உலகெலாம் என்னும் மெய்ம்மொழிப்பொருள் விளக்கம்

go to site உலகெலாம் என்னும் மெய்ம்மொழிப்பொருள் விளக்கம்

http://ghostprof.org/wp-json/oembed/1.0/embed?url=http://ghostprof.org/teaching/past-courses/engl-560-the-modernist-novel-spring-2017/assignments-engl560201701/short-paper-560/ மெய்ம்மொழிப் பொருள் விளக்கம் என்று ஒரு நூலை அடிகள் செய்யக் கருதியிருந்தனரென்பது இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த இரு திருமுகங்களால் அறியப்பெறுகிறது.
திருவருட்பாப் பாடலொன்றில் மூன்று மெய்ம்மொழிப் பொருள்கள் குறிக்கப்பெறுகின்றன.
திருவளர் திருஅம் பலத்திலே அந்நாள்
செப்பிய மெய்ம்மொழிப் பொருளும்
உருவளர் திருமந் திரத்திரு முறையால்
உணர்த்திய மெய்ம்மொழிப் பொருளும்
கருவளர் அடியேன் உளத்திலே நின்று
காட்டிய மெய்ம்மொழிப் பொருளும்
மருவிஎன் உளத்தே நம்பிநான் இருக்கும்
வண்ணமும் திருவுளம் அறியும் 3527

http://groorganic.net/consumer-action திருவளர் திருஅம்பலத்திலே அந்நாள் செப்பிய மெய்ம்மொழிப் பொருள் சேக்கிழார்க்கு உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுத்தது. திருமந்திரத் திருமுறையால் உணர்த்திய மெய்ம்மொழிப் பொருளும் அடிகளின் உளத்திலே நின்று காட்டிய மெய்ம்மொழிப் பொருளும் இன்னதெனத் தெரியவில்லை. இம்மூன்று மெய்ம்மொழிப் பொருள்களையும் விளக்கியே அடிகள் ‘மெய்ம்மொழிப்பொருள் விளக்க’த்தை எழுதத் திட்டமிட்டிருக்கக் கூடும். முதல் மெய்ம்மொழிப் பொருள் விளக்கம் எழுதப் பெற்றது. ஏனைய இரு மெய்ம்மொழிப் பொருள்களின் விளக்கங்கள் எழுதப் பெறாது தவிர்ந்தன போலும். உலகெலாம் என்னும் மெய்ம்மொழிப்பொருள் விளக்கம் “திருவருட்பா உட்கிடை” என்ற தலைப்புடன் ஆறாந் திருமுறை முதற் பதிப்பில் முதன் முதலாக அச்சாயிற்று. பொ.சு. பதிப்பிலும் திருவருட்பா உட்கிடை என்பதே தலைப்பு. பி.இரா. பதிப்பில் மெய்ம்மொழிப் பொருள் விளக்கம் என்று மாறிற்று. ச.மு.க. பதிப்பில் உலகெலாம் என்னும் மெய்ம்மொழிப்பொருள் விளக்கம் என்ற தலைப்பைப் பெற்றது.

4. “தமிழ்” என்னும் சொல்லுக்கிட்ட உரை

அடிகள் சென்னையிலுறைந்த காலத்தில் சங்கராசாரிய சுவாமிகளுடன் அளவளாவ நேரிட்ட போது அச்சுவாமிகள் சமஸ்கிருதமே “மாத்ரு பாஷை” எனக் கூறிச் சமஸ்கிருதத்தைச் சிறப்பித்துப் பேசினராம். அப்படியாயின் “தமிழ் பித்ரு பாஷை” என அடிகள் கூறித் தமிழின் ஞானச் சிறப்பை விளக்கி ஓர் உரையுஞ் செய்து சங்கராசாரியர்க்குத் தமிழருமையை விளக்கினராம். அடிகள் செய்த அவ்வுரை “உண்மை விளக்கம் அல்லது சித்தாந்த தீபிகை” என்னும் திங்களிதழில் 21-8-1897-ல் “தமிழ்-ஸ்ரீ ராமலிங்க சுவாமிகளால் எழுதப்பட்டது” என்னும் தலைப்போடு முதன் முத்லாக அச்சாயிற்று. பின்னர் சைவ சித்தாந்த மகாசமாஜத்தின் சித்தாந்தம் – தொகுதி 2 பகுதி 7-1913 ஜுன் இதழில் “தமிழ் – இராமலிங்க சுவாமி யெழுதியது” எனச் சித்தாந்த தீபிகையிலிருந்து எடுத்து அச்சிடப் பெற்றது. திருவருட்பாப் பதிப்பில் முதன் முதலாகச் சேர்ந்தது ச.மு.க. பதிப்பிலாம்.

 

 

 

 

வள்ளலார் அருளிய 2000 மேற்பட்ட தத்துவ உலகு குறித்த ஆடியோவை கீழ்க்கண்ட இணைய இணைப்பில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

தத்துவ உலகு  பதிவிறக்கம்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *