வள்ளலாரின் தயவு

can you buy accutane over the counter in canada வள்ளலாரின் தயவு

where can i buy provigil forum இதுவரை உலகில் தோன்றிய பெரியோர்களில் தலைசிறந்தவர்க்ள் சிதரம்பரம் இராமலிங்கம் என்னும் திருவருட்பிரகாச வள்ளலார்.

follow அவர்களது வரலாறு, நிலையங்கள், விழாக்கள், நெறிமுறைகள் பற்றிய தகவல்கள் இதில் கூறப் பட்டுள்ளன.

இது வளரும் தலைமுறைக்கான வெளியீடு!

25mg prednisolone tablets for dogs அவற்றைப் படித்துப் பயன் பெறுவோம்! வாருங்கள்!!

வள்ளலார் இளைகஞர் மன்றம், வடலூர்.

 

 1. தயவு என்றால் என்ன?

இதுவா தெரியாது அது இரக்கம்

 1. எதன் மீது இரக்க்க காட்டவேண்டும்?

கல்லுக்கும் நெல்லுக்கும் கூட காட்டலாம்

 1. கல்லுக்கு எப்படி காட்டுவது?

காலப்போக்கில் மலையே மண்ணாங்கட்டி ஆகிவிடுவதால்

 1. நெல்லுக்கு எப்படி இரக்கப்படுவது?

சாவியாக இப்படிப் போயிற்றே என்று ஏக்கப்படலாம் இரங்கலாம்.

 1. வள்ளல்(வள்ளலார்) என்பது யார்?

யார்! இராமிலிங்க சுவாமிகள் தான்.

 1. அவர் இப்படியா இரக்கப்பட்டார்?

கண்ணீரே வடிபார்.

 1. சான்று?

வாடிய பயிரைக்கண்டு வாடினேன் என்பதால்.

 1. இவர் வாடினால் என்ன! வாட்டம் தீருமா?

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்பதே வள்ளலார் கொள்கை.

 1. அந்த மாதிரி முழக்கத்தால் பயன்?

முழக்கம் போடுபவர் வழக்கமாக ஒரு பிடி சோறாவது கொடுப்பார் கொடுக்கத் தொடங்கி விடுவார்.

 1. அது எப்படி?

அது தான் யாவர்க்குமாம் உண்ணும் போது ஒரு கைப்பிடிமா என்று திருமூலர் சொல்வது.

 1. கைப்பிடி உணவு பசியை நீக்குமா?

பசியை அடக்கி வைக்கும்

 1. மீண்டும்?

ஒரு நாழிகை கழித்துப் பசிக்கும்

 1. அப்போது என்ன செய்வது?

முயற்சி எடுத்து உண்ணலாம்! பிச்சை ஏற்று உண்ணலாம்.

 1. பிச்சை ஏற்கப் பங்கமாக இருக்குமே?

பிச்சை எடுப்பது பங்கம் இல்லை.

 1. பின்பு?

அதையே வழக்கமாகக் கொள்வதுதான் பங்கம்.

 1. ஏழைகள் என்ன செய்வார்கள்?

கொடுக்கும் பிச்சையை உணவாக்கி உண்ணலாம்.

 1. தம்(பீடி/சிகரட்)-தானே அடிப்பார்கள்?

அடிச்சிவிட்டுப் போகட்டுமே.

 1. அது சரியா?

தம் அடிப்பதை விட தண்ணீர்(மது) அடிப்பது பாவம் மற்றும் கொடுமை.

 1. யார் விட்டு விடுவார்கள்?

உருப்பட வேண்டும் என்று நினைப்பவர்கள்.

 1. அப்படி நினைக்காவிட்டால்?

அவர்கள் தலைவிதி ஒழிய வேண்டும் என்று இருந்தால் என்ன செய்ய முடியும்.

 1. ஏதேனும் ஒரு வழி சொல்லுங்களேன்?

துட்டு(பணம்) தராதீர்கள்.

 1. பின்பு?

உணவு சிற்றுண்டி வாங்கித்தாருங்கள்.

 1. நமது முகத்திலேயே தூக்கி எறிந்து விடுவார்கள்?

இப்போது கையேந்துகிறார்கள் அப்புறம் வாயேந்த வேண்டியதுதான்.

 1. ஏன்?

வாய்க்கும் கைக்கும் வலிவு இருக்காது.

 1. அப்படியா?

பின் எப்படி ஆகும்?

 1. என்ன செய்யலாம்?

தலைவிதியை நொந்து கொள்ளலாம்.

 1. சரி வள்ளல் இதற்கு சொல்லும் தீர்வு என்ன?

அவரவர்கள் வேலையை அவரவர்கள் பார்க்கலாம்.

 1. தயவு என்னாவது?

அது திருப்பெருந்துறை மண்ணைக் கைகளால் தண்ணீர் ஊறும் அளவு (கைகளாலேயே) மண்ணை எடுக்கலாம்.

 1. எடுத்தால்?

முயற்சி திருவனையாக்கும்.

 1. கருணை நன்முயற்சி என்கிறார்களே அப்படி என்றால் என்ன?

உடல்-பொருள் உயிரால் உதவி செய்ய விரும்புவது.

 1. உதவி செய்ய விரும்பினால் போதுமா?

போதும்! போதாது.

 1. என்னய்யா உன் பதில் குளறுபடிகளாய் இருக்கிறது?

ஏழை எளியவர்கள் விரும்ப வேண்டும் வசதி படைத்தவர்கள் உதவ வேண்டும்.

 1. எதை உதவுவது?

வரிசைக் கிரமப்படி உணவு, உடை உறையுள்.

 1. நல்லுணவு என்கிறார்களே அது என்ன?

இப்பாரில் (உலகில்) பசிக்கே தந்த நல் உணவு இன்சுவை நல்லுணவு ஆம்.

 1. அது எதைக்குறிக்கிறது?

இன்சுவை-நல்-உணவாக இருக்கலாம்.

 1. கொஞ்சம் விளக்கமாகச் சொல்லும்?

முதலில் உணவு அடுத்து நல்லுணவு பின் சுவை நல் உணவு சிறப்பாக இன் சுவை நல் உணவு ஆகும்.

 1. ஓகோ?

நீயே யோசியுமே.

 1. சரி வரும் பயன்?

அவரே கிரம பூசை செய்பவர் அப்புறம் அவரே அன்புடன் தோத்தரிப்பவர் அடுத்து அவரே யோகம் செய்பவர் முடிவில் அவரே ஞானம் பெறுபவர் ஆவார்.

 1. அதயே வேறு ஒரு வகையால் சொல்லலாமா?

ஓ சொல்லலாமே.

 1. சொல்லும்?

இல்லற இன்பமாகிய இம்மை இன்பப் பயன் கிடைக்கும் தேவ போக இன்பமாகிய மறுமைப் பயனும் கிடைக்கும் பேரின்பமாகிய ஒருமைப்பயனும் கிடைக்கும்.

 1. ஒருமை என்றால் என்ன?

சமத்துவம் ஈக்குவாலிட்டி என்கிறார்களே அதுதான்.

 1. அப்பாடா?

அம்மாடா அப்பாடா.

 1. அம்மாவை ஏன் சொல்லணும்?

அம்மையப்பர் கூட்டு உறவே இந்த அகிலாண்டம் எல்லாம்.

 1. பெஸ்ட் பெஸ்ட் வரிசை கிரமம்?

இல்லற இன்பம், துறவற இன்பம், பேரின்பம்.

 1. துறவறம் என்பது?

அணி மணிகள் துறந்து-ஆடைகுறைந்து ஆகாரம் குறைந்து வாழ்ப் பெறுவதல்ல.

 1. பின்பு?

அறத்தை(தர்மம்) 15 நாழிகையியும் பொருள் தேடலை 15 நாழிகையும் இன்பத்தை 15 நாழிகையும் வீடுபேறு தேடலை 15 நாழிகையும் ஏற்றுக் கடைபிடிக்க வேண்டும்.

 1. சரிதான் சரிதான்?

அப்படிச்செய்து வந்தால் அதுவே (நித்திய) அழியாத் துறவறம் ஆகும்.

 1. வள்ளலார் துறவியா குடும்பஸ்த்தரா?

குடும்பஸ்தர்

 1. எப்படி?

சென்னையில் வாழ்ந்த 35 ஆண்டுகளில் மடத்திற்கோ ஆசிரமத்திற்கோ ஆதீனத்திற்கோ செல்லவில்லை.

 1. பின்பு?
 • (i). அண்ணன் அண்ணிபோடு
 • தமக்கை மாமாவோடு
 • தக்க சொந்தத்தோடு கூட்டுக் குடும்பமாகவே வாழ்ந்தார்கள்
 1. மனைவியார்?

அவரும் அப்படியே.

 1. பின் ஏன் மனைவியை விட்டுவிட்டார்கள் என்கிறார்கள்?

அப்படி செய்வார்களா.

 1. பின்பு?

மனைவியார் விலகிக்கொண்டார்.

 1. எதனால்?

வள்ளலார் சாமி பைத்தியமாக இருக்கிறார் என்று.

 1. பின்பு நடைமுறை என்ன?

35 ஆண்டுகள் வள்ளலார் ஒரே குடும்பமாக இருந்தார்.

 1. உணவு இட்டது யார்?

அண்ணியார்.

 1. திருவறை தூய்மை செய்தது யார்?

அண்ணியார்.

 1. தீபம் பார்த்தது வந்தது யார்?

அண்ணியார்

 1. வழிபாட்டிற்கு உதவியது யார்?

அண்ணியார்

 1. அப்போது அண்ணியாரிடம் பைத்தியமாக இருக்கிறாரே என்று சொல்ல மாட்டார்களா?

சொல்லுவார்கள் சொல்லுவார்கள்.

 1. மனைவியும் உதவி செய்தாரா?

மனைவி, அண்ணி, தமக்கைகளும் உதவி செய்தார்கள் தாயாரும் உதவி செய்தார்.

 1. அப்படியா சேதி?

பின் எப்படி செய்தி.

 1. சென்னையில் இருந்த போது என்னதான் செய்தார்கள்?

பாடல்கள் எழுதினார்கள் விளக்கம் அருளினார்கள் நூல்கள் பதித்தார்கள்.

 1. என்ன விளக்கம்?

ஒழுவில் ஒடுக்கம்.

 1. அதன் பின்பு?

குடும்பத்தாரின் அனுமதியோடு தலயாத்திரை (தொழுவூரார் முதலியவரோடு) செய்யப் புறப்பட்டார்கள்.

 1. எது வரை?

மதுரை வரை.

 1. பிறகு?

கருங்குழி வந்தடைந்தார்கள்.

 1. காரணம்?

சிறிய தமையனாருக்கு உடல் நலமில்லை என்பதால்.

 1. அப்புறம்?

அவர் காலமாகி விட்டார்.

 1. அடடா?

அந்தப்பணிகளையும் அய்யா செய்து முடித்தார்கள்.

 1. பின்பு?

சென்னை புறப்பட்டார்கள்.

 1. புறப்பட்டு?

புறப்படவில்லை.

 1. காரணம்?

வேங்கட ரெட்டியாரும் முத்தாலம்மையும் பூரண விசுவாசம் காட்டி தன் இல்லத்தில் தங்கும் படி வேண்டிக்கொண்டார்கள்.

 1. அதன் பின்பு?

9 ஆண்டுகள் பக்கமாக அங்குத் தங்கியருளினார்கள்.

 1. தங்கி?

பாசுரங்கள் எழுதுவது தில்லை(சிதம்பரம்) செல்வது தீந்தமிழ் விளக்கம் தருவதாக வாழ்ந்தருளினார்கள்.

 1. மேற்கொண்டு?

அப்போது இறைவன் ஐயா முன்பு எழுந்தருளினார்.

 1. எழுந்தருளி?

என்பாட்டுக்கு எண்ணி இசைத்தேன் என்தன் பாட்டை சத்தியமாக புனைந்தான் முன் பாட்டுக் காலையிலே வந்து கருணை அளித்து தருமச்சாலையிலே வா என்றான்.

 1. அதன்படி?

ஏழை எளியவர்களுக்கு உபசரிக்கும் தருமச்சாலை (அன்னதான கூடம்) உண்டாக்க சித்தப்பட்டார்கள்.

 1. அதனால்?

அதற்கு இடம் வேண்டுமே என்று அப்பாசாமி செட்டியாரிடம் ஆலோசனை கலந்தார்கள்.

 1. கலந்து?

ஒரு குழுவினர் பார்வதிபுரத்து மண்ணின் மைந்தர்களைச் சென்று கண்டு கொண்டார்கள்.

 1. கண்டு?

தருமச்சாலை உருவாக்கும் எண்ணத்தைத் தெரிவித்து நில தானம் கேட்டார்கள்.

 1. அதன்படி?

பார்வதிபுரத்து நல்லன்பர்கள் 80 ஏக்கர் நிலத்தை இனாமாக வழங்கியருளினார்கள்.

 1. பிறகு?

சித்திரை மாதத்தில் தருமச்சாலை தொடக்க விழாப் பத்திரிக்கை அடிக்கப் பட்டது.

 1. அடித்து?

நான்கு திசைக்கும் அனுப்பச் செய்தார்கள்.

 1. செய்து?

உலகில் இதுவரை தோன்றியிராத ஒருமை உணர்வை வளர்க்கும் தருமச் சாலை தொடக்கத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

 1. இதுவரை தோன்றியிராத என்பதற்கு என்ன அர்த்தம்?

பிராமணர் வன்னியர் முதலியோர் அரிசணர் ஆகியோர் எல்லோரும் இசைந்து இயைந்து உண்ணும் நிலை என்று அர்த்தம்.

 1. இசைந்து உண்ணுதல் என்றால்?

ஒன்றாக அமர்ந்து உண்ணுதல்.

 1. அதாவது சமபந்தி போஜனமா?

ஆமாம்! ஆமாம்.

 1. அடேயப்பா எப்படிப்பட்ட புரட்சி?

மெய்தான்.

 1. எத்தனை நாள் விழா?

மூன்று நாள்.

 1. காரணம்?

ஜீவகாருணிய சாத்திரம் வாசித்து விளக்க.

 1. அது என்ன ஜீவகாருணிய சாத்திரம்?

புல்முதல் பூமான் வரை இரக்கம் காட்டி வாழ்வதைப் பற்றிய செய்தி.

 1. அதனால் கிடைக்கும் பயன்?

இல்லற இன்பம், துறவற இன்பம், பேரின்பம் யாவும் கிடைக்கப்பெறும் என்பதே.

 1. துறவறம் ஏற்க வேண்டுமா?

அவசியமே இல்லை.

 1. பின்பு என்ன செய்வது?

மக்களோடு மகிழ்ந்து மனை அறம் காத்து, மிக்க காமவேட்கை தணிந்து மிகுந்த நேரத்தை உபசரிக்கும் சேவை வழிபாட்டிலும் ஈடுபடச் செய்ய வேண்டும்.

 1. பெஸ்ட் பெஸ்ட்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *