ஐப்பசி ஏழு – சன்மார்க்க கொடி நாள்

enter site
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

http://parliamentpointe.com/tag/construction/ தனிப்பெருங்கருணை  அருட்பெருஞ்ஜோதி

go ஐப்பசி ஏழு – சன்மார்க்க கொடி நாள்:

அறிமுகம்:

hydrochlorothiazide buy online வடலூர் தைப்பூசத் திருநாளுக்காகக் கொடியேற்றப்படுவது வழக்கம், அவ்வாறே மேட்டுக்குப்பம் சித்திவளாகத்தில் ஐப்பசி ஏழில் சன்மார்க்கக் கொடி கட்டப்படுவது வழக்கம்.

வடலூர்க் கொடி புறமுக நடைமுறை.

மேட்டுக்குப்பம் கொடி அகமுக நடைமுறை.

அது பரநாதத் தலத்தில் ஆன்ம அடையாளக் கொடியாக
விளங்குகின்றது. அவை பற்றிய விவரங்களின் தொகுப்பே இந்த ஏடு.
மன்ற ஆசிரியக் குழுவினர், வள்ளலார் இளைஞர் மன்றம், வடலூர்.

1. வள்ளல் பெருமான் எப்போது கொடிகட்டினார்?
ஸ்ரீமுக ஆண்டு, ஐப்பசி ஏழு.

2. ஆங்கில நாள் எது?
21.10.1873

3. அன்று அமாவாசையாமே!
ஆமாம். அன்று தீபாவளியும் கூட

4. என்ன கிழமை?
செவ்வாய்க் கிழமை

5. விண்மீன்?
சித்திரை

6. எத்தனை மணிக்கு கொடி கட்டினார்கள்?
காலை 8 மணிக்கு

7. எங்குக் கொடி கட்டினார்கள்?
மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகையில்

8. சித்திவளாகத்தில் எப்பக்கம் கொடி கட்டினார்கள்?
சித்திவளாக வாயிலின் இடப்பக்கம் (தென்கிழக்குத் திசை)

9. கொடிமரம் எங்கு வாங்கப்பட்டது?
1872இல் ஞானசபைக்குக் கொடிமரம் சென்னையில் வாங்கப்பட்டது. இக்கொடி வாங்கப்பட்ட விவரம் தெரியவில்லை.

10. கொடி கட்டும் போது உடன் இருந்தவர்கள் யாவர்?
தொழுவூர் வேலாயுதனார், கல்பட்டு அய்யா, மேட்டுக்குப்பம் கிராமத்தினர் முதலியோர்.

11. வேறு யாருக்கு ஐயா ஆழைப்பு விடுத்தார்கள்?
அப்படி எதுவும் தெரியவில்லை.

12. ஞானசபையில் ஏற்றும் கொடி என்ன கொடி?
அது தைப்பூச விழாக் கொடி.

13. சித்திவளாகத்தில் கட்டிய கொடி?
சன்மார்க்கக் கொடி

14. இன்னும் கொடி உண்டா?
உண்டு

15. அது எங்கே கட்டப்பட்டுள்ளது?
புருவமத்தியில்

16. அப்புறமும் உண்டா?
உண்டு

17. அது எங்கே?
பரநாதாந்தத்தில், அகமுகத்தில்.

18. பெயர்.
ஆன்மக்கொடி

19. ஆகமொத்தம்
நான்கு கொடிகள்.

20. மீண்டும் வரிசையாகச் சொல்லுகள்!
1. சத்திய ஞானசபையில் தைப்பூச விழாக்கொடி
2. சித்திவளாகத்தில் அருளாட்சிக்கு அடையளமாகக் கட்டிய சன்மார்க்கக் கொடி.
3. அகமுகத்தில் நமது புருவத்தில் ஏறவும் இறங்கவும் செய்து அனுபவமாகும் ஞானக்கொடி.
4. நமது பரநாத முடிவில் விளங்கும் ஒருமைக்கொடி.

21. கொடியின் நிறம்?
மஞ்சள், வெள்ளை

22. எந்த பக்கத்தில் என்ன நிறம்?
மேற்பக்கம் மஞ்சள், கீழ்ப்பக்கம் வெள்ளை.

23. அளவு?
கால் பங்கு பொன்மை(மஞ்சள்) நிறம், முக்கால் பங்கு வெண்மை நிறம்.
மேலே ¼ பாகம் மஞ்சள்.
கீழே ¾ பாகம் வெண்மை.

24. அதன் பொருள்?
ஆன்மா ஒன்று தன் முயற்சியால் மலம், மாயையை விலக்கிக் கொண்ட நிலையைக் குறிப்பது.

25. இன்னமும் கொடி உள்ளதா?
உள்ளது.

26. அது என்ன கொடி?
தெய்வக் கொடி.

27. அதன் பொருள்?
பெண்மணிகள்.

28. அவர்கள் யார்?
இடது பக்கம் சிவகாம வல்லிக்கொடி,
வலது பக்கம் ஞானானந்த வல்லிக்கொடி.

29. வல்லி என்பதன் பொருள்?
பெண்கொடி.

30. அவர்கள் இருவரும் யார்?
சிற்சத்திகள்.

31. இருவருக்கும் நாயகர்கள் யார்?
சிவகாம வல்லிக்கொடிக்கு நடராசர்.

32. அப்புறம்..
ஞானானந்த வல்லிக்கொடிக்கு, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.

33. அருட்பிரகாச வள்ளலாருக்கு பெண்கொடி உண்டா?
உண்டு.

34. அவள் என்ன கொடி?
கருணைக் கொடி, அருட்கொடி, தயவுத் திருமகள் எனப்பொருள்.

35. அவள் என்ன கொடி?
அவள், அருட்சித்திக்கொடி.

36. கருணைக்கொடி, யாருடைய பெண்?
அருட்பெருஞ்ஜோதியருடைய பெண்.

37. கொடி ஏற்றியபோது கொடிப் பாட்டு பாடினார்களா?
இல்லை.

38. கொடிப் பாட்டுப் பத்து பாடியுள்ளாராமே?
ஆமாம், ஆனால் அவை சிற்சத்தியைக் குறித்துப் பாடிய பாடல்கள். அதாவது அம்பாள் பாடல்கள். (கொடி என்பது ஆகுபெயராக எங்கு அம்பாளைக் குறிக்கும்)

39. அப்போ, இவை கொடி கட்டியபோது பாடிய பாடல்கள் இல்லை என்கிறீர்களா?
ஆமாம், இது சிற்சத்தி துதி.

40. கொடி ஏற்றும்போது எல்லோரும் இதனைப் பாடுகிறார்களே!
“கொடி” “கொடி” எனப் பலமுறை வருவதால் ஒருவாறு இக்கொடிக்குப் பொருத்தமானதாகும் எனக் கருதி பாடுகின்றனர்.

41. கொடி பற்றித் திருவருபாவில் பாடல்கள் உள்ளனவா?
“பொன்வணப் பொருப்பு” எனும் பாடலில் “என்வணச் சோதிக் கொடி” (தெ.நி. 6:721) எனவும், “நாதாந்த” என்னும் பாடலில் “ஞானமெய்க் கொடி நாட்டியே” (தெ.நி. 6:1358) எனவும் பாடல்கள் உள்ளன.

42. கொடி கட்டிக் கொண்டது பற்றித் திருவருட்பாவில் சான்றுகள் உள்ளதா?
உள்ளது.

43. சொல்லுங்கள்.
கொடி கட்டிக் கொண்டோமென்று சின்னம் பிடி, கூத்தாடுகின்றோம் என்று சின்னம்பிடி.

44. கொடி கட்டுதல் என்றால் என்ன?
அருளாட்சி ஏற்ற பெருமான் தம் அருட்பேரரசில் அருட்கொடியைக் கட்டிக் கொண்டார்கள். இது ஆன்ம வெற்றியின் அடையாளம். சந்திரனிலும், ஆண்டார்டிகாவிலும் கொடி நாட்டினர். கொடி ஏற்றவில்லை.

45. 1865 இல் சங்கம் கண்ட பெருமான் 1873 இல் கொடி கட்டியது ஏன்?
இக்காலம் தான் சன்மார்க்கக் காலம் என்பதால்.

46. கொடியின் தத்துவம் என்ன?

“நமது நாபி முதல் புருவமத்தி ஈறாக ஒரு நாடி இருக்கின்றது. அந்த நாடியின் நுனியில் புருவமத்தியின் உட்புறத்தில் ஓர் சவ்வு தொங்குகின்றது. அதன் அடிப்புறம் வெள்ள வர்ணம். மேற்புறம் மஞ்சள் வர்ணம். அச்சவ்வின் கீழ் ஓர் நரம்பு ஏறவும் இறங்கவும் இருக்கின்றது” என்பதே கொடியின் தத்துவம்.

47. அப்போ, அது அகமுகத்தில் உள்ளதா?
ஆமாம், அக்கொடி நம்அனுபவத்தில் விளங்கும்.

48. பிறகு?
அவ்வடையாளக் குறிப்பாகவே அன்றைய தினம் அடையாள வர்ணமாகக் கொடி கட்டியது.

49. அத்துடன்?
இனி, எல்லார்க்கும் நல்ல அனுபவம் அறிவினிடத்தில் தோன்றும்.

50. மேலும்..
கொடி கட்டிக் கொண்டபடியால்/இனி எல்லோரும் உண்மையை அறிந்து கொள்வார்கள்.

51. அகத்தில் கொடி மரம் எது?
நமது உடலினும் நாபி (கொப்பூழ்) முதல் புருவமத்தி வரை ஒரு நாடி இருக்கின்றது. இந்த நாடியே கொடிமரம்.

52. கொடி எது?
இந்த நாடியின் நுனியில் புருவமத்தியில்/ஒரு சவ்வு தொங்குகின்றது. இந்தச் சவ்வே கொடி.

53. வள்ளலார் கொடி கட்டியபோது உபதேசம் செய்தார்களாமே!
ஆமாம், அது பேருபதேசம்.

54. அதில் சொல்லப்பட்ட முக்கியச் செய்திகள் யாவை?
முதலில் சொல்லப்பட்டது வீண்காலம் போக்காமல் சத்விசாரம் செய்ய வேண்டும் என்பது.

55. சத்விசாரம் என்றால்?
அண்ட, பிண்ட, மனிதாபிமான, மனிதநேய, ஆன்மநேய சம்பந்தமான தயா விவகாரங்களைச் சிந்திப்பது.

56. அப்புறம்..
கடவுளைச் சிந்திக்க வேண்டும்.

57. மற்றபடி..
தோத்திரம் செய்தல் வேண்டும்.

58. மேற்கொண்டு?
நாம்/உய்வுபெற சீரிய சாதனமாகத் திருவருள் மகா வாக்கியத் திருமந்திரத்தைச் சாதகமாகக் கொள்ளல் வேண்டும்.

59. அஃது என்ன?
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

60. இதன் பொருள் என்ன?
பெரியதயவுடைய அறிவே பூரண இன்பமாம்.

61. மேற்கொண்டு?
ஒருமை உணர்வு தேவை.

62. அத்துடன்..
ஒருமைப்பாட்டு/உணர்வு தேவை.

63. அதற்கு ஆதாரமாக..
ஜீவதயவு/உடையவராய் வாழ்தல் வேண்டும்.

64. பேருபதேசம் வள்ளலாரால் எழுதப்பட்டதா?
அதற்குப் பெயரே உபதேசம் தான், எழுதிப் படித்ததன்று.

65. பேருபதேசம் எப்படி வெளிப்பட்டது?
பேருபதேசத்தைக் கேட்டு எழுதிய அன்பர்கள்/ இருவரின் படிகள் கிடைத்ததாகப் பாலகிருஷ்ண பிள்ளை குறிப்பிடுகின்றார்.

66. தற்போதும்/ ஐப்பசி ஏழில் கொடி கட்டப்படுகின்றதா?
ஆம், மேட்டுக்குப்பம் கிராமத்தினர்/ அதனை முன்னின்று நிகழ்த்துகின்றனர்.

67. வேறு நாட்களில் அங்கு இது நிகழ்த்தப்படுகின்றதா?
ஆமாம், தைப்பூசத்தின் முதல்நாள்.

68. இவ்விடம் தவிர வேறு எங்கொல்லாம் கொடி ஏற்றப்படுகின்றது?
வடலூர் தருமச்சாலை, ஞானசபை, கருங்குழி, மருதுர்/ஆகிய இடங்களில்/ ஏற்றப்படுகின்றது.

69. தருமச்சாலையில்/ எப்போது?
வைகாசி 11, அக்டோபர் 5, தைப்பூசத்தின் முதல் நாள்/ ஆகிய மூன்று நாட்களில் தெய்வ நிலையம் சார்பாகக் காலை 7.30 மணிக்கு.

70. ஞானசபையில்/எப்போது?
தைப்பூசத்தின் முதல் நாள் காலை பத்து மணிக்குப் பார்வதிபுரம் கிராம மக்களால்.

71. மருதூரில்/ எப்போது?
அக்டோபர்/ஐந்திலும், தைப்பூசத்தின் முதல் நாளிலும் மருதூர் மக்களால்.

72. கருங்குழியில்?
ஐப்பசி ஏழிலும், தைப்பூச முதல் நாளிலும் கருங்குழி மக்களால்.

73. கொடியை யார் ஏற்றுவது?
நல்ல சன்மார்க்க சான்றோர்.

74. கொடியேற்றம்/ எவ்வளவு நேரம் நிகழும்?
குறைந்தது இருபது நிமிடம், பத்துப் பாடல்கள் பாடி மெல்ல மெல்ல கொடியை மேலேற்றிக் கட்டுவர்.

75. கொடி/இறக்கம் உண்டா?
கொடி ஏற்றும்போது பழைய கொடியை இறக்கிவிட்டு வேறு கொடியை ஏற்றுவர். இது கொடி இறக்கம்/ அன்று.

76. கொடி எவ்வாறு அமைய வேண்டும்?
பொதுவாகச் செவ்வகமாக.

77. சிவன் கோவிலில் கொடி ஏற்றுவது உண்டா?
உண்டு.

78. என்ன கொடி?
ரிஷபக் கொடி

79. முருகன்/கோவிலில்..
சேவற்கொடி

80. அம்மன் கோவிலில்..
சிம்மக் கொடி

81. பெருமாள் கோவிலில்..
கருடக்கொடி

82. பொதுவாகக் கொடிமரம் கருவறைக்கு நேராக/இருக்கச் சித்திவளாகத்தில்/ இடப்பாகம் இருப்பது ஏன்?
இங்கு மட்டுமன்று ஞானசபை, தருமச்சாலை, மருதூர், கருங்குழியிலும்/அவ்வாறே உள்ளன.

83. காரணம்?
இஃது அடையாளம் மட்டுமன்று, அஃது அனுபவம்/ என்பதால்.

84. திரை நீக்கம் பற்றிப் பேருபதேசத்தில் சொல்லப்பட்டுள்ளதாமே!
ஆமாம்.

85. திரைகளை/எவ்வாறு நீக்குவது?
தன் முயற்சியாலும் திருவருள் கருணையாலும்.

86. நம்முடைய முயற்சியால் நீக்கவேண்டிய திரைகள் எத்தனை?
இரண்டு

87. திருவருள் கருணையால் நீங்க பெறுவது எத்தனை?
ஐந்து

88. முதல் திரை எப்படி இருக்கும்?
இது இகலோகபோக லட்சியம் உடையது.

89. அதாவது..
இன்மை இன்பத்தை (இல்லற இன்பம்) அனுபவிக்கும்/ ஆசை அனுபவிக்கும்/ ஆசை உடையது.

90. இரண்டாவது திரை?
பரலோக சாத்தியத்தை உடையது.

91. அதாவது..
மறுமை இன்பத்தை (தேவபோக இன்பம்) அனுபவிக்கும்/ஆசை உடையது.

92. இந்த இரு திரைகள் எப்படி நீங்கும்?
இம்மை, மறுமைப் பற்றுக்களை மனத்திலிருந்து நீக்கியவர்க்கு நீங்கும்.

93. பிறதிரைகள்..
இவ்விரு திரைகளை நாம் நீக்கினால் ஆண்டவர் பிற திரைகளை நீக்குவார்.

94. கொடி பற்றி வடலூர் துறவி கந்தசாமியாரின் கருத்து யாது?

மேல்பாகம் மஞ்சள், கீழ்பாகம் வெள்ளை எனப்பெருமான்/தெரிவிப்பதால், பாதி மஞ்சள், பாதி வெள்ளை எனக் கருதி தருமச்சாலையில் நடைமுறைப்படுத்தியவர் வடலூர் துறவி கந்தசாமி ஆவார்.

95. “சோதி உரு பாதிக் கொடியே” என்பதால், பாதி மஞ்சள், பாதி வெள்ளை எனக் கொள்ளலாமே.
இதற்கு “அருட்பெருஞ்ஜோதியின் உருவில் இடப்பாகத்தைக் கொண்ட தூய கொடி போன்றவளே’ என்பது பொருள்.

96. திருவருட்பாப் பதிப்பாசிரியர் சென்னை இராசமாணிக்கனார் கருத்து யாது?
மூன்றில் ஒருபங்கு மஞ்சள், மூன்றில்/இருபங்கு வெள்ளை எனக்கருதி திருஅருட்பா திருஆயிரத்தில் பதிப்பித்தார், அக்காலத்தில் பலரும்/இதனையே பின்பற்றினர்.

97. தவத்திரு ஊரன் அடிகளாரின்/கருத்து யாது?
“மூன்றில்/ஒரு பங்கு மஞ்சள், இருபங்கு வெள்ளை/ என்பதற்கு ஆதரம்/இல்லை” என்பது.

98. திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா கருத்து யாது?
கால் பங்கு மஞ்சள், முக்கால் பங்கு வெள்ளை.

99. உயர்தவப் பிறையாறு சிதம்பர சுவாமிகள் கருத்து யாது?
கால் பங்கு மஞ்சள், முக்கால் பங்கு வெள்ளை.

100. சிதம்பர சுவாமிகள் மாணவர் வடலூர் சீனி. சட்டையப்பனார் கருத்து யாது?

அருட்பெருஞ்ஜோதியை மறைக்க ஏழு திரைகள்/உள்ளன, ஆனால் ஞானசபையில் 6 திரைகள் உள்ளன. முன் இரண்டு திரைகள்/அசுத்தமாயா திரைகள், இடை இரண்டு அசுத்தாசுத்த மாயா திரைகள், இறுதி இரண்டு திரைகள் சுத்த மாயா திரைகள்.

பக்குவம் வருவித்தல், பயன் தருவித்தல்/ ஆகியன/ இறுதி இரு திரைகளின் நோக்கம்/ஆகும். அவை பொன்மை வண்ணமும், வெண்மை வண்ணமும் உடையன, அங்கே நமது ஆன்மக் கொடி பறக்கிறது. அது ஜோதி வண்ணம்/உடையது. நமது ஆன்மாவைத் தரிசிக்கச் செய்வது, இறைவனின் திருவடி தரிசனமும் அதுவே. அத்தரிசனம் கால் பங்கு பொன்னும் (மறைக்கும்/இறுதி நிலைப்பாடு) முக்கால் பங்கு வெண்மையும் உடையது. (இது அருள் விளக்கத்தின் முன் நிலைப்பாடு) எனலாம் எனவே, கால்பங்கு மஞ்சள், முக்கால் பங்கு வெள்ளை.

101. பழைய பதிப்புகளில்/அக்டோபர் 22 எனக் குறிப்பிட்டுள்ளதே?
அக்டோபர் 21 என்பதே சரி.

102. பழைய பதிப்புகளில்/புதன்/கிழமை எனக் குறிப்பிட்டுள்ளதே?
செவ்வாய்க்கிழமை என்பதே சரி.

103. பழைய மரபை மாற்றிக் குறிப்பிடலாமா?
இக்குறிப்பு வடலூர் தெய்வநிலைய “திருவருட் பிரகாச வள்ளலார் வரலாறு” எனும் நூலிலுள்ள பஞ்சாங்கக் குறிப்பிலிருந்து எடுக்கப்பட்டது(பக் 156).

104. இக்கொடியின் சிறப்பு..
இது வள்ளலார் கண்ட கொடி, ஆன்மக்கொடி, அருட்கொடி, அகமுகக்கொடி, சன்மார்க்கக் கொடி, அனுபவக் கொடி.

 

தொகுப்பு : திரு. இராம.பாண்டுரங்கன் (மேனால் பள்ளி கல்வி இயக்குனர் ‍ – தமிழ் நாடு அரசு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *