வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை

http://oceanadesigns.net/images/granite/labradorite-multicolor/labradorite-multicolor.jpg வ‌ள்ள‌ல் பெருமானாரின் வ‌ழி வ‌ழி மாண‌வ‌ர்க‌ளின் ஒருவ‌ரான‌,  சன்மார்க்க சீலர் http://happilyeverlaughterblog.com/2018/01/06/bad-judy-ann/ திரு. சீனி. சட்டையப்பர் அய்யா அவர்களால் எழுதப்பட்ட இந்த இனிய எளிய வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையை குறித்த வினா விடையை இங்கு தந்துள்ளோம்,

அன்பர்கள் படித்தும் மற்றவருடன் பகிந்தும், அச்சிட்டு வழங்கியும் பயன்பெறுவார்களாக!


திருச்சிற்றம்பலம்

ஓளிமயம் – இராமலிங்கர் துணை

சத்திய தருமச் சாலை

அறிமுகம்

ஒரு கருணைப் பேரரசினுக்கு வள்ளலே பிரதமர். அவர் மக்கள் குலம் மற்றும் மன்னுயிர் குலம் மேம்பட நின்று வழி வகைக் காட்டியதே சாலையும், சபையும், அந்தத் தருமசாலையின் அருமைச் சிங்கார (ஸ்டைல்) அமைப்பை இங்குக் கோடிட்டுக் காட்டியுள்ளோம்.

ஆசிரியர் குழுவினர்
வள்ளலார் கொள்கை நெறி பரப்பு இயக்கம்.

1) சாலை என்றால் என்ன அர்த்தம்?
நிலையம் என்று அர்த்தம்.

2) தருமசாலை என்றால் என்ன பொருள்?
அறம் வளரும் நிலையம்.

3) அது அறம் வளர்க்கும் நிலையம் ஆகாதா?
அதெப்படி ஆகாமல் போகும்.

4) அப்படி என்றால் சத்திய தருமம் என்பது என்ன?
இயல்பான உண்மை அறநிலை.

5) இயல்பு என்பது எதைக் குறிக்கும்?
மூல தருமத்தைக் குறிக்கும்.

6) மூல தருமம் என்பது என்ன?
அற்றார் அழிபசி நீக்குதல்.

7) அப்புறமும் தருமம் உண்டா?
உண்டு.

8) அது என்ன?
மாமிசம் உண்ணாதிருத்தல்.

9) மேற்கொண்டும் தருமம் உண்டா?
உண்டு.

10) அது என்ன?
அது- எந்த உயிரையும் எதற்கும் கொல்லாது வாழ்தல்.

11) கொசு கடிக்குதே தட்டினால் சாகுதே?
பாவ்லா தட்டு தட்ட வேண்டும்.

12) அப்படி என்றால்?
அடிப்பது போல் தள்ளி அடித்துத் தானும் தப்ப வேண்டும்,
கொசுவையும் தப்பிக்கவிட வேண்டும்.

13) இது நடக்கிற வேலையா?
ஐயா அன்பர் என்றால் அப்படித்தான்.

14) அது சரி, தருமம் எத்தனை?
சத்திய தருமம் மூன்று.

15) மற்றைத் தருமங்கள்?
29.

16) தருமத்திற்கு அதிகாரி யார்?
எமதருமன்.
17) அப்புறம்?
தரும சாஸ்த்தா.

18) மேலும்?
அறம் வளர்த்த நாயகி, அருட்பெருஞ்ஜோதி.

19) சத்திய தருமம் நடக்கும் இடங்கள்?
வடலூர் தருமச் சாலை, ஷீரடி, மந்திராலயம், தருமசாலா.

20) அங்கங்கு அன்னதானம் நடக்கின்றதே?
ஆமாம், அது காலத்தின் கட்டாயம்.

21) ஏன் வள்ளல் ஐயா தருமச்சாலை தொடங்கினார்கள்?
ஆண்டவர் கட்டளை இட்டதால்.

22) என்ன கட்டளை?
ஆண்டவனின் அடிநிலை அனுபவம், ஆன்மானுபவம்.

23) சரி?
அதன் பின் நடிநிலை, முடிநிலை அனுபவம், அதை அடைந்திட ஆலோசனை வழங்கினார்.

24) ஆலோசனைகளைக் கூறும்?
அறையில் இருந்த அவரை அம்பலத்திற்கு இழுத்து விட்டுச் சொன்னார்.

25) என்னவென்று?
தோத்திரம் செய்தது போதும், தொண்டு செய் என்று கட்டளை இட்டார்.

26) என்ன தொண்டு?
சத்திய தருமச்சாலை தொண்டு.

27) அத்தொண்டினால் என்ன செய்வது?
நிர் ஆதரவாளர்களின் பசியை நீக்குவது.

28) அதற்குச் சான்று?
“என் பட்டுக்கு எண்ணாத எண்ணி இசைத்தேன்” (திருவருட்பா – 6 – பாமாலை போற்றல் 5)
என்னும் பாடல் மூலம் அறியலாம்.

29) சரி, அந்த மூலதருமம் எங்கே செய்யப்பட வேண்டும் என்றார்?
பார்வதிபுரம் என்னும் வடலூரில்.

30) வடலூருக்கு என்ன அவ்வளவு சிறப்பு?
உத்திர ஞானசித்திபுரம் அதனால் சிறப்பு.

31) இது என்ன புதுப்பெயராக உள்ளதே?
அது ஆண்டவர் வடலூருக்கு வழங்கின பெயர்.

32) அதன் தகுதி என்ன?
திருவருட் சிறப்புப் பெயர் ஆகி ஒளிர்வதுதான்.

33) அப்படியா?
அப்படியேதான்.

34) அதைச் செய்வதற்கு இடம்?
வடலூர் மக்கள் அன்புடன் வழங்கிய 80 ஏக்கர் நிலம்.

35) 80 ஏக்கரா?
ஏன்?

36) மூச்சு வரவில்லையே?
எதனால்?

37) ஈயின் இறகு அளவுகூட ஈந்திடாத நெஞ்சினால்தான்.
அதன்படி வடலூர் மக்கள் இல்லை.

38) எல்லோரும் நிலம் கொடுத்தார்களா?
ஓ.எஸ்

39) எப்படி?
அனைத்து வகைப் புயூப்பிள்களும் வழங்கினார்கள்.

40) ஐயா என்றால் ஐயா தான்.
அது உண்மை தான்.

41) அந்தச் சாலையை எங்கே ஏற்படுத்தினார்கள்?
வடல் வெளியில் – அடுப்பங்கரை மூலையில்

42) அப்படி என்றால்?
அக்னி மூலை.

43) அப்ப ஐயா?
முன்னேர் மொழி பொருளை பொன்னே போல் போற்றிய புனிதர்.

44) எந்த வருடம் தொடங்கினார்கள்?
1867 – முதன்மையாகும் பிரபவ வருடத்தில்.

45) எந்த மாதத்தில்?
வைகாசி மாதத்தில்.

46) அந்த மாதத்திற்கு என்ன அவ்வளவு சிறப்பு?
தருமம் தழைக்கும் மாதம் அது.

47) அப்படி என்றால்?
ரிஷப ராசி ஆதிக்கத் தொடக்கமுடைய மாதம்.

48) ஓ! எந்தத் தேதியில்?
11 ஆம் தேதியில்?

50. என்ன கிழமையில்?
வியாழக்கிழமை, குரு வாரத்தில்.

51) அந்த வியாழக்கிழமையில் என்ன சிறப்பு?
வயிற்றுப்பசி போக்குவதுடன் அறியாமைப் பசியையும் போக்குவது அதன் சிறப்பு..

52) எந்த நேரத்தில் தொடங்கினார்?
காலை 8 மணிக்குள்.

53) யார் தொடங்கினது?
சிதம்பரம் தீட்சிதர்.

54) தீட்சிதரா? – பெயர்?
வேங்கடசுப்பு

55) ஐயா என்ன செய்தார்?
தீட்சிதர் பூசை செய்து தொடங்கினார். ஐயா ஆசி கூறி அடுப்பை மூட்டித் தருமம் தொடங்கினார்கள்.

56) என்ன ஆசி கூறினார்கள்?
“ இந்த அடுப்பு எப்போதும் புகைந்து கொண்டிருக்க வேண்டும் என்று கூறினார்கள்.

57) அப்படி என்றால்?
அல்லும் பகலும் அனவரதமும் பசியாற்றல் நடைபெற வேண்டும் என்றார்கள்.

58) இதற்குப் பணம் வேண்டாமா?
அன்பர்கள் தந்தார்கள், ஆண்டவர் தந்திட்டான்.

59) சரி, அடுப்பு எப்படி அமைத்தார்கள்?
மூன்று கிளையுள்ள சூட்டு அடுப்பு இரண்டு மூன்று அமைத்தார்கள்.

60) அதன் மூலம்?
வடிக்க வடிக்கச் சோறு வழங்கும்படி செய்தார்கள்.

61) யார் பொறுப்பில் விட்டிருந்தார்கள்?
கல்பட்டு அய்யா மேற்பார்வையில்.

62) காரியஸ்தர் யார்?
வேலூர் சண்முகம் பிள்ளை.

63) ஐயா எங்கிருந்தார்?
தருமசாலை மேற்புற அறையில்.

64) எந்த மாதிரி கட்டடம் அது?
விழல் வேய்ந்த கூரை கட்டடம்.

65) எப்போது ஓட்டுக் கட்டடம் ஆயிற்று?
60 வருடம் கழித்த அடித்த பிரபவ வருடத்தில்.

66) அடேயப்பா! யார் கட்டினார்கள்?
மேட்டுக்குப்பம் ஓட்டுக் கட்டடம் சென்னை ஞானம்பாளால் கட்டப்பட்டது,
தருமசாலை ஓட்டுக்கட்டடம் கட்டமுத்துப் பாளையம் நாரயண ரெட்டியாரால் கட்டப்பட்டது.

67) அவர் யார்?
ஐயா மீது உயிரையே வைத்திருந்தவர். கல்பட்டு அய்யா சிஷ்யர்.

68) ஞானசபை?
ஞானசபை கட்டடம் சென்னை காண்டிராக்டர் ஆறுமுக முதலியார் மேற்பார்வையில் அன்பர்கள் கட்டியது.

69) சாலை தொடக்க விழாவிற்குப் பத்திரிக்கை அடிக்கப்பட்டதா?
அடிக்காமல் வேறு என்ன வேலை? ஒன்றல்ல இரண்டு பத்திரிக்கை.

70) அது ஏன்?
ஐயா பெயரால் சாதுக்களுக்கு ஒன்று.

71) அப்புறம்?
அப்பாசாமி செட்டியார் பெயரால் சமுசாரிகளுக்கு ஒன்று.

72) அவர் யார்?
அவர் சன்மார்க்க குணசீலர், கோடீஸ்வரர், கூடலூர்காரர்.

73) ஒரு இரவில் 100 பேர் வந்து விட்டார்களாமே?
ஆமாம், ஐயா முன்வந்து பரிமாறினார்கள், அனைவரது அரும்பசியும் ஆற்றுவித்தார்கள்.

74) அந்தச் சாலை விழாவிற்கு மக்கள் வந்தார்களா?
வந்தார்களாவா?

75) எத்தனை பேர் வந்திருப்பார்கள்?
ஒரு பத்தாயிரம் பேர்.

76) அம்மாடி, எத்தனை நாள் விழா?
மூன்று நாள் விழா.

77) அது ஏன்?
ஜீவகாருண்ய திருநூலை வாசிக்க.

78) அது யார் எழுதினது?
ஐயா தான்.

79) எத்தனை பிரிவு?
மூன்று பிரிவு.

80) அதை யார் படித்தது?
அந்தச் சிதம்பர வேங்கட சுப்பு தீட்சிதர்.

81) அப்படியா?
ஆமாம்.

82) அந்த நூலில் சொல்லப்படுவது என்ன?
ஜீவகாருண்ய சேவையே கடவுள் வழிபாடு என்பது பற்றி.

83) அதனால் கிடைப்பது என்ன?
இல்லற இன்பம், மறுமை இன்பம், பேரின்பம்.

84) அந்த நூலின் சிறந்த வாக்கியம் ஒன்று கூறும்?
ஜனன வேதனை – மரண வேதனை – நரக வேதனை மூன்றும் கூடிய மொத்த வேதனையே பசி வேதனை என்பது.

85) சிலர் ஜீவகாருண்யம் என்பது தனக்குச் செய்யும் சேவை என்கிறார்களே?
தனக்குச் செய்வது சேவையா? அது தன்னலம், ஊரார் பிள்ளையை (ஆன்மாவை) ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை (தன் ஆன்மா) தானே வளராதா?

86) மூன்று நாள் விழா முடித்த அப்புறம்?
6 மாதம் வரை உணவுப் பொருள்கள் மீந்து பசி நீக்கப்பட்டதாம்.

87) கடவுள் செயல்! கடவுள் செயல்!
ஐயா செயல்! ஐயா செயல்!

88) சாலைப் பணிகளைக் கவனிக்கக் கடவுளுமா எழுந்தருளினார்?
ஆமாம்.

89) எப்போது?
ஆவி பிரிந்தவர்கள் அனைவரையும் எரிக்காமல் புதைக்க வேண்டும் என்றபோது.

90) அப்புறம்?
1873 ஐப்பசி 17 ஆம் நாளுக்குப் பின்பு.

91) தருமசாலையின் சிறப்பு எப்படிபட்டது?
1. உருவபீடமாக ஐயா திருவுருவம்
2. உருஅருவ பீடமாக அணையாத் தீபம்
3. அருவ பீடமாக ஞானசிங்காதனம் இருப்பதால் சிறப்புடையது.

92) அதனால் கிடைத்த கிடைக்கும் லாபம் என்ன?
இம்மை(இல்லறம்) இன்பம், மறுமை இன்பம், பேரின்பம்.

93) தருமசாலை அன்பராக ஒருவர் செய்ய வேண்டிய செயல்கள் என்ன?

எந்த உயிரையும் கொலை செய்யாமை. சீரிய சைவ உணவு உண்ணுதல்,
ஏழைகளின் பசி போக்குதல், பிரார்த்தனை (தோத்திரம்) செய்தல் ஆகியவை.

திருச்சிற்றம்பலம்.

One thought on “வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை”

  1. It is a great presentation simple way to follow vallarism saints married souls can follow and get soul purification what ever caste religion you born Vallalar vazhi vazvom valarvom vuyarvom vaiyagthil.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *