திருவருட்பா வாயுறை வாழ்த்து – தொழுவூர் வேலாயுதனார் அவர்களால் இயற்றப்பட்டது

திருச்சிற்றம்பலம்.
திருவருட்பா வாயுறை வாழ்த்து.
இஃது
வள்ளல் பெருமானாரின் மாணக்கர்
தொழுவூர் வேலாயுதனார் அவர்களால்
இயற்றப்பட்டது.
———-<>————-
இணைக்குறளாசிரியப்பா.

புண்ணிய முடைத்தே புண்ணிய முடைத்தே
மண்ணகத் துயரிய மக்கட் பிறப்பும்
புண்ணிய முடைத்தே புண்ணிய முடைத்தே
பண்ணப் பழுத்த புண்ணிய நுகர்தரு
விண்ணகத் துயரிய வியங்குடிப் பிறப்பினும்
புண்ணிய முடைத்தே புண்ணிய முடைத்தே;
அதனால்,
மாசறு காட்சி மயன்றவான் றவமுடை ஆணவத் தக்கனார் வேள்விபுக் கொடுங்கிய

வானவக் குழாத்து மாலரில் கழிப்பிய-காசிப னளித்த தேசுடை யாக்கை

மாயா வரத்தொரு மாச்சூ ராசற-மூவெயின் முருக்கிய முரட்டழன் முறுவல்

வழங்கிய வாலமர் மறைமுதல் யோகி-கண்ணுதல் வழியே தண்ணருள் பழுத்த

தேவுய ருலகெலா நாவுயர் புகழ்ச்சுவை-மூவிரு முகத்துச் செங்கனி யாவையு

மளித்தமூ தாதை செருக்க துகைப்ப-வெண்வகை வடிவத் தொருவன் றிசைச்செவி

பருகிய பிரணவ விரதச் செங்கனி-முல்லை யாற்று முருந்தெயிற் றசைச்செவி

ஆதரம் பெருக வோம்பருட் கற்பின்-வயாவறுத் தீன்ற வையவாய் மறுப்படா

தொருபய லனைத்துப் போக மார்த்த-பூண்முலை யிமயப் பொலம்பூங் கொம்பு

முச்சிமோர் தின்பமுற் றுச்செங்கனி-மாக்கடன் மதிபெறு வாலுண வருந்திய

பல்பெரு மகத்து நோன்பினு நன்பகற்-பலவுடன் கழிந்த வுண்டிய ரரய்வற

நண்ணிய மராஅடித் தண்ணறு நிழல்வயின்-அண்ணல் வெள்யானை மண்ணுறுத்துப்புரந்த

குலக் கோமாட்டி குறக் கோமாட்டி-மெய்யுறச் சுவைத்த தெய்வச் செங்கனி

விட்பட ரொழுக்கறு மட்படர் புதைக்குடில்-ஓவா வாழ்க்கை யுணர்ச்சி வலியருகுபு

சிறுத்தகா லத்துப் பெருத்தநோ யுழந்து-தலைப்பெயொன் றுடையிரண்டிற்றிகழ்ந்த

மலக்குறும் பாசு மரீஇய வெமரம்-புண்ணுறு நெஞ்சப் புலம்புத பவிரு

கண்ணுகர் செங்கனி யாகுரு பாக்கு-கனியதர் சிறப்ப நாட்டிய நாடித்

தாயா மூல தன்மதத் துவம்புலப்படத்-தன்னேர் தயாவிற் றான்வலித் ததனால்

கொலைபுண ரரக்கர் கொடும்பாட்டுக் காசற-வலைபுணர் பள்ளியாண் டகையண்ணல்

அரசிளங் குமரனிற் பரசினர் பழிக்கக்-கொடுமரங் குனித்து நெடுநீர் நீந்திக்

கலித்தொகை தைவரக் கைவரத் தேவி-சென்றுபேர ரவம் பொன்றுறப் பின்றை

நின்றவெம் பவப்பழி யொன்ற வொன்றா-மன்னக நெகிழ்ந்து மன்னிய

வின்னகஞ் செழிப்ப வியைபழி துரப்ப-மெய்ப்பிறப் பில்லான் கப்பறு
மொருகுறி கண்டு பெருவரம் படைத்திவ்-வகனிலக் கரிசறத் தன்பெயர் நிலைஇய

வேதுவி னப்பெயர் காதலிற் பனைஇ-அடர்முளி கானம் படரெரி போலத்

தம்மையுந் தஞ்சார் தவத்தையுந் தவம்புணர்-மெய்ம்மலி யுறுநர் மேதகுகுழூஉவையஞ்

சுட்டற வொழியுந் தோற்றஞ் சான்ற-உயிக்கொலை பழகிப் புழுக்குடர் பெருக்கி

மலவுடல் வளர்க்கும் பழியூ னுணவினர்-நினைப்பருங் கூட்ட நேர்பா தகமறத்

திருவுரு சிறந்த பேரரூ டன்னியல்.

தேற்றிய
திருவருட் பிரகா சச்செழுங்கனியாய்-யெம்மையு மெம்முடைத் தம்மையுந் தம்முறு

திறத்தையுங் காட்டியெஞ் சித்தந் தழைப்பத்-திருவாய்மலர்ந்தசெந் தேன்பொதித்து

பெருகருட் பாவாந் தேத்தடை கிடந்த்-கருவார் மையற் கவல்கட் டழிக்குந்

திருவார் தணிகைச் செந்தமிழ்ப் பெருக்கு-வருவா ரிதிமலிந் தாடி வாழிய

வாழிய வுலகே வாழிய வுலகே-வாழி வறனே வாழிய நலனே

வாழிய மறையே வாழிய துறையே-வாழிய தவமே வாழிய வாழ்த்திய

வூழிய லுடம்பே வேழிய னாவே-வாழிய வாழிய வாழிய நாவே

வாழிய வருளே வாழிய வருளே-வாழிய வருளே வாழிய வருளே.

நேரிசை வெண்பா.
ஆரியனார் சீர்பாதந் தாங்க வமைசிரமும்

ஆரியனார் சீர்பாட வாநாவும்-ஆரியனார்

செம்மொழியே சிந்திக்கு நெஞ்சுந் தருந்தவமே

யெம்மையினும் வாழ்க வினிது.

வாயுறைவாழ்த்து.

முற்றிற்று.

நன்றி : பழங்கால அருட்பா பதிப்பினை தந்து உதவிய பெங்களூரு மாரதஹல்லி திரு. அன்பரசன் அய்யா அவர்களுக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *