சுத்த சன்மார்க்க சத்தியச் சிறு விண்ணப்பம் 

விண்ணப்பங்கள்:

சன்மார்க்க விண்ணப்பங்கள் நான்கும் ஆறாந் திருமுறை முதற் பதிப்பில் முதன் முதலில் அச்சாயின. பின் வந்த பதிப்புகள் அனைத்திலும் சேர்ந்துள்ளன.

1. சுத்த சன்மார்க்க சத்தியச் சிறு விண்ணப்பம்:

“சுவாமிகளது தெய்வத் திருக்கரத்தால் எழுதிய மூலமே இங்கு ஆதாரம். இதற்காகக் கிடைத்த அன்பர்கள் கை எழுத்துப் பிரதிகள் ஆறு. இவற்றுள் இரண்டில் விண்ணப்பத்தின் இறுதியில் ‘ஆங்கீரச வருடம் வைகாசி மாதம் 5 உ உத்தரஞான சித்திபுரம்’ என்றும், வேறொன்றில் ‘ஆங்கீரச வருடம் வைகாசி மாதம்’ என்றும், மற்றொன்றில் ‘ஆங்கீரச வருடம் சித்திரை மாதம் ஞானசித்திபுரம்’ என்றும் குறித்திருக்கிறது. ஸ்ரீ மகாதேவ முதலியாரது நோட்டில் இவ்விண்ணப்பத்தைத் தொடர்ந்து “திருநிலைத்து நல்லருளொடும் அன்பொடும்” என்ற தனிப்பாடல் எழுதியிருக்கிறது. இவ்விண்ணப்பமே சுவாமிகள் எழுதிய முதல் வாசக விண்ணப்பமாக எல்லாப் பிரதிகளிலும் கொண்டிருக்கிறது. இவ்விண்ணப்பத்தின் தலைப்பு சுவாமிகளாலேயே ‘திருச்சிற்றம்பலம்’ என்பதன் பின் குறிக்கப்பட்டிருக்கிறது”- என்பது ஆ.பா. அடிக்குறிப்பு.

முதற்பதிப்பு, பொ.சு., இரா., ச.மு.க. பதிப்புகளில் இவ்விண்ணப்பம் நான்காவது விண்ணப்பமாக வைக்கப்பெற்றுள்ளது. முதற் பதிப்பில் இதன் பெயர் சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பம். பொ.சு., ச.மு.க. பதிப்புகளில்: சமரச சுத்த சன்மார்க்க சத்திய விண்ணப்பம். பி.இரா. பதிப்பில்: சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்தியச் சிறு விண்ணப்பம் ஆ.பா. பதிப்பில் அடிகளது கையெழுத்து மூலத்தின் சுயவடிவம் போட்டோ எடுத்து பிளாக் செய்து அச்சிடப் பெற்றுள்ளது.

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *