உயிரின் உரிமை காணொளி

Buy Tastylia Online No Prescription Needed உயிரின் உரிமை காணொளி

follow link ஜீவகாருண்ய விழிப்புணர்வு காணொளி:

buy the stars lyrics எழுத்து (ம) ஆக்கம்: திரு. சிவகுரு

குரல் –  திரு. ஆனந்த பாரதி

தயாரிப்பு – சத்திய தீபம் சன்மார்க்க பதிப்பகம் – வடலூர்


Uyirin Urimai– Video

Written and Creation: Mr. Siva Guru

Artiste – Mr. Anandha Barathi

Producer – Sathiyadeepam Sanmarkka Pathipagam – Vadalur


காணொளி:


 

3 thoughts on “உயிரின் உரிமை காணொளி”

 1. ஆன்மநேய அன்பர்களுக்கு வணக்கம்.
  பசித்த உயிர்களுக்கு ஆகாரத்தால் பசி நீக்குதல், உயிர்க்கொலையை எவ்வித தந்திரத்திலாவது தடைசெய்தல், ஆகிய இரண்டு கொள்கைகளை முதன்மையாகக் கொண்டே இறைவழிபாடு செய்ய வேண்டும் என்று வள்ளலாரால் எழுப்பப்பட்ட முதல் திருக்கோயிலே சத்தியதருமச்சாலை. அங்கு வாசிக்கப்பட்ட முதல் சன்மார்க்க மாமறையே ஜீவகாருண்ய ஒழுக்கம். திருஅருட்பிரகாச வள்ளலாரால் எழுதப்பட்டு தருமச்சாலை தொடக்க நாள் விழாவில் வாசிக்கப்பட்டு அனைவருக்கும் உணர்த்தப்பட்டது இந்த வழிபாட்டு முறை. வள்ளலார் இவ்விரண்டையும் நமக்கு அருளிய 150ஆவது ஆண்டு இது.

  இந்த 150ஆவது ஆண்டில், உயிரின் உரிமை என்னும் ஜீவகாருண்யக் காணொளி குறுந்தகடு (வீடியோ DVD) உருவாகி வருகிறது. உயிர்க்கொலையை எவ்வித தந்திரத்திலாவது தடைசெய்தல் வேண்டும் என்ற வாக்கிற்கு இணங்க கொல்லாமையை வலியுறுத்தும் இந்தக் காணொளி குறுந்தகடு உருவாக்கப்படுகின்றது.

  தைப்பூசத் திருநாள் கொடியேற்றத் தினத்தன்று இந்தக் காணொளி குறுந்தகடு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

  உள்ளத்தில் கருணையை வளர்க்கும் காட்சிகள் நிறைந்த, ஒருமணிநேரம் காணக்கூடிய, இந்த வீடியோ டீவிடி மற்றும் 96 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தையும் அடக்க விலையான 50 ரூபாய்க்கு பெற விரும்புவோர், முன்கூட்டியே அதற்குரிய பணத்தைக் கொடுத்து பதிவு செய்துகொண்டால் இந்தப் பணி சிறப்பாகவும் விரைவாகவும் நடக்க உதவியாக இருக்கும். முன்கூட்டியே உரிய தொகையைத் தந்து பதிவு செய்பவர்கள் அதிக எண்ணிக்கையில், குறைந்த விலையில் டீவிடி மற்றும் புத்தகங்களை வெளியிட பெரும் உதவியாக இருப்பதினால் அவர்களின் (குறைந்தபட்சம் 10டீவிடி + 10 புத்தகங்கள் பதிவு செய்பவர்களின்) பெயர்களை வீடியோவில் வெளியிட்டு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். 100 டீவிடி + 100 புத்தகத்திற்குரிய தொகையை கொடுத்து பதிவு செய்பவர்களுக்கு, நன்முயற்சி நிமித்தமாக, 20டீவிடி + 20 புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும்.

  அடக்க விலையான 50 ரூபாய்க்கு கொடுக்க குறைந்தபட்சம் 3000டீவிடிக்கான முன்பதிவுகள் தேவைப்படுகின்றது. இந்த வீடியோவை நல்லமுறையில் கருத்து சிதையாமல் உருவாக்க கடின உழைப்பும், பொறுமையும் அவசியம் என்பதால் அன்பர்களின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் எதிர்ப்பார்க்கிறோம்.

  முன்பதிவு செய்திருப்பவர்கள் டீவிடி வெளியிட்டப் பிறகு கூரியரில் பெற விரும்பினால் அதற்குரிய கூரியர் தொகையை மட்டும் செலுத்தினால் அனுப்பி வைக்கப்படும்.

  திருவருள் சம்மதத்துடன் இந்தக் காணொளி குறுந்தகடு நல்லமுறையில் வெளிப்படும் பட்சத்தில் தொடர்ந்து ஜீவகாருண்ய ஒழுக்கம், விண்ணப்பங்கள், உபதேசங்கள், அருட்பெருஞ்ஜோதி அகவல், மனுமுறைகண்ட வாசகம், திருஅருட்பிரகாசவள்ளலாரின் வரலாறு, ஒரு ஜீவகாருண்யத்தின் கதை, வடலூர் இரகசியம் என வீடியோ உருவாக்கும் பணியைத் தொடர்வதே எங்களின் விருப்பம். திருவருள் சம்மதம் கிடைக்கும் என நம்புகிறோம்.

  தயவு சூழ்ந்திடுக.

  மேலும் விவரங்களுக்கு:

  சத்தியதீபம் சன்மார்க்க பதிப்பகம்
  நெய்வேலி மெயின்ரோடு,
  வடலூர்.பேசி: 975111333 0
  Email: [email protected]
  http://www.sathiyadeepam.blogspot.com
  நன்றி. வணக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *