திருஅருட்பிரகாச வள்ளலார் திருச்சந்நிதி முறையீடு – 2. சரணமஞ்சரி – தொழுவூர் வேலாயுதனார் இயற்றியது

2. சரணமஞ்சரி

http://groorganic.net/wp-json/oembed/1.0/embed?url=http://groorganic.net/pages/ பன்னிருசீர் ஆசிரிய விருத்தம்

http://faithfamilyandtechnology.com/faith/weekly-verse-encouraging-words/ சாமகண் டாய சரணஞ் சாதுசந் தான சரணந்

order Pregabalin தாவிலன் பாகு மவர்தஞ் சார்பினின் றாடி சரணம்

காமகண் டாய சரணங் காலசண் டாய சரணங்

காளகண் டாய சரணங் காளிகண் டாய சரணம்

வாமசிங் காரி மகிழுந் தாமமந் தார சரணம்

மாமசங் கார சரண மீமசஞ் சார சரணம்

நாமமந் த்ரேச சரணம் ராமலிங் கேச சரணம்

ஞானபண் டீத சரணம் நாதமுண் டீச சரணம்.

ஞானபண் டீத சரண நாகர்தம் வாழ்வு சரணம்

நாதம்விந் தோடுகலை யென்னாடகன் றாடி சரணம்

மோனசிந் தாதி சரண மூவலின் றாதி சரணம்

மோனிசிந் தாய சரண மூதகண் டாய சரணம்

வானசிந் தாய சரணம் மாகதம் பாய சரணம்

மாயுரம் வீர சரணம் வாலைதன் பால சரணம்

தீனபந் தாதி சரணஞ் சேவலந் தோகை யுயருஞ்

சீரசெந் தூர சரணந் தேவநந் தேவ சரணம்.

கட்டளைக் கலித்துறை

இராமலிங் கச்சுட ரேற்றுபு நோய்சே யென் றொன்மைபல

இராமலிங் கண்ணிய புன்மை யுளம்விளக் கூவிடும்பை

இராமலிங் கன்னெடுத் துட்படுத் தாண்ட வெழிற்கருணை

இராமலிங் கக்குரு ராயனற் பொன்னடி என்முடியே.

எண்சீர் ஆசிரிய விருத்தம்

சிந்தா மணியே சரணம் சரணம் திருவே மருவே சரணம் சரணம்

கந்தா கனியே சரணம் சரணம் கதியே மதியே சரணம் சரணம்

எந்தாய் இறையே சரணம் சரணம் இனியாய் தனியாய் சரணம் சரணம்

முந்தா முறையே சரணம் சரணம் முனியே சரணம் சரணம்.

வேறு

கரைத்தெனா னானமூர்ச்சை கருத்தினா தேச நீத்து

கணிப்பிலா சாசைவாட்டி யிருத்துபா தாய போற்றி

உரைத்தநா வாலுமாட்டாப் பெருத்தவா னாதி போற்றி

ஒருத்தனா யாதுமாக்காத் திருத்தசீ பாதபோற்றி

இரைத்தமா வாரிதீர்த்த மிருக்குகோ டீரபோற்றி

இசைக்குமா வேதவாக்கு விரித்ததா ளாளபோற்றி

நிரைத்தமா யாசகார்த்த நிறுத்தகோ லாயபோற்றி

நிருத்தரா சாயபோற்றி நிருத்தபா தாயபோற்றி.

அருட்பெருஞ்ஜோதி.

–  தொழுவூர் வேலாயுதனார் இயற்றியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *