“வள்ளலாரின் சன்மார்க்க சங்கம்”

click here வணக்கம்,

here வள்ளல் பெருமானார் தோற்றுவித்த சன்மார்க்கம் சங்கம் ஆன்மாவினை அற நெறிபடுத்த தோற்றுவிக்கப்பட்ட அற்புத அமைப்பாகும், சன்மார்க்க சங்கம் குறித்து அன்பர்கள் எளிமையாக விளங்கிக்கொள்ள இந்த இனிய எளிய “வள்ளலாரின் சன்மார்க்க சங்கம் குறித்த வினா விடையை இங்கு தந்துள்ளோம்,

http://economylock.com/jobs/ இந்த வினா விடை வள்ளலாரின் வரலாறு மற்றும் திருஅருட்பா, உரைநடைப்பகுதி ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டது.

அன்பர்கள் படித்தும் மற்றவருடன் பகிந்தும், அச்சிட்டு வழங்கியும் பயன்பெறுவார்களாக!

வணக்கம்,

வள்ளலாரின் சன்மார்க்க சங்கம் குறித்த வினா விடை:

1. வணக்கம் அய்யா! அங்கே என்ன விழா?
வணக்கம் அய்யா அங்கே சன்மார்க்க சங்க விழா நடக்கின்றது.

2. சன்மார்க்க சங்கமா? அப்படியென்றால்?
இராமலிங்க அடிகளார் தோற்றுவித்த சங்கம்.

3. ஒகோ! வள்ளலார் என்று சொல்லுவார்கள் அவர்தானே?
வாழ்த்துக்கள்! சரியாகச் சொன்னீர்.

4. எனக்கு எதற்கு வாழ்த்து?
நீங்களும் எங்கள் சகோதரர் என்பதால்.

5. என்ன உரிமையில்?
ஆன்மா நேய ஒருமைப்பாட்டு உரிமைப்படி.

6. ஒகோ! சரி. சன்மார்க்கம் என்றால் என்ன?
“சத்” ஆகிய இறைவனை அடைய வழிகாட்டும் நெறி.

7. சங்கம் என்றால்?
ஆன்ம நேய உணர்வாளர்கள் ஒன்றுபடும் (சங்கமிக்கும்) இடம்.

8. எப்போது சங்கம் ஆரம்பமானது?
1865 – ஆம் ஆண்டு

9. எங்கே சங்கம் ஆரம்பமானது?
வடலூருக்கு அருகே உள்ள கருங்குழியில்.

10. இப்போது சங்கம் எங்கே இருக்கின்றது?
உலகம் முழுவதும் மற்றும் ஆன்ம நேய உணர்வாளர்கள் ஒன்றுபடும் இடமெல்லாம் சங்கம்.

11. கட்டிடம் உண்டா?
உண்டு, சத்திய தருமச்சாலை.

12. சாப்பாடு உண்டா?
அதுதான் முதலில்.

13. வழிபாடு உண்டா?
அது தான் முக்கியமாக உண்டு.

14. வழிபாடு எந்த கோயிலில்?
அது தான் “சங்கம் சார் திருக்கோயில் – ஞான சபை”

15. ஒகோ!
ஆமாம்.

16. நானும் சங்கத்தில் சேரலாமா?
முதல் வரிசை உமக்கு தான் வாரும்.

17. சங்கத்தில் எப்படி சேருவது?
ஆன்ம நேய உணர்வு வந்தால் சேரலாம்.

18. ஆன்ம நேய உணர்வு என்றால்?
மாமிசத்தை மறுப்பது, உயிர்க் கொலையை தவிர்ப்பது.

19. அப்புறம்?
பசிக்கு சேறுபோடுவது.

20. அப்புறம்?
அனைவரிடமும் இனிமையாக பேசுவது.

21. ஒகோ!
அப்படித்தான்.

22. சங்கத்தில் யார் சேரமுடியும்?
யார் வேண்டுமானாலும்.

23. ஆண்கள்?
அவர்கள் தானே முக்கியம்.

24. பெண்கள்?
அவர்கள் தானே மிக முக்கியம்.

25. குழந்தைகள்?
அவர்கள் தானே மிக மிக முக்கியம்.

26. வயதானவர்கள்?
அவர்களைச் சீக்கிரம் சேரச் சொல்லுங்கள்.

27. அப்படியா?
ஆமாம், ஆமாம்

28. சங்கத்தில் சேர எவ்வளவு கட்டணம்?
ஜீவகாருண்ய ஒழுக்கம் தான் கட்டணம்.

29. சங்கத்தில் கட்டுப்பாடு உண்டா?
ஆன்ம நேய ஒருமைப்பாடே கட்டுப்பாடு.

30. கொஞ்சம் விளக்கமாக சொல்லும் அய்யா?
நீங்கள் கேளும் அய்யா.

31. சன்மார்க்கத்திற்கு வர தகுதி?
சாதி மதம் முதலியவற்றை பற்றறக் கைவிடுவது.

32. அப்புறம்?
காமம், குரோதம்(பொறாமை) முதலியவற்றை ஞானஅறிவால் தடுத்துக் கொள்வது.

33. அப்புறம்?
மாமிசம், கொலை தவிர்ப்பது.

34. மேலும்?
பசிப்பிணி போக்குவது.

35. இன்னும்?
வள்ளலார் சொன்ன ஒழுக்கத்துக்கு வருவது.

36. ஒகோ!
ஆமாம்.

37. மதம் கூட தடையில்லையா?
அதன் மீது பற்றில்லாமல் இருந்தால் தடையில்லை.

38. இப்போதே சேர்ந்துவிட்டேன்.
உம்மை வரவேற்கின்றேன்.

39. இனி என்ன செய்வது?
முதலில் அருட்பெருஞ்ஜோதி என்று செல்லும்.

40. அருட்பெருஞ்ஜோதியா?
ஆமாம்.

41. அது என்ன?
அது தான் சங்கத்திற்க்கு மூலப்பொருள்.

42. ஒகோ!
ஆமாம்.

43. சங்கம், சங்கம் என்கிறீரே?
முழுப்பெயர் சொல்லட்டுமா?

44. பெரிய பெயரோ?
ஆமாம் மிகவும் பெரியது.

45. சொல்லலாமே!
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்பது தான் முழுப்பெயர்.

46. அர்த்தம்?
பெயரைப்போல அர்த்தமும் பெரியது தான்.

47. எப்போது அர்த்தம் புரியும்?
சங்கம், சாலைக்கு வந்து தொண்டு செய்தால் புரியும்.

48. தொண்டு செய்தால் என்ன வரும்?
வராது. போகும்.

49. என்ன? போகுமா???
ஆமாம், தற்போதம் போகும்.

50. எதுவும் வராதா?
ஆன்மா ஞானம் வரும்.

51. வந்தால் நல்லது தான்!
உமக்கும், உலகத்துக்கும்.

52. சங்கத்தை ஏன் வள்ளலார் துவக்கினார்?
உயிர்கள் துன்பம் நீங்கி இன்பம் அடைய!

53. சங்கத்துக்கு தலைவர் உண்டா?
உண்டு.

54. யார்?
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.

55. அப்போது வள்ளலார்?
அவர் ஒரு தொண்டர்.

56. எப்படி சொல்கிறீர்?
“சன்மார்க்க சங்கத்தீர்” என்னும் பாடலில் அவரே சொல்கிறார்.

57. என்ன சொல்கிறார்?
“என்னை நுமக்குள் ஒருவனெனக்கொள்வீர்” என்று சொல்கிறார்.

58. ஏன் தொண்டராக தன்னைச் சொன்னர்?
தொண்டின் பெருமையை வலியுறுத்த.

59. சங்கத்திற்கு தலைவர் ஆண்டவர் என்று சொன்னீரே?
நான் சொல்லவில்லை! வள்ளலாரே சொல்கிறார்.

60. பாடலைச் சொல்லுமே?
“சன்மார்க்க சங்கத் தலைவனே” என்கிறார்.

61. ஒகோ!
ஆமாம்.

62. சங்கத்தின் மூலம் என்ன செய்தார்?
முதலில் வடலூரில் தருமச்சாலை கட்டினார்.

63. அது எதற்கு?
நம்மைக் கொல்லும் பசிப்பிணியை போக்குவதற்க்கு.

64. சரியான ஏற்பாடு தான்?
சபாஷ் போடும், அய்யவிற்க்கு.

65. சபாஷ்! சபாஷ்!
இரண்டு சபாஷ் போட்டுவிட்டீரே! நீர் பிழைத்துக் கொள்வீர்.

66. அப்புறம்?
ஜீவகாருண்ய ஒழுக்கத்தைப் போதித்தார்.

67. மேலும்?
சார்புச் சாலைகளை நிறுவத் திட்டமிட்டார்.

68. அவை என்ன?
தருமச் சாலைக்கு உப சாலைகள்.

69. எதற்காக?
ஏழைகளின் நோயை போக்க – வைத்திய சாலை.

70. பிறகு?
ஏழைகளுக்கு கல்வி போதிக்க சாத்திரசாலை.

71. அப்புறம்?
பல்வேறு உதவிகளைச் செய்ய உபகார சாலை.

72. இன்னும்?
வாழ்வில் வளங்களைப் பெற விருத்தி சாலை.

73. மேலும்?
வழிபாட்டை சொல்லிக் கொடுக்க உபாசனா சாலை

74. வேறு?
உலகியல் சிக்கல்களைத் தீர்க்க விவகார சாலை.

75. இன்னும் உண்டா?
சங்கத்திற்க்கு ஒரு பத்திரிக்கை ஆரம்பித்தார்.

76. என்ன பத்திரிக்கை?
சன்மார்க்க விவேக விருத்தி.

77. சாத்திர சாலை என்று சொன்னீரே?
ஆமாம், அதன் பெயர் சன்மார்க்க போதினி மற்றும் சமரச வேத பாடசாலை.

78. அங்கே, என்ன சொல்லி கொடுத்தார்?
அருளியல் கல்வி

79. உலகியல் கல்வி?
அதுவும் தான், மூன்று மொழிகளில்.

80. என்ன மொழிகள்?
தமிழ், ஆரியம்(சமஸ்கிருதம்), ஆங்கிலம்.

81. பலே! பலே!
சபாஷ் போடும் அய்யாவிற்கு!

82. அப்புறம்?
திருக்குறள் வகுப்பு நடத்தச் சொன்னர்.

83. யாரை?
தன் சீடர், வேலாயுதனாரை.

84. வேறு என்ன செய்தார்?
ஞான சபையை நிறுவினார்.

85. அது எதற்கு?
ஆண்டவர் அருள் நடம்புரிய! ஆன்மாக்கள் அருள் அனுபவம் பெற.

86. அது கோயில் இல்லையா?
கோயில் தான், ஆனால் “சங்கம் சார் திருக்கோயில்”.

87. யார் அங்கே வழிபடலாம்?
மாமிசம், கொலை தவிர்த்த புண்ணியர்கள் வழிபடலாம்.

88. மற்றவர்கள்?
புறத்தே இருந்து, பொதுவாக வணங்கலாம்.

89. உள்ளே வர வேண்டுமே?
புலையும், கொலையும் தவிர்த்தால் அடுத்த நொடியே வரலாம்.

90. சங்கத்தில் விழாக்கள்?
உண்டு.

91. என்ன விழா?
தைப்பூசப் பெருவிழா!

92. தைப்பூசப் பெருவிழாவா? அது என்ன?
அது ஞானநிறைவைக் குறிக்கும் அருள் விழா!

93. மற்ற விழாக்கள்?

தருமச்சாலை தொடக்க விழா, சித்திவளாக தரிசன விழா, கொடி கட்டின விழா, வள்ளலார் அவதார தின விழா!

94. மாத விழாக்கள்?
மாதப் பூச விழா, தினசரி வழிபாடு, தினசரி சாப்பாடு.

95. தினசரி சாப்பாடா?
அது வள்ளலார் கருணையின் அடையாளம்.

96. நமக்கும் கருணைதான் வரவேண்டும் முதலில்!
முதலில் அதுதான் வரவேண்டும்.

97. எல்லாறிடமும் இதைச் சொல்கிறேன்.
முதலில் உங்கள் வீட்டில் சொல்லுங்கள்.

98. அப்புறம்?
உறவினர்கள், நண்பர்கள், சுற்றத்தாரிடம் சொல்லுங்கள்.

99. இன்றே சொல்கிறேன்.
மிக்க நன்றி!

100. நான் சொல்ல வேண்டும் நன்றி உங்களுக்கு!
எனக்கல்ல வள்ளலாருக்கு சொல்லுங்கள்.

நன்றி!.

 

தொகுப்பு:  ஆனந்த பாரதி, கணினி மென்பொருள் ஆலோசகர். ‍

2 thoughts on ““வள்ளலாரின் சன்மார்க்க சங்கம்””

  1. Arut perum jothi

    Hi anandabharathi

    The question and answers are superb. You are doing a fine job as expected. May the almighty bless you in all your faithful endeavours.

    Vasu
    Bangalore vallalar trust.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *