சத்திய ஞானச் சபை

order orlistat mastercard சத்திய ஞானச் சபை: வினா – விடை:

buy Pregabalin Lyrica uk v அறிமுகம்:

http://flyingsquidstudios.com/files/skeletor_109.html ஒரு கருணைப் பேரரசினுக்கு வள்ளலே பிரதமர். அவர் மக்கள் குலம் மற்றும் முன்னுயிர் குலம் மேம்பட நின்று வழி வகைக் காட்டியதே சாலையும் சபையும் அந்தத் திருச்சபையின் சிங்கார அமைப்பை இங்குக் கோடிட்டுக் காட்டியுள்ளோம்.

இந்த வினா விடை வள்ளலாரின் வரலாறு மற்றும் திருஅருட்பா, உரைநடைப்பகுதி ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டது.

ஆசிரியர் குழுவினர்,
வள்ளலார் கொள்கை நெறி பரப்பு இயக்கம்.வடலூர்.

இராமலிங்கர் துணை:

சத்திய ஞானசபை பின்னணி:

1. பின்னணி என்றால் என்ன?
பின்புலம் என்று அர்த்தம்.

2. பின்னணியை விடப் பின்புலம் என்றது புரியவில்லையே?
அப்படியானால் பின்புலம் என்பது சபை கட்டப்பட்ட காரிய காரணங்கள்.

3. சபை எப்போது கட்டப் பெற்றது?
1872 ல்.

4. எங்கே?
வடலூரில்.

5. யார் கட்டியது?
வள்ளல் அய்யா (வள்ளலார்)

6. காரணம்?
ஆண்டவர் உத்தரவு.

7. அது என்ன உத்தரவு?
தில்லை சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடினோம் ஆகவே.

8. சரி
வடலூர் சிதம்பரத்தில் அருள் நடனம் ஆட வேண்டும்.

9. வடலூர் சிதம்பரம் என்பது என்ன?
அது பார்வதிபுரம்.

10. சரி அதற்கு என்ன?
அந்தச் சிதம்பரக் கோயில் சபை போலவே வடலூரிலும் சபை கட்ட வேண்டும் என்பதே.

11. அது என்ன சபை?
அது சத்திய ஞானச் சபை.

12. சத்திய ஞானச் சபை என்றால்?
மெய்ஞ்ஞானத் திருச்சபை

13. அது அதற்கு?
அது தான் அருள் நடனம் ஆடுவதற்கு.

14. அருள் நடனம் என்பது எது?
ஆனந்த நடனத்தை விட உயர்ந்தது.

15. அருள் ஆனந்த நடனத்தின் பயன் என்ன?
ஆனந்த நடனம் ஆருயிர்களுக்கு எல்லாம் இன்பம் தருவது.

16. அருள் நடனத்தின் பயன் என்ன?
அந்த ஆருயிர்கள் ஒவ்வொன்றியும் ஆண்டவன் ஆக்குவது. .

17. இது என்ன கதை அய்யா?
இது வள்ளல் அய்யாவின் கதை.

18. சரி, விசயத்திற்கு வாரும் – சபை எப்படி இருக்கும்?
எண்கோண வடிவில் இருக்கும்.

19. என்ன நிறம்?
தாமரை நிறம்.

20. சபை கட்டுவதற்கு முன் என்ன நடந்தது?
சன்மார்க்க சங்கக் கூட்டம் நடந்தது.

21. அது எங்கே நடந்தது?
அது வடலூர் சத்திய தருமச்சாலையில்.

22. யார் தலைமையில்? யார் கூட்டினார்கள்?
வள்ளல் பெருமான் தலைமையில், வள்ளலே.

23. யார் கலந்து கொண்டது?
அன்பர்களும், அறிஞர்களும், ஆதரவாளர்களும்.

24. அதில் வள்ளலார் அய்யா தெரிவித்தது என்ன?
ஆண்டவர் கட்டளைப்படி அருள் நடனம் ஆடுவதற்கு வடலூரிலும் ஒரு திருசபை கட்ட வேண்டும் என்றார்கள்.

25. பணம் வேண்டாமா?
பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கை தான்.

26. அது எப்படிக் கிடைக்கும்?
ஆண்டவர் தானே சபை கட்டச் சொல்கிறார். அவரே அதற்கான உதவியையும் உண்டாக்கித் தருவார் என்ற நம்பிக்கை தான்.

27. யார் உதவி செய்வார்கள்?
அன்பர்கள், முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், இப்படி, இப்படி.

28. முக்கியஸ்தர்கள் யார் யார்?
கோடிஸ்வரர் கூடலூர் அப்பாசாமி செட்டியார்.

29. அப்புறம்?
கோடிஸ்வரர் கூடலூர் அப்பாசாமி செட்டியார்.

30. பின்பு?
குபேர வேந்தர் வேட்டவலம் ஜமீன்தார்.

31. பிறகு?
பார்வதிபுரம் லட்சாதிபதி வேங்கட படையாட்சி.

32. அன்பர்கள் யார்?
லட்சாதிபதி சேலம் ஹவுஸ் சென்னை ஞானாம்பாள்.

33. பிற்பாடு?
கருங்குழி மணியக்காரர்.

34. அதன் பிறகு?
மேட்டுக்குப்பம் மணியம்.

35. அறிஞர்கள்?
தொழுவூர் வேலாயுதனார்.

36. தொண்டர்கள்?
கல்பட்டு அய்யா.

37. அந்தக் கூட்டதில் என்ன முடிவு செய்தார்கள்?
எப்படியும் சபை கட்டி விடுவது என்று முடிவு செய்தார்கள்.

38. பணத்திற்கு வழி?
பணக்காரர்கள் தருவது.

39. பிறகு யார் தருவது?
அப்புறம் ஆண்டவர் தருவது.

40. அதை எப்படித் தர முடியும்?
தங்கம் செய்தல் மூலம் தர முடியும்.

41. அப்படியா?
ஒரு கணக்கு குறிப்பே போட்டுத் தங்கம் தயாரிக்கப்பட்டது.

42. அடேயப்பா?
அடேயப்பா தான்.

43. எப்படி வந்தது?
பொதுமக்கள் காட்டிய ஆர்வத்தால்

44. எந்த மாதிரி ஆர்வம்?
தாமரை மலர்ந்தது போல் காட்டினார்கள்.

45. கட்டுவதற்கு முக்கியஸ்தர் யார்?
சென்னை ஒப்பந்தக்காரர் (காண்டிராக்டர்) ஆறுமுக முதலியார்.

46. திட்டம் (பிளான்)?
வள்ளல் அய்யா உள்ளத்தில் ஆண்டவர் போட்டுக் காட்டினார்.

47. காட்டிய பிறகு?
அதை வரைபடமாக்கி (புளுபிரிண்ட்) வள்ளல் அய்யா வழங்கினார்.

48. யாரிடம்?
சபை நிர்மான கமிட்டியிடம்.

49. எப்போது ஆரம்பிக்கப்பட்டது?
1872 ஆனி மாதம் வளர்பிறை.

50. பூமி பூசை போட்டார்களா?
போட்டார்கள்.

51. பூமி பூசைக்கு யார் வந்திருந்தார்கள்?
ஆடூர் சபாபதி குருக்கள்.

52. அய்யா போதாதா?
போதும்.

53. பின் எப்படி?
மரபின்படி நடந்து கொண்டார்கள் வள்ளல் அய்யா.

54. அது என்ன மரபு?
சாலை தொடக்கப் பூசை செய்யச் சிதம்பரம் வேங்கட சுப்பு தீட்சிதர் அழைக்கப்பட்டார். அதுபோலவே சபைக்கும் நடக்கட்டும் என்றிருந்தார்கள்.

55. பிறகு ஏன்?
அதைப் பின்பற்றிச் சபைக்குப் பூசை செய்ய ஆடுர் சபாபதி சிவாச்சாரியார் அழைக்கப்பட்டார்.

56. அழைத்து?
காயத்திரி மந்திரத்திற்கு அனுபவபூர்வமான அர்த்தம் தெரிவித்தார்கள் வள்ளல் அய்யா.

57. அது என்ன வகை மந்திரம்?
அது ஆன்ம தத்துவம் பிரமன் தன்னியல்பு.

58. ஆன்ம தத்துவத்திற்கு அடுத்து?
விஷ்ணுவின் தன்னியல்பு தத்துவம்.

59. விஷ்ணு தத்துவத்திற்கு அடுத்து?
சிவ தத்துவம், உருத்திரன் தன்னியல்பு.

60. இவை எதற்கு?
இவைதான் 36 தத்துவங்கள். இவை தான் நமது உடலமைப்பு. இது தான் காயத்திரி மந்திர உண்மை என்று தொரிவித்தார்கள்.

61. தெரிவித்து?
அதன்படி ஆன்மானுபவம் உண்டானால் – பிரம்ம ஞானம் அடையலாம் என்றார்கள்.

62. பிரம்ம ஞானம் என்பது என்ன?
வேதாந்த ஞானம்

63. வேதாந்த ஞானம் என்பது?
தத்துவமசி

64. தத்துவமசி ஞானம் எதனால் வரும்?
ஓதயாத் என்னும் ஜீவகாருண்ய சீலத்தால் வரும்.

65. அப்புறம் அய்யா என்ன சொன்னார்கள்? ஆடூர் சபாபதி குருக்களுக்கு?
சன்மார்க்க சங்கத்தில் சேர வேண்டும் எனச் சொன்னார்கள்.

66. அவர் சம்மதித்தாரா?
சம்மதியாமல் சம்மதித்தார்.

67. காரணம்?
அய்யா சொல்வதும் சரி, ஆரணம் சொல்வதும் சரி என்பதால்.

68. பிறகு என்ன நடந்தது?
1871 ஆனி மாதத்தில் பூமி பூஜை நடந்தது. சபை தை மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

69. கட்டுமானப் பெருட்கள் வேண்டாமா?
அவையெல்லாம் பம்பாயில் வாங்கப்பட்டது.

70. எது போல்?
கொடி மரம் சென்னையில் சபைக்கு வாங்கப்பட்டது போல.

71. அப்புறம் என்ன வாங்கினார்கள்?
சபைக்குச் செப்புத் தகடு.

72. அப்புறம் வாங்கியது என்ன?
சபையில் ஜோதி காட்டும் பெரிய கண்ணாடி.

73. அப்புறம் வாங்கியது என்ன?
சபையில் கண்ணாடிக்குப் பின்புறம் வைக்கும் தீப அகண்டம்.

74. அகண்டத்திற்குப் பிற்பாடு என்ன வாங்கினார்கள்?
கப்பலுக்குப் போடும் நங்கூர்ச் சங்கிலி.

75. அது ஏன்?
அது தான் தற்போது சபையைச் சுற்றிப் போடப்பட்டுள்ள பாதுகாப்பு வேலி.

76. அது எப்படித் துருப்பிடிக்காமல் உள்ளது?
பானை பிடித்தவன் பாக்கியச் சாலி அதனால்.

77. சரி, தங்கம் எப்படிச் செய்ய முடிந்தது?
அது செய்யப்படவில்லை, விளைந்தது.

78. சரி விவரம் கூறும்?
பெரிய வாணலில் தண்ணீர் கொதிக்கும், அதில் பெருமான் முப்பூ மருந்தையும் திரு நீறும் இடுவார்கள்.

79. இட்டு?
சிறிய குருப்பிக் கொண்டு கிளறச் செய்வார்களாம்.

80. கிளறினால் என்ன ஆகும்?
கஞ்சியாகி, கூழாகி, பாகு ஆகி, கேக் ஆகுமாம்.

81. ஆன பிறகு?
அதைப் பொன் பாளமாக்கித் தருவார்களாம்.

82. யார் வசம்?
அந்த ஒப்பந்தகாரர் ஆறுமுக முதலியார் வசம்.

83. அது எங்கே பணமாக்கப்பட்டது?
அது பம்பாயில் பணமாக்கப்பட்டது.

84. அதற்குக் கணக்கு உண்டா?
ஓ, அதுவும் சந்தாக் கணக்குக் குறிப்பில் எழுதப்பட்டு இருந்ததாம்.

85. என்னவென்று?
சிவயோக சித்தியால் வந்த வரவு என்று.

86. அந்தப் புராணம் எல்லாம் ஏன்?
பற்றாக்குறையை ஈடு செய்ய.

87. அப்போது ஆண்டவரும் உதவி உள்ளார் தானே?
உண்மை தான்

88. பிறகு என்ன வாங்கப்பட்டது?
சபை முன்புற வாயிகள் அமைக்கப் பளிங்கு கற்கள்.

89. எப்போது சபை வேலை முடிந்தது?
1872 மார்கழி மாதத்தில்.

90. தை மாதத்தில்?

தைப்பூச முதல் ஜோதி தரிசனம் நடைபெற்றது.

91. அய்யா காட்டினார்களா?
மேட்டுகுப்பத்தில் இருந்தபடியே காண்பிக்கச் செய்தர்கள்.

92. பத்திரிக்கை அடித்தார்களா?
ஆமாம், பல மொழிகளில் அடித்தார்களாம்.

93. அப்புறம்?
அது சத்திய தருமச்சாலை விளம்பரம் போலவே சத்திய ஞானசபை விளம்பரமாக்கப்பட்டது.

94. சபைக்குப் பூசகர் யார்?
திருநெல்வேலி மழைச் சாமியார் (72 வயதுக்கு மேல்)

95. 12 வயதிற்குள்?
திருப்பாதிரிப்புலியூர் தேரடி வீதி ஓதுவார் இரத்தினம் என்பவர்.

96. இவ்வளவு செய்திகளா உள்ளன?
இது போல இன்னும் இரு மடங்கு செய்திகள் உள்ளன.

திருச்சிற்றம்பலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *