என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே!

உலக இணையத்தில் சன்மார்க்க சங்கத்தின் வளர்ச்சி - ஆனந்த பாரதி ‍

வணக்கம்,

வள்ளலார் முதல் ஆசிய கருத்தரங்கம், டிசம்பர் 2015 24, 25, 26 and Feb 05 2017 ஆகிய நாட்களில் அண்ணாமலை பல்கலைக்கழகப் பொறியியல் புல வளாகத்தில் நடைபெற்றது, அந் நிகழ்வில் 25 ஆம் நாள் அன்று, உலக இணையத்தில் சன்மார்க்க சங்கத்தின் வளர்ச்சி என்பது குறித்து அடியேன் வழங்கிய கருத்துரையின் சுருக்கம் பல அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இங்கே வெளியிடப்படுகின்றது.

அன்பர்கள் படித்துப் பயன் பெருக!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

வள்ளலார் முதல் ஆசிய கருத்தரங்கம்:

அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்.

கருத்துரை: 

தலைப்பு:உலக இணையத்தில் சன்மார்க்க சங்க வளர்ச்சி

முன்னுரை:

திருஅருட்பிரகாச வள்ளல் பெருமான் உலகிற்கு இறவா நெறிகாட்டிய உன்னத அருளாளர், அவரின் சன்மார்க்கம் ஞானத்தின் நிறைவான மார்க்கம், அவரின் கொள்கைளும், சன்மார்க்க சங்க நிறுவனங்களும் உலகச் சமுதாயத்திற்குப் பொது நெறியை விளக்குகின்றன, இத்தகைய உயர் நெறியாகிய சன்மார்க்கத்தின் கருத்துகள் இன்றைய நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு உலகை ஒரு குடையில் இணைத்திருக்கும் இணையத்தின் மூலமாக எவ்வாறு உலக மக்களுக்குச் சென்றடைகின்றன என்பதையும், சன்மார்க்க சங்க வளர்ச்சிக்குப் பயன்படும் இணையத் திட்டங்கள் முதலியவற்றின் சிறப்புகளையும், பயன்பாடுகளையும், உலக அரங்கில் இதன் தாக்கங்களையும் விளக்கிக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

உட்தலைப்புகள்:

 இணையவலைத் தளங்கள்,

 இணையவலைக் குழுக்கள்,

 இணையவலைப் பூக்கள்,

 இணையமென் நூல்கள்,

 இணையமென் இதழ்கள்,

 இணையத் தொலைக் காட்சி,

 இணைய இசைவடிவ திட்டங்கள்,

 இணைய ஒளிப்படத் திட்டங்கள்,

 இணைய ஒலிநூல் திட்டங்கள்,

 இணையச் சமூகவலைதளங்கள்.

இணையவலைத் தளங்கள்:

சன்மார்க்க சங்க கருத்துக்களை உலக அளவில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் வலைத்தளங்கள், முதன்மை இடம் வகிக்கின்றன. அவற்றின் பயன்பாடு மற்றும் சிறப்புகளை முதலில் காண்போம்.

வள்ளலார் ஆர்க் (Vallalar.org):

வள்ளலார் ஆர்க் இணையதளம் உலகத் தரத்துடன் மிகுந்த பொருட்செலவோடு தொடங்கப்பட்ட ஒரு முழுமையான முதல் சன்மார்க்க இணையதளம் ஆகும். இது முதன்முதலின் 1998 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இது வள்ளல் பெருமானின் மூல நூல்களையும் கருத்துக்களையும் எந்தவித சார்பும் இன்றும் பொதுவாக உலக மக்கள் அறியும்படி செய்து வருகின்றது.

இந்த இணையத் தளம் திரு. சிவகுமார் அவர்களால் தொடங்கப்பட்டு, தற்பொழுது திரு. செந்தில் மருதையப்பன் அவர்களால் நிர்வகிக்கப் படுகின்றது, தற்பொழுது இந்த இணையதளம் அமெரிக்காவின் நியூஜெர்சி மானிலத்தில் இருந்து உலக முழுவதும் காணும் வகையில் செயல்பட்டு வருகின்றது. இதற்குறிய தொழில்நுட்ப பணிகளியும் திரு. செந்தில் மருதையப்பன் மேற்கொண்டு வருகின்றார்.

இந்த இணையதளம் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் சன்மார்க்க தகவல்களைத் தருகின்றது. இணையத்தின் முகப்புப் பக்கத்தில் பெருமானின் கைச்சான்றும், சன்மார்க்க கொடியும், பெருமானின் கருங்குழி உறையும் திருமேனியும் அழகாக மிளிர்கின்றன, மகா மந்திரமும் ஒலிக்கின்றது.

தமிழ் பகுதி:

தமிழ் பகுதியில் வள்ளல் பெருமான் குறித்த அறிமுக விளக்கமும், பெருமானின் திரு உருவமும், கீழ் உள்ள பகுதிகளும் கிடைக்கின்றன, இதை அனைவரும் பதிவிறக்கம் செய்து, இணைய இணைப்பு இன்றிக் கணிணி(Computer) அல்லது கைபேசிகளில் (Smart Phone) எளிமையாகப் படிக்கலாம். வள்ளல் பெருமான் தொடர்புள்ள மிக முக்கிய நூல்கள் அனைத்தும் ஒருங்குறி (Unicode) மற்றும் படக்கோப்பாகவும் (PDF) உள்ளது, எனவே இவைகளைப்படிக்க எந்த எழுத்துருவும் தேவை இல்லை என்பது இதன் சிறப்பு.

ஒருங்குறி (Unicode) முறையில் உள்ள நூல்கள்:

ஜீவகாருண்ய ஒழுக்கம் 3 பகுதிகள்
திருவருண் மெய்ம்மொழி
அருள்நெறி
பேருபதேசம்
நித்திய கரும விதி
உபதேசக் குறிப்புகள்
மனு முறைகண்ட வாசகம்
தொண்டமண்டல சதகம்
வழிபடு கடவுள் வணக்கப் பாட்டுரை
"உலகெலாம்" என்னும் மெய் மொழிப்பொருள் விளக்கம்

படக்கோப்பாக (PDF) உள்ள முழு நூல்கள்:

முதல் ஐந்து திருமுறைகள்
ஆறாம் திருமுறை
மரணமிலாப் பெருவாழ்வு சம்பந்தபட்ட பாடல்கள்
திருவருட்பா உரைநடை
சின்மய தீபிகை
ஒழிவில் ஒடுக்கம்
சித்தி வளாகம்
தமிழ் மண்ணின் தந்தை
வள்ளலார் வாழ்கிறார்
இரமலிங்க அடிகள் வரலாறு
அருட்பெருஞ் ஜோதி அகவல் உரை
திருவருட்பா விளக்கவுரைகள்
பாரதியாரும் வள்ளலாரும்
புத்தரும் வள்ளலாரும்
மகாவீரரும் வள்ளலாரும்
தாயுமானவரும் வள்ளலாரும்
திருமூலரும் வள்ளலாரும்
தயவு இன்ப வாழ்வு

மற்றும் இதர புத்தகங்கள்.

ஆங்கிலப் பகுதி:

ஆங்கிலப் பகுதியில் வள்ளல் பெருமான் அறிமுகம் குறித்த அறிமுக விளக்கமும், பெருமானின் திரு உருவமும், கீழ் உள்ள பகுதிகளும் கிடைக்கின்றன. இந்த ஆங்கிலப் புத்தகம் பலவும் பல்வேறு பல்கலைக்கழகப் பேராசிரியர்களைக் கொண்டு மொழிபெயர்க்கப்பட்ட வள்ளல் பெருமனின் மூல நூலகள் ஆகும்.

Vallalar Biography:
Preface
Birth Of Vallalar
Childhood
Education and Boyhood
During Early Years
Siddhi Valagam - Disappearance
Miracles by Vallalar
Eternal Divinity - ArutperunJothi
Foundations by Vallalar:
Dharma Salai - Food for Hunger
Sathya Gnana Sabai - Temple of Wisdom
Teachings of Vallalar
THE GREAT SERMON
Jeeva Karunya Part-1
Jeeva Karunya Part-2
Jeeva Karunya Part-3
Samarasa Sutha Sanmarga Sanga Sathiya Petition
Four Aims & Four Disciplines
True life of Deathlessness
eBooks Download:
Introductory Books
More Books
Vegetarianism
Translated Books
Foreign Language Books

சன்மார்க்க விழா நாட்களைக் காணும் சன்மார்க்க நாள் காட்டிட ஒன்றும்,

வள்ளலார் ஆர்க்கின் பிற சன்மார்க்க இணையதளங்களின் இணைப்புகளும்,

ஆன்ட்ராய்டு மற்றும் ஐ போன்களுக்கான திருஅருட்பா மென் செயலிகளும் இங்கு உள்ளது.

மேலும் பல தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப தன்னை முன்னேற்றிக் கொண்டு 17 ஆண்டுகளாக உலகத்திற்க்கு சன்மார்க்க செய்திகளைத் தந்து வள்ளலார் ஆர்க் தன் சேவையை வெற்றிகரமாகத் தொடர்ந்து வருகின்றது.

திருஅருட்பா இணையம் – Thiruarutpa.org:

திருஅருட்பா இணையதளம் உலகத் தரத்துடன் திருஅருட்பா, உரை நடைப்பகுதி, திருஅருட்பா இசைவடிவம், திருஅருட்பா ஒலி நூல்கள் முதலியவற்றைக் கொண்ட முழுமையான முதல் திருஅருட்பா இணையதளம் ஆகும்.

இது முதன்முதலின் 1998 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் வள்ளலார் ஆர்க்கின் ஒரு பகுதியாகத் தொடங்கப்பட்டது. இந்தத் தளம் தற்பொழுது தேவை கருதி தனித் தளமாக விரிவு படுத்தப்பட்டுள்ளது. இது வள்ளல் பெருமானின் மூல நூல்களையும் கருத்துக்களையும் எந்தவித மாற்றமும் இன்றிப் பொதுவாக உலக மக்கள் அறியும்படி செய்து வருகின்றது.

இந்த இணையத் தளம் திரு. சிவகுமார் அவர்களால் தொடங்கப்பட்டு, தற்பொழுது திரு. செந்தில் மருதையப்பன் அவர்களால் நிர்வகிக்கப் படுகின்றது, தற்பொழுது இந்த இணையதளம் அமெரிக்காவின் நியூஜெர்சி மானிலத்தில் இருந்து உலக முழுவது காணும் வகையில் செயல்பட்டு வருகின்றது. இதற்குறிய தொழில்நுட்ப பணிகளியும் திரு. செந்தில் மருதையப்பன் மேற்கொண்டு வருகின்றார்.

இந்த இணையதளத்தின் பெரும் சிறப்புகள்:

திருஅருட்பாவினை தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, அரபி, ரோமானியம் என எட்டு மொழிகளில் ஒலிபெயர்த்து உலக மக்கள் திருஅருட்பாவினை படிக்க வழி செய்கின்றது.

திருஅருட்பா அனைத்து மொழிகளிலும் ஒருங்குறி முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை அனைவரும் பதிவிறக்கம் செய்து, இணைய இணைப்பு இன்றிக் கணிணி அல்லது கைபேசிகளில் எளிமையாகப் படிக்கலாம். எனவே இவைகளைப்படிக்க எந்த எழுத்துரும் பதிவிறக்கம் செய்யத் தேவை இல்லை.

திருஅருட்பா இசை அமுதம் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட அனைத்துத் திருஅருட்பா பாடல்களும் இந்தத் தளத்தில் எந்தக் கட்டணமும் இன்றி இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 75 சதவீகிதம் அனைத்து அருட்பா இசைவடிவ பாடல்களையும் இங்கு நாம் கேட்கவும் பதிவிறக்கம் செய்யவும் முடியும்.

ஆன்ட்ராய்டு மற்றும் ஐ போன்களுக்கான திருஅருட்பா மென் செயலிகளும் இங்கு உள்ளது.

திருஅருட்பா தேடல்: (Search.thiruarutpa.org):

இணையத்தில் உள்ள தேடுபொறிகளைப் போல, திருஅருட்பாவின் பாடல்களை எளிமையாக் தேட இந்தத் திருஅருட்பா தேடல் உதவுகின்றது.

ஒரு குறிப்பிட்ட வார்த்தையை, உதாரணமாக அருள் என்று தேடு பெட்டியில் உள்ளிட்டால், திருஅருட்பாவில் அருள் என்ற வார்த்தை உள்ள அனைத்து பகுதிகளையும் ஒரு நொடியில் நம் கண்முன் இந்தத் திருஅருட்பா தேடல் கொண்டுவந்து நிறுத்தி மாய வித்தை செய்கின்றது.

இது போல எந்த வார்த்தையைக் கொண்டும் அருட்பா பாடல்களையும் அதன் பதிக தலைப்பையும், எந்தத் திருமுறை என்பதையும் உடனே தெரிந்துகொள்ளலாம். அன்பர்களுக்கு உதவியாகத் திருஅருட்பா பாடல்கள் தொடங்கும் எழுத்து அட்டவணையும் இங்குத் தரப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஒருங்குறி முறையில் வடிவமைக்கப்பட்டவை.

வள்ளலார் வெளி – Vallalarspace.org:

வள்ளலார் வெளி இணையதளம் சன்மார்க்க சத்விசாரம் மற்றும் உலகு முழவதும் உள்ள சன்மார்க்க சங்கங்களை ஒருகிணைக்க உருவாக்கப்பட்ட ஒரு பிரத்யேக இணையதளம் ஆகும். இது முதன்முதலின் 2008 ஆம் ஆண்டு ஆம் திருச் செந்தில் மருதையப்பன்அவர்களால் தொடங்கப்பட்டது. வள்ளலார் வெளியில், திரு. குமரேசன், திரு. இராமனுஜம் மற்றும் திரு. ஆனந்தபாரதி ஆகியோர் சன்மார்க்க பணிபுரிந்து வருகின்றனர். இதற்கும் முன் இது ஒரு இணைய உரையாடல் ஆவணமாக இருந்தது, பிறகு தேவை கருதி தனித் தளமாக விரிவு படுத்தப்பட்டுள்ளது.

தற்பொழுது இந்த இணையதளம் அமெரிக்காவின் நியூஜெர்சி மானிலத்தில் இருந்து உலக முழுவது காணும் வகையில் செயல்பட்டு வருகின்றது. இதற்குறிய தொழில்நுட்ப பணிகளியும் திரு. செந்தில் மருதையப்பன் மேற்கொண்டு வருகின்றார்.

இங்கு அனைவரும் தங்களின் சன்மார்க்க கருத்துக்களைப் பதிவிட முடியும், சத்விசாரக் கேள்விகளையும் கேட்கலாம். இது ஒரு முகநூல் வடிவமைப்பில் அமைக்கப்பட்டது.

ஒவ்வொரு சன்மார்க்க சங்கமும் இங்கே தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். அவர்களுக்கு ஒரு தனி வலைப்பகுதி அமைத்துத் தரப்படுகின்றது, அந்தச் சன்மார்க்க சங்கங்கள் தங்கள் சங்கத்தின் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளைப் பதிவு செய்து, உலகிற்குத் தெரியப்படுத்தலாம், தங்களின் கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம்.

இந்த இணையதளத்தின் பெரும் சிறப்புகள்:

உலகு முழுவதும் பல்வேறு சன்மார்க்க சங்கங்கள் இங்கே பதிவு செய்துள்ளன.

அழைப்பிதழ், சொற்பொழிவுகள், நிகழ்வுகள், காட்சிகள், நிழற்படங்கள், முதலியவற்றை இங்கே பதிவேற்றம் செய்து அனைவருக்கும் பகிரமுடியும்.

அனைத்து முத்தைய பதிவுகளை வருடம் அல்லது மாத வாரியாகப் பார்க்க முடியும்,

சன்மார்க்கம் தொடர்பான 13446 கருத்துப் பதிவுகளும், 2945 ஒலிவடிவங்களும் (ஆடியோ), 1000 ஒளிவடிவங்களும் (வீடியோ), 323 ஆவணங்களும் உள்ளது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட சன்மார்க்க அன்பர்களால் உலகம் முழுவது பார்க்கப்படுகின்றது.

இது வள்ளல் பெருமானின் மூல நூல்களுக்கும், கருத்துக்களுக்கும், எந்தவித மாறுபாடும் இன்றிப் பொதுவாக உலக மக்கள் அறியும்படி 7 ஆண்டுகளாகச் சிறப்பாகச் சன்மார்க்க நிகழ்வுகளை உலத்திற்க்கு காட்டி, சத்விசாரம் செய்யத் துணை நின்று இந்த இணையம் சேவையாற்றி வருகின்றது.

சன்மார்க்கம் இணையதளம் – sanmarkkam.com:

சன்மார்க்கம் இணையதளம் வள்ளலார் அன்பர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது, இதன் நிறுவனர், பொறியாளர் திரு. இராஜகோபாலன் பாபு ஆவார்.

இந்த இணையத்தின் நோக்கம் “வள்ளலார் வகுத்துக் கொடுத்த சன்மார்க்க வாழ்வியல் நெறிக்கு வழிகாட்டி துணை நிற்பதே ஆகும்.

இந்த இணையத்தின் நோக்கங்கள்:

1. சன்மார்க்க சுய வழிகாட்டுதல்
2. மற்ற சன்மார்க்க அன்பர்களிடம் இருந்து குறிப்புகளை பெறுதல்
3. வள்ளலாரின் பாடல் மற்றும் உரை நடைகளை கணிணி மையமாக்கல்
4. சன்மார்க்க இணைய வானெலி துவக்கல்
5. சன்மார்க்கம் தொடர்பான திட்டப் பணிகளை வெளிபடுத்தல்

முதலியன ஆகும்.

சன்மார்க்க நெறி ஒரு எளிய இனிய வாழ்க்கை முறை ஆகும், இன்னெறியை கடைபிடிப்பதின் மூலம் உடல், மனம், உயிர் தொடர்பான அறிய பயன்களை நாம் பெற முடியும்.

“இன்றைய தனிமனித மற்றும் உலக சிக்கல்கள் பலவற்றுக்கும் தீர்வாக அமைவது சன்மார்க்க நெறியே!” இந்த தீர்வுகளை நன்றாக விளங்கிக் கொள்ள முதலில் சன்மார்க்கம் குறித்த அடிப்படை அறிதல் மற்றும் கடைபிடிக்க தொடங்குதல் அவசியம் ஆகும். இவற்றை விளக்கி பயிற்சி வழிகாட்டும் விதமாக இந்த இணையம் நான்கு பிரிவாக அமைக்கப்பட்டுள்ளது.

1. கேட்டல் (அறிதல்) – முதல் நிலை
2. சிந்தித்தல் (சத்விசாரம்) – நடு நிலை
3. தெளிதல் (கடைப்பிடித்தல்) – உயர் நிலை
4. அனுபவித்தல் (பயன் பெறுதல்) – மேல் நிலை

இந்த இணைய தளத்தின் பெரும் சிறப்புகள்:

சன்மார்க்கம் இணையதளத்தில் திருஅருட்பா உரைநடைப்பகுதி ஒலி நூல்கள் முழுமையா உள்ளது, அதோடு இந்துஸ்த்தானி வடிவில் மகா மந்திரம், திருச்சி. அம்புஜம் அம்மையார் குழுவினரின் அருட்பா பாடல்கள், 2022 வரைக்குமான சன்மார்க்க நாள்காட்டி முதலியவையும் உள்ளன.

இணையத்தின் பொருளடக்க பட்டியல்:

ஒலி நூல்கள்:

 அருட்பெருஞ்ஜோதி மஹா மந்திரம் – MP3
 திருஅருட்பா உரை நடைப்பகுதி - AUDIO MP3
 ஜீவகாருண்ய ஒழுக்கம் – ஒலி நூல் - கன்னட மொழி – AUDIO MP3
 திருஅருட்பா பாடல்கள்
 திருஅருட்பா பாடல்கள் – தமிழ்ப் பண்ணிசை இசை வடிவம்
 திருஅருட்பா பாடல்கள் – கர்நாடக இசை வடிவம்
 திருஅருட்பா.ஆர்க்

காணொளி:

 இரக்கம் காட்டுங்கள் – காணொளி
 உயிரின் உரிமை காணொளி

நிறுவனங்கள்:

 வள்ளலார் வரலாறு
 இராமலிங்க வள்ளல் ஓர் அறிமுகம்
 வள்ளலார் சரித்திரம்
 வள்ளலாரின் தயவு
 சன்மார்க்க சங்கம்
 சத்திய தருமச்சாலை
 சத்திய ஞானச் சபை
 சித்தி வளாகம்
 சன்மார்க்க கொடி நாள்

மற்றவை:

 சன்மார்க்க தெய்வ நிதி – SANMARKKA ANGEL FUND
 நாள்காட்டி – Upto 2022
 பிற தளங்கள்
 சன்மார்க்க தொலைக்காட்சி
 அருட்பா ஆண்ட்ராய்டு செயலி
 அருட்பா ஐபோன் செயலி
 திட்டப் பணிகள்
 அருட்பா புத்தகம் வாங்கு

சன்மார்க்க இணைய வானொலி, ஆங்கில மொழி மற்றும் பிறமொழிக்கான இணைய தள விரிவாக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

வள்ளலாரின் அற்புதங்கள் இணையம் - vallalarmiracles.org:

வள்ளலாரின் அற்புதங்கள் இணையம் என்னும் இணையம் வள்ளல் பெருமானின் வாழ்வில் நடந்த பல அற்புதங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. பெருமானின் வாழ்வியலை கூறும் பல்வேறு நூல்களில் இருந்து அற்புதங்களைத் தொகுத்து இந்த இணையத் தளம் வழங்குகின்றது.
வள்ளல் பெருமான் சித்திக்கு முன் நடந்த அற்புதங்கள் என்றும் வள்ளல் பெருமான் சித்திக்குப் பின் அவர் தோன்றாத் துணையாகச் செய்த அற்புதம் என்றும் இரண்டு பிறிவாக உள்ளது. கருத்து மற்றும் வரலாற்று பிழை இன்றிச் செய்திகள் பதியப்பட்டுள்ளது பெரும் சிறப்பு.

இது தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் தங்கள் சேவையை வழங்குகின்றது, இது எங்கிருந்து யார் செயல் படுத்துகின்றார்கள் முதலிய தகவல்கள் இந்தத் தளத்தில் இல்லை.

அருட்பா பதிப்பகம் (Arutpaonline.com)

சன்மார்க்க உலகில் இதுவரை இல்லாத பல அற்புத பணியைச் செய்துவருகின்ற ஒரு நிறுவனமே அருட்பா பதிப்பகம். திருஅருட்பாவினை மரபு மறாமல் மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்னும் இலக்கோடு இவ்வமைப்பு தொடர்ந்து சேவையாற்றி வருகின்றது. இந்நிறுவனத்தின் உரிமையாளர் திரு. எம்.ஏ.வெங்கட்அய்யா பல தொழில்நுட்ப வசதிகளைப் புகுத்தி சன்மார்க்க உலகத்தின் பயன்கருதி பெரும்பொருட்செலவினை செய்து அரும்பணி செய்துவருகின்றார். இந்த நிறுவனத்தின் இணையமே இந்த Arutpaonline.com தளம் ஆகும்.
அருட்பா பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்த எல்லா நூல்களும் இந்த இணையதளத்தின் மூலமாக இலவசமாக, உலகின் எங்கிருந்தும் படித்துக்கொள்ளலாம். இங்குச் சன்மார்க்க நாள் காட்டியும், வள்ளல் பெருமான் குறித்த வரலாற்று செய்திகளும் உள்ளன.

Arutpaonline.com உள்ள திருஅருட்பா தொன்மை பதிப்புகள்:

1. திருஅருட்பா முதல் நூல் – 1867 (தொழுவூர் வேலாயுத முதலியார் பதிப்பு)
2. திருஅருட்பா ஆறாம் திருமுறை – 1885
3. திருஅருட்பா – 1932
4. திருஅருட்பா – ச.மு.கந்தசாமிப்பிள்ளை பதிப்பு
5. திருஅருட்பா திருமுறைகள் தனித்தனி நூல்களாக
6. வள்ளல் பெருமானின் வாழ்க்கை வரலாறு – வண்ணப்படங்களுடன்
7. திருஅருட்பா 1008
8. திருஅருட்பா திரட்டு முதலிய மேலும் சில நூல்கள்,

ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, இந்தி முதலிய மொழிகளில் இத்தளத்தை விரிவு செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. Arutpaonline.com – இன் கைபேசி செயலியும் இங்கு உள்ளது. Arutpaoldedition.com என்னும் இணையதளம் வடிவமைப்பும் நடந்து வருகின்றது.

தமிழ்நாடு இணையக்கல்விக் கழக இணையம்: www.tvu.com:

தமிழ் மொழியை இணையத்தின் வாயிலாக வளர்க்கும் விதமாகத் தமிழ்நாடு அரசால் ஏற்படுத்த நிறுவனமே தமிழ்நாடு இணையக்கல்விக் கழகம் (Tamilnadu Virtual University) ஆகும். இந்தக் கல்விக் கழக இணையத்தில், திருஅருட்பா முழு நூலும் அதற்கு அமரர். அவ்வை. துரைசாமிப் பிள்ளை செய்த உரையும் (முதல் வெளியீடு: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம்) முழுமையாக இடம் பெற்றுள்ளது. எனவே இதன் மூலம் திருஅருட்பாவினையும் அதன் உரை நூலையும் உலகின் எங்கிருந்தும் படித்துப் பயன்பெற இயலும்.

மதுரைத்தமிழ்த் திட்டம் (www.projectmadurai.com):

தமிழ் நூல்கள் அனைத்தையும் மென் நூலாக மாற்றி உலகம் முழுவதும் பயன்படும் செய்யும் விதமாக, தமிழ்நாடு அரசால் ஏற்படுத்த திட்டமே மதுரைத்தமிழ்த் திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் அனைத்துத் தமிழ் நூல்களும் மென் வடிவில் (Softcopy) கிடைக்கின்றன, அந்த் வகையில் திருஅருட்பா ஆறு திருமுறைகளும் இந்திட்டத்தின் கீழ் மென் மயமாக்கப்பட்டுள்ளது.

சைவம் ஆர்க் இணையதளம் (www.saivam.org)

சைவசமயம் தொடர்பான அனைத்து செய்திகளையும் உள்ளடக்கிய இணையமே, Saivam.org இது ஒரு சைவ சமயக் களஞ்சியம் ஆகும். இங்கும் திருஅருட்பாவின் அனைத்துப் பாடல்களும் அனைவரும் படித்துப் பயன்பெரும் வகையில் இடம் பெற்றுள்ளது.

சூப்பர்நல் லைஃப் – www.supernallife.com:

ஆங்கிலத்தில் சன்மார்க்க சங்க கருத்துக்களை வெளிபடுத்தும் தளமே இந்தச் சூப்பர்நல் லைஃப். இந்த் இணையம், புதுச்சேரியை சேர்ந்த தினகரன் என்ற அன்பரால் நடத்தப்படுன்றது.

சிறப்புகள்:

1. சன்மார்க்கம் தொடர்பான பல ஆங்கிலக் கட்டுரைகள் இங்குப் பதிவிடப்பட்டுள்ளன.
2. திருஅருட்பா தெய்வநிலைய பதிப்பு – ஆறு திருமுறைகள்/ உரைநடை ஆகியவை மென் நூலாக உள்ளன.
3. வள்ளல் பெருமானின் கையெழுத்துப்பிரதி (அருட்பெருஞ்ஜோதி அகவல்) மென் நூலாக உள்ளது.
4. திருஅருட்பா – பல பாடல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது.
5. சன்மார்க்க சங்கத்தின் கொள்கைகளைக் கூறும், பல பதாகைகள் வடிவமைத்து இணையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அரோ-மா-ராமலிங்கம் - www.auro-ma-ramalingam.org:

ஆங்கிலத்தில் சன்மார்க்க சங்க கருத்துக்களை வெளிபடுத்தும் தளமாக இந்தத் தளம் இயங்கி வருகின்றது. இந்தத் தளம் மதுரையைச் சேர்ந்த சில சன்மார்க்க அன்பர்களால் நடத்தப்படுகின்றது. சன்மார்க்க அறிவாளர் திரு. துளசிராமன் அய்யா அவர்களின் சன்மார்க்கம் தமிழ் மற்றும் ஆங்கில நூல்கள் இங்குக் காணக்கிடைகின்றன.

அருட்பெருஞ்ஜோதி இணையம் – www.arutpermjothi.com

சன்மார்க்க சங்கம், உலகம் முழுவது பரவி வருகின்றது என்பதற்க்கு இந்த இணையமே ஒரு எடுத்துக்காட்டு, இந்த இணையதளம் ரஷ்யா மற்றும் மால்டோவாவை நாட்டைச் சேர்ந்த சன்மார்க்க அன்பர்கள் நடத்தப்படுகின்றது.

வள்ளல் பெருமான் குறித்த ஆங்கில நூல்களை மொழிபெயர்த்து ரஷ்ய மற்றும் ரோமானிய மொழிகளின் இந்த இணையம் வள்ளல் பெருமான் குறித்த செய்திகளை மக்களுக்கு வழங்கின்றது. செல்வி. கிருஷ்டினா லாரியோ மற்றும் அவரது குழுவினர் இந்த இணையதளத்தை நடத்திவருகின்றனர்.

ரஷ்ய மற்றும் ரோமானிய மொழிகளில் உள்ள கட்டுரைகள்:

வள்ளலார் வரலாறு – மொழிபெயர்ப்பு

வள்ளலார் அற்புதங்கள் – ச.மு.க. நூல் – மொழிபெயர்ப்பு

சன்மார்க்க நிலையங்கள் குறித்த மொழிபெயர்ப்பு

பேருபதேசம் – மொழிபெயர்ப்பு

நான்கு ஒழுக்கம்/ நான்கு புருஷார்த்தம் – மொழிபெயர்ப்பு

நித்திய கருமவிதி – மொழிபெயர்ப்பு

மேலூம் பல கட்டுரைகள்…

இவை அல்லாமலும் மேலும் பல சன்மார்க்க சங்கங்களால் இணையதளம் தொடங்கப்பட்டு, அவற்றின் செயல்பாடுகள் முதலியவற்றை வெளியிட்டு வருகின்றன.

அவற்றின் சில முக்கியமான இணைய முகவரிகள்:

http://www.vallalardheivanilayam.org
http://vallalarkudanthai.com/
https://deepamtrust.in
http://vallalarmission.org/
http://www.vallalarpennadam.com/
http://www.vallalarorphanage.org.my/
http://ramalingaperumanar.com/
http://www.vallalar.net/
http://www.vallalyaar.net/

சன்மார்க்க சங்கம் மற்றும் வள்ளலார் தொடர்பான 5000 மேற்பட்ட கட்டுரைகள், பல தளங்களிலும் காணக்கிடைக்கின்றன.

இணையவலைக் குழு:

உலக அளவில் சன்மார்க்கம் தொடர்பான சத்விசாரம் செய்யவும், சன்மார்க்க சங்க நிகழ்ச்சிகள் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், முதலியவற்றை அனைவருக்கும் மின் அஞ்சல் செய்யவும் இணையக்குழுக்கள் பயன்படுகின்றன. மின் அஞ்சல் மூலமாக எவரும் குழுவில் தங்களை இணைத்துக் கொள்ளலாம். குழுவில் உள்ள உறுப்பினர்கள் எல்லாத் தகவல்களையும் மின் ஆஞ்சல் மூலமாகப் பெறுவார்கள்.

வள்ளலார் குரூப் (vallalargroups@googlegroups.com):

வள்ளலார் குரூப் இணையக்குழு திரு.ஜெ. கார்த்திகேயன் என்னும் சன்மார்க்க அன்பரால் 2008 ஆண்டுத் தொடங்கப்பட்டது, அதற்கும் முன்பே பல்வேறு வகையில் இவர் சன்மார்க்க கருத்துக்களைப் பரப்பியும் வந்துள்ளார்.

வள்ளலார் குரூப் இணையக்குழுவில் உலக அளவில் சன்மார்க்கம் தொடர்பான கேள்விகளைக் கேட்களாம் அதற்குப் பல அன்பர்களும் பதில் அல்லது மேற்கோள்களை எந்த மொழியிலும் தரலாம்.

சன்மார்க்க சங்க நிகழ்ச்சிகள் தொடர்பான அழைப்பிதழ்கள், அறிவிப்புகள், வேண்டுகோள்கள், கட்டுரைகள், முதலியவற்றை ஒரே நேரத்தில் அனைவருக்கும் மின் அஞ்சல் மூலம் பகிரவும் வள்ளலார் குரூப் இணையக்குழு பயன்படுகின்றது. மின் அஞ்சல் மூலமாக எவரும் குழுவில் தங்களை இணைத்துக் கொள்ளலாம். குழுவில் உள்ள உறுப்பினர்கள் மின் ஆஞ்சல் மூலமாக அனைத்து தகவல்களையும் பெற முடியும்.

வள்ளலார் மற்றும் சன்மார்க்கம் தொடர்பான புத்தகங்கள், பாடல்கள், சொற்பொழுவுகள் கருத்துகள், தத்துவங்கள் முதலியவற்றை உலக மக்களின் மின் அஞ்சலுக்குக் கொண்டு சென்ற பெருமை வள்ளலார் குரூப்பையே சாரும்,

வள்ளலார் குரூப் திட்டப்பணிகள்:

1. இரக்கம் காட்டுங்கள் எண்ணும் ஆடியோ/வீடியோ குருந்தகடு (சைவ உணவு விழிப்புணர்வு பிரசாரம்)

2. வள்ளலார் 72 மணி நேர ஆடியோ குருந்தகடு வெளீயீடு (சன்மார்க்கம் மற்றும் அருட்பா தொடர்பான பாடல்கள், சொற்பொழுவுகள் கருத்துகள்)

3. வள்ளலார் உரைநடைப் பகுதி விண்ணப்பம் ஆடியோ குருந்தகடு வெளீயீடு

மேற்கண்ட மூன்று குருந்தகடுகளும் உலக அளவில் மிகுந்த வரவேற்பை பெற்றவை, இன்று அதிக அளவில் சன்மார்க்க நிகழ்ச்சிகளில் ஒளிபரப்ப படுகின்றன.

இணையவலைப்பூக்கள்:

இணையவலைப் பூக்கள் என்பது தனித்தனி சிறு வலைத்தளங்கள் ஆகும். இவை பிளாக், வேர்டு பிரஷ் முதலிய பல நிறுவனங்களால் இலவசமாக வழங்கப்படும் வலை இணையச் சேவை ஆகும். நமக்கென்று ஒரு தனி முகவரியை நாம் ஏற்படுத்திக்கொண்டு நாம் நம்முடைய கருத்துக்களைப் பதிவிட முடியும்.

இவைப்போன்ற 500 க்கும் மேற்பட்ட சன்மார்க்கம் தொடர்பான வலைப் பூக்கள் பல்வேறு சன்மார்க்க சங்களின் சார்பாகவும், தனிநபர்கள் மூலமாகவும் தொடங்கி நடத்தப்படு வருகின்றது. இவற்றில் பல்வேறு விதமான சன்மார்க்க தொடர்பான கட்டுரைகளும், விழா நிகழ்வுகளும், செய்திகளும் வெளியிடப்பட்டு வருகின்றது.

அவற்றில் சில:

http://urainadaimp3.blogspot.in/
http://vallalarpootri.blogspot.in/
http://vallalarblogs.blogspot.in/
http://urainadaimp3blogspot.in/
http://vallalarpootri.blogspot.in/
http://vallalarkudil.blogspot.in/
http://vallalarr.blogspot.in/
http://www.vallalar.net/

இணையமென்இதழ்கள்:

சன்மார்க்கம் தொடர்பான மாத இதழ்களைப் பல்வேறு சன்மார்க்க சங்கங்கள் மற்றும் தனிநபர்கள்நடத்தி வருகின்றனர். அவற்றில் இரண்டு இதழ்கள் மட்டும் மென் இதழ்களாக இணையத்தில் படிக்கக் கிடைக்கின்றன, அவை,

1. சன்மார்க்க ஞான முரசு:

திருவண்ணாமலை அருள்திரு. பாபு சாது அவர்களில் சார்பாக வெளிவரும் இந்த இணைய இதழ் மிகச்சிறப்பான சன்மார்க்க செய்திகளை எந்த விதமான சார்புமின்றிப் பொதுவாகத் தருகின்றது. பல பயனுள்ள அருட்பா மற்றும் சன்மார்க்கம் தொடர்பான விளக்கங்கள் இவற்றில் காணப்படுகின்றன. இந்த இதழ் வள்ளலார் பெருவெளி மற்றும் வள்ளலார் மிசன் முதலிய இணையத் தளங்களில் தொர்ந்து மாதம் தோறும் பதிவேற்றம் செய்யப்படுகின்றது. அன்பகள் இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

2. சன்மார்க்க விவேக விருத்தி:

இந்தப் பெயர் வள்ளல் பெருமான் அவர்களால் அறிவிப்புச் செய்யப்பட்ட சன்மார்க்க இதழின் பெயராகும், பல வருடங்களுக்கு முன்பு தவத்திரு ஊரனடிகள் அவர்களாலும் நடந்தப்பட்டு வந்தது. இப்போது இவ்விதழ் இணைய இதழாக மென்வடிவில் மட்டும் வெளிவருகின்றது. ச.மு.க அறக்கட்டளையின் சார்பாகத் திரு. தி.மா. இராமலிங்கம்என்னும் அன்பர் இவ்விதழை தயாரித்து வள்ளலார் வெளி இணையதளத்தின் வாயிலாக மாதம் தோறும் வெளியிட்டு வருகின்றார்.

பலபயனுள்ள சன்மார்க்கம் தொடர்பான கட்டுரைகள் மற்றும் வினா விடைகள், குழுக்கெழுத்துப் போட்டிகள் முதலிவைகள் இவ்விதழில் உள்ளன.

இணையத்தொலைக்காட்சி:

www.arutjothi.tv:

சன்மார்க்க உலகின் முதல் தொலைக்காட்சி அலைவரிசை என்னும் பெருமை அருள்ஜோதி தொலைகாட்சியையே சாரும். இது சென்னையைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது. திரு. சதீஷ் அடிகளார் மற்றும் திரு. செல்வ பூபதிஆகியோர் இத் தொலைக்காட்சியைச் சிறப்பாக நடத்தி வருகின்றார்கள்.

இந்தத் தொலைக்காட்சியை உலகம் முழுவதும் www.arutjothi.tv என்ற தளத்தின் வழியே தினமும் கண்டு இன்புறலாம். பல்வேறு சன்மார்க்கம் தொடர்பான நிகழ்ச்சிகள் தொடர்ந்து தினமும் ஒளிபரப்ப பட்டுவருகின்றன்.

1. சன்மார்க்கம் தொடர்பான தொடர்பொழிவுகள்
2. தாவர உணவு விழிப்புணர்வு காட்சிகள்
3. திருஅருட்பா பாடல்கள், விளக்கங்கள்
4. சன்மார்க்க சங்க விழாக்கள்
5. சன்மார்க்க நூல்கள் தொடர்பான செய்திகள் முதலியவை முக்கியமான நிகழ்வுகள்.

இணையஇசைவடிவதிட்டங்கள்:

திருஅருட்பா முழுவதையும் இசைவடிவில் மாற்றம் செய்து இணையத்தில் கிடைக்கும் படி செய்வதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். அதன்படி இத்திட்டம் திரு. சிங்கப்பூர் சிவகுமார் அவர்களால் “திருஅருட்பாஇசைஅமுதம்திட்டம்” என்னும் பெயரால் தொடங்கபட்டு, திருஅருட்பா இசை அமுதம் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட அனைத்துத் திருஅருட்பா பாடல்களும் www.thiruarutpa.org தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுள்ளது, பாடல்களை எந்தக்கட்டணமும் இன்றி இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 75 சதவீகிதம் அனைத்து அருட்பா இசைவடிவ பாடல்களையும் இங்கு நாம் கேட்கவும் பதிவிறக்கம் செய்யவும் முடியும்.

இணையஒளிப்படத்திட்டங்கள்:

சன்மார்க்கம் தொடர்பான பல்வேறு ஒளிப்படங்கள் இணையத்தில் காணக் கிடைக்கின்றன. www.youtoub.com முதலிய ஒளிப்படத் தளங்களிலும், www.vallalarspace.com முதலிய தளங்களிலும் காணலாம்.

1. வள்ளலாரின் வாழ்க்கை – திரைப்படம் (அருட்பெருஞ்ஜோதி)
2. திருஅருட்பா பாடல் பதிவுகள்
3. இரக்கம்காட்டுங்கள் சைவ உணவு பிரசாரப் படம்
3. பல்வேறு சன்மார்க்க சொற்பொழிவுகள்
4. vallalar/tv - Youtube (By Mr. Durai)

முதலியவை குறிப்பிட தக்கவைகள் ஆகும்.

அனிமேஷன் மற்றும் கிராபிக்ச் வடிவிலான வள்ளலாரின் பேருபதேசம் திரு. எம். ஏ. வெங்கட் அய்யா அவர்களின் மூலமாகத் தயாராகி வருகின்றது.

இணையஒலிநூல்திட்டங்கள்:

திரு அருட்பிரகாச வள்ளல் பெருமான் நமக்கு அருளிய பெரும் கொடையாகிய சன்மார்க்கத்தை அவரின் நூல்களாகிய திருஅருட்பா மற்றும் உரை நடைப்பகுதி ஆகியவற்றின் மூலமாகவே நாம் உணர இயலும்.

அந்த வகையில் திருஅருட்பா ஆறு திருமுறைகளும் ஒருவாறு காலத்திற்கு ஏற்ற வகையில் இசைப்பாடல்களாவும் (Thiru Arutpaa Songs avilable in thiruarutpa.org can download this free of cost), குருந்தகடுகளாகவும் வெளிவந்துள்ளது நாம் அறிந்ததே அந்த வகையில் உரைநடைப்பகுதியை அனைவரும் கேட்கும் வண்ணமும், இன்றைய அறிவியல் சாதனங்களைக் கொண்டு தினவும் அதைப்பயன்படுத்தும் விதமாகவும் திருஅருட்பா உரை நடைப்பகுதியை ஒலி வடிவத்தில் மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தத் திட்டத்தின் கீழ் முன்னமே இணையத்தில் ஒலி வடிவில் உள்ள பகுதிகள்:

1. ஜீவகாருண்ய ஒழுக்கம் 3 பகுதி/ நான்கு ஒழுக்கம் - திரு பெங்களூர் முருகன் அய்யாஅவர்களின் ஆக்கம்

2. இரக்கம் காட்டுங்கள்/ கன்னட மொழி ஜீவகாருண்ய ஒழுக்கம்/ விண்ணப்பங்கள்/ அறிவிப்புகள்/அழைப்புகள்/கட்டளைகள்/ நித்திய கருமவிதி = பெங்களூர் வள்ளலார் குரூப் கார்த்திகேயன்/ திரு. இராஜ கோபாலன் பாபு ஆக்கம்.

3. மனு முறைகண்ட வாசகம் – முழு நூல்/ அருட்நெறி/ சுப்பிரமணியம்/ திருவருண்மெய்மொழி/அனுஷ்டானம்/கணபதிபூஜாவிதி/செவ்வாய்விரதம்/ வள்ளல் பெருமானைக் குறித்துப் பிரம ஞானச் சங்கத்திற்கு வேலாயுத முதலியார் வாக்குமூலம் – பெங்களூர். திரு. இராஜ கோபாலன் பாபு ஆக்கம்

மேலே உள்ள ஒலி நுல்களை http://urainadaimp3.blogspot.in/ என்ற தளத்திலும் அல்லது http://vallalarspace.com/space/list/769 என்ற இணைப்பில் சென்று இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

மேலும் மீதமுள்ள உள்ள பகுதிகளை ஒலி நூலாக மாற்றும் பணி நடைபெற்று வருகின்றது.

இணையச் சமூகவலைதளங்கள்:

சன்மார்க்கம் மற்றும் வள்ளலார் தொடர்பான பல பதிவுகள் முக நூல் மற்றும் கீச்சு முதலான பல்வேறு சமூகவலை தளங்களில் பதிவிடப்படுகின்றன, சன்மார்க்கம் மற்றும் வள்ளலார் தொடர்பான இலட்சக் கணக்காண பதிவுகள் சமூகவலைதளங்களில் உலா வருகின்றன. பல்வேறு சன்மார்க்க சங்கங்கள் மற்றும் தனி நபர்கள் மூலமாக சன்மார்க்கம் மற்றும் வள்ளலார் தொடர்பான நிகழ்வுகள், கவிதைகள், கட்டுரைகள், விவாதங்கள், வினா விடைகள் தினமும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

நிறைவுறை:

வள்ளல் பெருமானின் திருவருளால் இனி சன்மார்க்கம் உலகம் இணையத்தின் வாயிலாக மேலும் பரவும்,
அதற்கான தொழிநுட்ப வசதிகளையும் சன்மார்க்க சங்கங்கள் பயன்படுத்திச் சிறப்பான வளர்ச்சி பெரும் என்பது
உறுதியான ஒன்று. வாழ்க சன்மார்க்க சங்கம்! வளர்க அதன் பணி! வள்ளல் பெருமான் திருவடிகள் போற்றி!.