. உத்தரவு இட்ட பின்பு?

1872ல் தை பூசத்தில் சத்திய ஞானசபை என்னும் ஒரு ஒளி வழிபாட்டு நிறுவனம் உண்டாயிற்று.

 1. இங்கு நடைபெறுவது என்ன?

அருட்பெருஞ்ஜோதி தரிசனம் ஒவ்வொரு மாதத்திலும் மற்றும் ஆண்டிலும் (தைப்பூசம்) நடைபெறுகிறது.

 1. அதன்பின்?

அக்டோபர் மாதம் 5ஆம் தேதி வள்ளலார் உதய நாள் கொண்டாடப்படுகிறது.

 1. பிற்பாடு?

ஐயா சங்கம் உண்டாக்கிய திருநாள் சித்திரை ஒன்றாம் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

 1. அதன்பின்?

வள்ளல் எழைகளுக்காக உண்டாக்கிய சத்திய தருமச்சாலை வைகாசி 11 விழாவாகக் கொண்டாடப் படுகிறது.

 1. மற்றபடி?

சத்திய ஞான சபையில் முதல் ஜோதி விழா தைப்பூச விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப் படுகிறது.

 1. பிறகு?

மாதந்தோறும் பூச நட்சத்திரத்தில் மாத பூச ஜோதி தரிசனம் கொண்டாடப் படுகிறது.

 1. ஐயா அற்புதங்களைப் பெற்றவராமே?

ஆமாம், பலப்பல அற்புதங்களைப் பெற்றவர்.

 1. முதலில்?

ஈன்றெடுத்த அன்னைக்கு எந்த துன்பமும் இம்மியும் தராமல் உதித்தவர்களாம்.

 1. பிறந்த பின்பு?

பசிவந்து பரதவித்து அழுது அரற்றமாட்டார்களாம்.

 1. அதுபோல்?

நோய் நொடி பிணி முதலியன பீடிக்கப்பட்டு துன்புறவில்லையாம்.

 1. மேலும்?

வம்பு, வழக்கு, சண்டையிடுதல், ஆபாசம் பேசுதல் முதலிய செய்ய மாட்டார்களாம். அசிங்கம் பேச மாட்டார்களாம்.

 1. அத்துடன்?

தின்பண்டம் வேண்டும் என்று அரிக்க மாட்டார்களாம்.

 1. தொடர்ந்து?

தெய்வத்தை வழிபடுவார்கள்.

 1. மற்றும்?

ஜெபதபம் செய்வதுண்டாம்.

 1. வாலிப பருவத்தில்?

அதற்கான சேஷ்டைகள் சிறிதும் தோன்றியதில்லையாம்.

 1. பின் எப்படி?

பிற உயிர்களிடம் இரக்க்ம் காட்டுவார்களாம்.

 1. அத்துடன்?

பாடிப் பணிதல் பக்தி செய்திருத்தல் பிற மனிதர்களுக்கும், வயோதிகர்களுக்கும் பிணியாளர்களுக்கும் உபகரிப்பார்களாம்.

 1. உபகரிப்பார்கள் என்றால்?

உதவி செய்வார்களாம்.

 1. சிறந்த அற்புதம்?

கருங்குழியிலிருந்தபோது தண்ணீரால் விளக்கு எரியச் செய்த சம்பவம்.

 1. அத்துடன்?

சத்திய ஞான சபை கட்டியபோது தங்கம் தயாரித்து உதவினார்களாம்.

 1. மேலும்?

சத்திய ஞான சபை கட்ட 1872லேயே ஐயாவுக்கு ஒரு லட்சம் ரூபாய் திரண்டதாம்.

 1. அதுபோல்?

சத்திய தருமச்சாலை தொடக்க விழாவில் அன்னதானம் செய்தது போக மீந்த உணவுப் பண்டங்கள் 6 மாதம் வரை சாலை உணவுக்குப் போதுமானதாக இருந்ததாம்.

 1. எத்தனை நாள் விழா?

மூன்று நாள் நடந்ததாம்.

 1. எத்தனை பேர் வந்தார்கள்?

சுமார் 10 ஆயிரம் பேர்.

 1. சாலையில் ஏதோ அற்புதம் நடந்ததாமே?

ஆமாம், அது அருமையானது.

 1. எப்படி?

ஒரு நாள் இரவில் 100 பேர் உணவு உண்ண சாலைக்கு வந்துவிட்டார்கள்.

 1. என்ன இருந்தது?

10 பேருக்கு மட்டும் உணவு இருந்தது.

 1. பின் என்ன நடந்தது?

தலைமை சமையலர் வேலூர் சண்முகனார் ஐயாவுக்கு அதனைத் தெரிவித்தார்.

 1. தெரிவித்ததும்?

ஐயாவே முன் வந்தார்கள். 100 பேரை அமர்த்தினார்கள். உணவு படைத்தார்கள்.

 1. என்ன நடந்தது?

10 பேருக்கு இருந்த உணவு 110 பேருக்கு என வளர்ந்து விட்டது.

 1. அதனால்?

வந்த அனைவரும் திருப்தியுடன் உண்டு மகிழ்ச்சி அடைந்தார்கள்.

 1. இதெல்லாம் யார் சென்னது?

வள்ளல் பெருமானின் மாணவர்கள்.

 1. எந்த நூலில்?

காரணப்பட்டு கந்தசாமிப் பிள்ளை என்பார் பாடிய பாடல் நூலில்.

 1. சத்திய தருமச்சாலை விழாவில் ஐயா ஏதோ நூல் வெளியிட்டார்களாமே?

ஆமாம்! அது ஜீவகாருண்ய சீலம் பற்றிய சாத்திர நூல்.

 1. அதை என்ன செய்தார்கள்?

சாலை விழாவில் பூசித்து விளக்கமும் தந்து வாசிக்கவும் செய்தார்கள்.

 1. யார்?

அவரோ சிதம்பர வேங்கட சுப்பு தீட்சிதர் வாசித்தவர்.

 1. ஐயா தெரிவித்த முக்கிய கருணை நோக்கம் என்ன?

எந்த உயிரையும் ஈ-எறும்பெல்லாம் கூட நாம் கொன்று விடாது, ஜாக்கிரதையாக நடக்க வேண்டும் என்றது.

 1. அதனுடன்?

கறிமீன் சாப்பிடாமல் சைவ உணவே சாப்பிட வேண்டும் என்றது.

 1. மேலும்?

சாதி, மதம், சமயம் முதலிய வேறுபாடுகள் பார்க்காமல் வாழ வேண்டும் என்றது.

 1. சன்மார்க்க வாழ்வின் ஆதாரக் கருத்து என்ன?

மனித நேயம் பின்பற்றுதல்.

 1. அவ்வளவுதானா?

அதற்கும் சிறந்ததாகிய உயிர் நேயம் பின்பற்றுதல்.

 1. உயிர் நேயம் என்பது என்ன?

அது உயிர் இரக்கம்.

 1. உயிர் இரக்கம் என்பது என்ன?

அது ஜீவகாருண்யம்.

 1. ஜீவகாருண்யம் என்பது என்ன?

நீ அழுதால் நான் அழுவேன் நீ சிரித்தால் நான் சிரிப்பேன் என்பது.

 1. ஆக?

நாணயத்தின் தலைப்பக்கம் ஆன்ம நேயம்.

 1. பூ பக்கம்?

மனித நேயம்.

 1. ஐயா தெரிவித்த எதிர் காலத்திற்கான அறிவுரைகள் என்ன?

எந்த உயிருக்கும் எந்த உயிரும் துன்பம் தராது வாழும் காலம் ஒன்று வரப் போகிறது என்பதாம்.

 1. அப்புறம்?

இனி எல்லா உயிர்களும் அறிவில் சிறந்து விளங்கும் என்று கூறியது.

 1. அறிவில் சிறந்தால் என்னவாகும்?

விஞ்ஞானச் சிறப்பு உண்டாகும்.

 1. விஞ்ஞான சிறப்பு உண்டானால்?

அதன்மூலம் மெய்ஞானச் சிறப்பு மேம்படும்.

 1. மெய்ஞானச் சிறப்பு என்பது என்ன?

அதுதான் சன்மார்க்கம்.

 1. ஐயா சத்திய ஞான சபை கட்டிய பின்பு எங்குச் சென்றார்கள்?

வடலூருக்கு அடுத்த மேட்டுக்குப்பம் சித்திவாளாகத்திற்கு.

 1. அங்குச் சென்று?

திருஅருட்பா 6ஆம் திருமுறையில் பல பகுதிகள் எழுதினார்கள்.

 1. சிறந்த பகுதி?

அருட்பெருஞ்ஜோதி அகவல்.

 1. சிறந்த திருமந்திரம்?

ஆமாம்! அது அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை மந்திரம்.

 1. சரி! வாழ்வு நலம் பெற?

கடவுளைத் தோத்திரம் செய்ய வேண்டும்.

 1. உடல் நலம் பெற?

புளியாரைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 1. மனம் நலம் பெற?

தூதுவளை என்னும் மூலிகையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 1. தூதுவளையைச் சேர்த்தால்?

ஞாபகச் சக்தி கூடும்.

 1. உள்ளம் நலம் பெற?

கரிசாலை கீரையை உணவாகச் சிறிது ஏற்க வேண்டும்.

 1. உயிர் நலம் பெற?

ஜீவகாருண்ய சீலம் ஏற்க வேண்டும்.

 1. ஓ.கே?

குட்பை.

 1. மேட்டுக்குப்பம் வந்தபின்?

வள்ளல் சபையை 1872ல் உண்டாக்கினார்கள்.

 1. பின்பு?

அருட்பெருஞ்ஜோதி ஞானதீபம் வழிபாட்டிற்கு வைத்தருளினார்கள்.

 1. அதன்பின்பு?

சன்மார்க்க ஆட்சி வந்துவிட்டது என்பதை அறிவிக்க சன்மார்க்க கொடி கட்டி அருளினார்கள்.

 1. அத்துடன்?

மரணமுறா பெருங்குணத்தில் நின்றருளினார்கள்.

 1. அருளாட்சி சிறக்க?

அருள்சித்தியை திருமணம் செய்து கொண்டார்கள்.

 1. அந்த நேரத்தில்?

சன்மார்க்க பேருரை ஒன்று செய்து அருளினார்கள்.

 1. அதன்மூலம் என்ன தெரிவித்தார்கள்?

ஒருமை உணர்வும், தயவு உணர்வும் ஒருவரை கடவுளாக்கும் என்றார்கள்.