வள்ளலார் சரித்திரம்

http://fiona-kerr.com/wp-content/themes/colorway/style.css வள்ளலார் சரித்திரம்

வடலூரில் வாழ்ந்த வள்ளல் பெருமானின் வழி வழி மாணாக்கர்களில் ஒருவராகிய திரு. சீனி. சட்டையப்பர் அய்யா அவர்களால் எழுதப்பட்டது இந்த வள்ளலார் சரித்திரம் என்னும் அற்புத நூல்.

http://sdsignshop.com/product/2-bedrooms-rider-6″t-x-18″w/ மேல்மலையனூர் சன்மார்க்க சங்க ஆண்டு 2009 விழாவில் அன்பர்களுக்கு வழங்கப்பட்ட சிறிய நூல் இது.

வள்ளலார் பெருமானைக் குறித்து இதுவரை சன்மார்க்க உலகம் அறியாத பல செய்திகளை அய்யா அவர்கள் மிக எளிமையாக குறிப்பிட்டுள்ளார்கள்.

diclofenaco de sodico 75 mg பதிவிறக்கம் செய்து, படித்து பயன் பெருக.

தலைப்பு : வள்ளலார் சரித்திரம்

நூலின் சிறப்பு:

 1. வள்ளல் பெருமானின் வரலாற்றை எளிமையாக கூறுதல்.
 2. கேள்வி பதில் வடிவம்.
 3. 5 நிமிடத்தில் முழு நூலையும் படித்து விட முடியும்.
 4. இதுவரை சன்மார்க்க உலகம் அறியாத பல வரலாற்று செய்திகளை கொண்டது.
 5. கையடக்க நூல் வடிவம்.
 6. சிறியோர் முதல் பெரியோர் வரை எளிமையாக புரிந்துகொள்ள இயலும்.

நன்றி.

 • வள்ளலார் என்பவர் யார்?

வள்ளலார் என்பவர் இராமலிங்க அடிகள்

 • ஏன் அவருக்கு வள்ளலார் என்று பெயர்?

அருளையும் பொருளையும் அள்ளித் தருவதால்.

 • யாருக்கு அள்ளித் தருவார்?

இன்னார் இனியார் என்றில்லாமல் எல்லார்க்கும்

 • எப்படி அவரால் தரமுடியும்?

தயவு என்னும் கருணையால் தரமுடியும்.

 • தயவு என்பது என்ன?

எல்லா உயிர்களிடத்தும் இரக்கப்படும் குணம்.

 • எவ்வளவு தருவார்?

இல்லற இன்பம் அடையும் அளவு தருவார்.

 • அப்புறம்?

தவவாழ்க்கை அளவு இன்பம் தருவார். மேலும் பேரின்ப வாழ்க்கைப் பயனையும் தருவார்.

 • அப்படி மூன்றும் தருபவர்க்கு என்ன பெயர்?

கருணை வள்ளல் என்று பெயர்.

 • எங்கே பிறந்தார்? எப்ப பிறந்தார்?

சிதம்பரத்திற்குப் பக்கமுள்ள மருதூரில் 1823 ஆம் ஆண்டு புரட்டாசி 21ல் அக்டோபர் 5ந் தேதி.

 • தகப்பனார் என்ன செய்தார்?

ஊர்க்கணக்கு வேலை பார்த்தார்.

 • எத்தனை பிள்ளைகள்?

ஐந்து பிள்ளைகள்.

 • இராமலிங்கர் எத்தனையாவது பிள்ளை?

கடைப்பிள்ளை. கடைப்பிள்ளையாக இருந்தும் தலைப்பிள்ளையாகிவிட்டார்.

 • எப்படி?

இராமலிங்கர் பிறந்தது வளர்ந்தது-வாழ்ந்தது-உயர்ந்தது-ஓங்கியது-ஒளிர்ந்தது எல்லாம் இரக்கத்தால்.

 • இரக்கத்தின் மறுவடிவமே இராமலிங்கர்?

அப்படித்தான் எல்லாரும் சொல்லுகிறார்கள்.

 • ஒரு வரி உதாரணம் கூறும்?

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன். போதுமா?

 • போதும்.

இராமலிங்க வள்ளலே கூட என் உயிர் வேறு இரக்கம் வேறு அல்ல. இரண்டும் ஒன்றே என்கிறார்கள்.

 • எப்பொழுதிலிருந்து அவருக்கு இந்தக் குணம்?

சின்னஞ் சிறு சிசுப் பருவத்திலிருந்தே இந்தக் குணம். பிரசவிக்கும் போது தாயாருக்கு உண்டாகும் துன்பத்தைக் கூடக் கொடுக்கவில்லையாம்.

 • அடேயப்பா?

ஆச்சரியமானது இல்லையா?

 • மெய்தான் தாயார் பெயர்?

சின்னம்மை.

 • எந்த ஊர்?

சென்னைக்கு மேற்கில் சின்ன காவணம்.

 • சரி எவ்வளவு படித்தார்?

திண்ணைப் பள்ளிக்கூடந்தான்.

 • அப்படி இருக்க அசகாய அறிஞராகத் தெரிகிறதே?

அது கடவுள் செயல். ஆசிரியர் இல்லாமலே அனைத்து ஞானமும் பெற்றார்.

 • இதற்குச் சான்று?

சின்னஞ்சிறு வயதிலியே வேதம், ஆகமம், புராணம், இதிகாசம், இலக்கியம், இலக்கணம், காப்பியம், சாத்திரம், தோத்திரம், சோதிடம், மருத்துவம் ஆகிய துறைகளிலும் அளவற்ற ஞானம் இருந்தது.

 • இதுவும் வியப்புதான்?

ஆமாம்.

 • எப்படித் தெய்வ பக்தர் ஆனார்?

தாய் தந்தையர் தில்லைக்குச் சென்று வழிபட்டாங்க. அன்று முதல் தெய்வ பக்தர் ஆகிவிட்டார்.

 • அவர் வணங்கிய தெய்வம்?

முதலில் முருகன், அடுத்து சிவன், பிறகு நடராஜர், முடிவில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.

 • எந்த ஊர் முருகனை வழிபட்டார்?

திருத்தணிகை முருகனை.

 • ஏன் அவரை வழிபட வேண்டும்?

முருகன் அவதாரத்தில் சாந்தம், ஆறுதல், சுத்தம், ஆன்ம சுத்தி, அருள், அறிவு ஆகியவற்றை வழ்ங்குபவர் திருத்தணி முருகன் என்பதால்.

 • இதை யார் சொன்னது?

இராமலிங்கப் பெருமானே சொன்னதுதான்.

 • அப்புறம் வழிபட்ட ஆண்டவர்?

திருஒற்றியூர் ஆண்டவர்.

 • திருஒற்றியூர் எங்கே உள்ளது?

சென்னைக்கு வடக்கில் உள்ளது.

 • திருஒற்றியூரில் ஐயா பெற்ற பாக்கியம் என்ன?

அருள் வாழ்க்கையில் பிள்ளையாக வளர்க்கப்பட்டதுதான்.

 • அப்புறம் வழிபட்டது?

தில்லைச் சிதம்பர நடராஜரை.

 • அங்கு அவர் பெற்ற அனுபவம்?

மாயையை வென்ற மாவீரரானது. ஆனந்த நடனம் கண்டது.

 • ஓகோ! அப்புறந்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அடியவர் ஆனாரா?

ஆமாம்.

 • முன்பே ஏன் அப்படிப் பெறவில்லை?

சத்திய தருமப் பணி செய்யாததால்.

 • சத்திய தருமம் என்றால் என்ன?

ஏழை எளியர் துன்பம் போக்குதல்.

 • துன்பத்தில் முக்கியமானது என்ன?

பசித்துன்பம்.

 • அப்புறம்?

கொலைத் துன்பம்.

 • அப்புறம்?

மாமிசம் உண்ணும் கஷ்டம்.

 • அப்புறம்?

மரணமடையும் மாபெரும் துன்பம்.

 • அடடா! அதனை வள்ளலார் வென்றாரா?

திருத்தணி வாழ்விலேயே வென்று விட்டார்.

 • திருத்தணியை வழிபட்டார். அப்புறம் பாடல்கள் பாடினாரா?

திருத்தணியிலும் திருஒற்றியூரிலும் இறைவனை வழிபட்டார். பாடல்கள் பாடினார். அவை எல்லாம் ஏராளம்.

 • அதைக் கண்ட புலவர்கள் என்ன பேசினார்கள்?

உத்தம ஞானி என்று உணர்ந்து கொண்டார்கள், அடியார்கள், சித்தர்கள், முக்தர்கள், வித்துவான்கள் ஆகியவர்கள் இராமலிங்கரை எப்போதும் சூழ்ந்து நின்றார்கள்.

 • அவர்களுக்கு இடையில் வள்ளல் சொன்னது என்ன?

உயிர்களிடத்தில் லட்சியம் வேண்டும். அப்படியிருந்தால் திருவருள் நம்மை வந்து அடையும் என்றார்கள்.

 • அதன்படி அவர் பெற்றாரா?

ஆமாம்.

 • சான்று தர முடியுமா?

ஒருநாள் இரவு பசிக்குச் சோறு தந்தாளே ஒற்றி அம்மை. அவள் இராமலிங்கரை அருள்மகனாகப் பெற்றெடுத்துப் போற்றி வந்தாளாம்.

 • இது யார் சொன்னது?

வள்ளலேதான்.

 • சரி கல்யாணம்?

நடந்தது.

 • அதன்பிறகு?

நூல்கள் எழுதினார். வெளியிட்டார்.

 • கல்யாணம் எங்கு நடந்தது?

சென்னையில்.

 • கல்யாணம் ஆகி அங்கு வாழ்ந்த ஆண்டுகள்?

மொத்தத்தில் 35 ஆண்டுகள்.

 • அவருக்கு நிர்பந்தக் கல்யாணமாமே?

அப்படிதான் சொல்கிறார்கள்.

 • நீர் என்ன சொல்கீறிர்?

எதுவும் நிர்பந்தம் இல்லை. இயல்பாகத்தான் நடந்தது என்கிறேன்.

 • எப்படி?

எங்காவது ஆசிரமம், ஆதினம் ஆகியவற்றிற்குச் சென்றாரா? மலை-குகை-வனம்-கோயில்-சத்திரம்-சாவடி-தவச்சாலை-மடம் ஆகிய யாதொன்றுக்கும் போனாரா? இல்லை என்பதால் சொல்கிறேன்.

 • அப்பொழுது எங்கிருந்தார்?

குடும்பத்திலேதான்.

 • அதன் பின்பு?

திருத்தலயாத்திரை புறப்பட்டார்.

 • யார் யாருடன்?

மாணவர்கள்-தொண்டர்கள்-அடியார்கள்-சாதுக்களுடன்.

 • மனைவி என்ன ஆனார்?

சென்னையிலே தங்கினார்.

 • உடன் வரவில்லையா?

வரவில்லை.

 • ஏன் வரவில்லை?

உடன்பாடு இல்லை.

 • எதனால்?

சாமியே கதி என்று இராமலிங்கபெருமான் இருந்ததனால்.

 • அப்படியா இருந்தார்?

அப்படி இல்லை, அதைத்தான் தெரிந்துகொள்ளாமல் அனைவரும் பேசுகிறார்கள்.

 • எதைத் தெரிந்து கொள்ளாமல்?

பிரசவத்தில் தாயாருக்குத் துன்பம் செய்யவில்லை. இல்லற வாழ்க்கையில் மனைவிக்குத்துன்பம் செய்யவில்லை, குடும்ப வாழ்க்கையில் நட்புக்கும் உறவுக்கும் துன்பம் என்பதைத் துளியும் செய்யவில்லை.

 • துன்பம் செய்யவில்லை என்றால்?

மனிதாபிமானத்துடன் மனித நேயத்துடன் வாழ்ந்த மாபெரும் பண்பாளர் என்று பொருள்.

 • தலயாத்திரையில் சென்ற இடம்?

சிறப்பாகத் தில்லைச் சிதம்பரம்.

 • அங்கு அவர் பெற்ற அனுபவம் என்ன?

மல வெற்றி, மாயை வெற்றி, அதனால் தில்லைத் தாண்டவனின் திருவடி இன்பத்திற்கு முழுவதும் பாத்திரம் ஆனார்.

 • அப்புறம்?

மதுரை வரை சென்று மருதூருக்குப் பக்கமுள்ள கருங்குழிவந்தார்.

 • அங்கு ஏன் சென்றார்?

சின்ன அண்ணன் அங்கு ஊர்கணக்கராக இருந்தார் அதனால் சென்றார்.

 • அப்படியா? அண்ணார் வீட்டில் தங்கினாரா?

ஆமாம்.

 • அப்புறம்?

அண்ணன் சிறிது நாட்களில் காலமாகி விட்டார்.

 • அடப்பாவமே?

அதனால் சென்னைக்குப் புறப்பட்டார் இராமலிங்கர்.

 • சரிதான்?

ஆனால் ஊர் மணியக்காரர் சென்னைக்கு அனுப்ப விரும்பவில்லை. தம் வீட்டிலேயே தங்கும்படி வேண்டிக் கொண்டார்.

 • அந்த வீட்டு அம்மாள் எப்படி?

கணவரைப் போல அவரும் ஆதரவு காட்டின அன்புமணி.

 • அந்தக் கருங்குழியில் எத்தனை வருடம் இருந்தார்?

சுமார் 10 வருடம்.

 • 10 வருடமா? என்ன செய்தார்?

திருப்பாசுரங்கள் எழுதினார். திருத்தில்லை சென்று வந்தார். சன்மார்க்க சங்கத்தை உண்டாக்கினார்.

 • அப்புறம்?

கல்பட்டு ஐயா என்பவரைத் தொண்டராக ஆட்கொண்டார்.

 • மேற்கொண்டு?

இறைவன் அவரிடம் நேரில் வெளிப்பட்டான்.

 • வெளிப்பட்டு?

சத்திய தருமச்சாலை உண்டாக்கி ஏழைகளுக்கு அன்னம் படைக்கும் படிக் கட்டளை இட்டான்.

 • அதன்படி ஐயா செய்தாரா?

“தவப்பயன் தவப்பயன்” என்று அந்தக்கட்டளையைத் தலையால் தாங்கிச் செய்தார்.

 • எப்படி செய்தார்?

வடலூர் மக்களின் பேருதவியுடன் செய்தார்.

 • அப்புறம்?

1867 வைகாசி 11 முதல் மூன்று வேளையும் இயலாதவர்களுக்கும் ஏழைகளுக்கும் உணவு வழங்கக் கட்டுத்திட்டங்கள் செய்தார். அதற்குச் ஜீவகாருணிய சட்ட நூலும் எழுதினார்.

 • அதற்கான வருவாய்?

அன்பர்கள்-பொருளாகவும் பணமாகவும் வழங்கியதுதான்.

 • எத்தனை வருடங்கள் நடந்தது?

எத்தனை வருடங்களா? நேற்று, இன்று, நாளை நடந்தபடியே இருக்கின்றது.

 • அதற்குப்பிறகு?

4½ வருடம் கழித்து வடலூருக்கு வடமேற்கில் உள்ள மேட்டுக்குப்பம் சென்றார்கள்.

 • ஏன்?

அதுவும் கடவுள் செய்த திருவிளையாடல்.

 • சென்று?

உலகிலேயே இதுவரை உண்டாகி அறியாத ஒரு திருக்கோயில் அமைத்தார்கள்.

 • அதற்குப் பெயர்?

சத்திய ஞானசபை.

 • அதற்குரிய தெய்வம்?

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.

 • அதை ஏன் அவர் கட்ட வேண்டும்?

அவரைக்கட்டும் படி ஆண்டவர் கட்டளை இட்டார்.

 • எதற்காக?

தில்லைச் சிதம்பரத்தில் தாம் ஆனந்த நடனம் ஆடினோம்.

 • அதனால்?

உத்தரஞான சிதம்பரமாம் வடலூரில் அடுத்து அருள் நடனம் ஆடப்போகிறோம். அதற்காக ஒரு சபை உண்டாக்கும்படி உத்தரவிட்டார்.

 • அருள் நடனம் என்றால்?

எல்லா உயிரையும் இறைவனாகக் கருதுவது.

 • என்ன? எனன?

எல்லா உயிரையும் இறைவனாக்கித்தருவது. எல்லா உயிர்க்கும் பேரின்பம் தருவது.

 • சரிதான்! அதன்படி நிறைவேறிச்சா?

மேட்டுக்குப்பத்தில் சித்தி வளாகத்தில் இருந்தபடியே எல்லாச் செயல்களும் நல்லபடியாக நிறைவேறின.

 • எவ்வளவு பணமாச்சு?

80 ஆயிரத்திற்கு மேல் ஒரு லட்சம்.

 • அவ்வளவு பணம் ஏது?

ஐயாவும் அன்பர்களும் தந்ததுதான்.

 • ஐயாவுக்கு ஏது அவ்வளவு வருவாய்?

தங்கம் செய்யும் தகுதியைத்தம்பிரான் தந்தார். அதனால் வந்தது.

 • அதானே! அப்புறம் என்ன நடந்தது?

அப்புறமா? ஐயா அருளாட்சி பீடம் ஏறினார்.

 • ஏறினா அதனால என்ன லாபம்?

அண்டகோடிகளின் ஆட்சிக்கான ராஜாவாகி விட்டார்.

 • ராஜாவானா ராணி தேவைப்படுமே? யார் ராணி?

அருட்சித்தி அம்மை.

 • அந்த அம்மையார் எப்போது பட்டத்தரசி ஆனார்?

1873ல் ஐப்பசி 7க்கு முன்பு.

 • அது என்ன அவ்வளவு கரக்டாகச் சொல்கீறிர்?

திருமணம் செய்தது அதற்குமுன்பு. பின்புதான் அரசில் ராணி பக்கமிருக்க பட்டம் தருவாங்க.

 • அதனால் என்ன நன்மை?

எல்லா உயிரும், எல்லா இன்பமும், எல்லா போகமும் பெற அருளரசு இராமலிங்க வள்ளலுக்கே சொந்தமாகிவிட்டது.

 • ஆண்டவர் ஏதும் வைத்துக்கொள்ள வில்லையா?

ஆண்டவர் வேறு அருட்பிரகாசர் வேறு இல்லை, இருவரும் ஒருவரே ஆகிவிட்டனர், அதனால் வைத்துக்கொள்ளவில்லை.

 • அதனால் உலகிற்கும் உயிர்களுக்கும் என்ன நன்மை?

மலம் மாயையிலிருந்து மனத் துயர்கள் எல்லாம் விடுபட போகிறது. விடுபட்டு வருகிறது.

 • அதன்பின்?

அறியாமை இருள் அனைத்து மக்களிடமும் இருந்து அகன்று போய் விடப்போகிறது.

 • அப்புறம் மண்ணுலகம்?

விண்ணுலகமாகிச் ஜொலிக்கும்.

 • சரி பஞ்சகிருத்தியம் செய்வது யார்?

வள்ளல்தான்.

 • அதனால் வந்த புது நன்மை என்ன?

எல்லா உயிரும் நல் அறிவில் மேம்படும் உயிர்களாகி வாழும்.

 • அப்புறம்?

இம்சைகள் இருக்காது.

 • அப்புறம்?

கொலைகள் இருக்காது.

 • அப்புறம்?

மாமிசம் உண்பது மறந்தே போகும்.

 • அப்புறம்?

சாதிமத சந்தடிகள் அடங்கிப்போகும்.

 • அப்புறம்?

ஐயா அருட்பெருஞ்ஜோதி சித்தி பெற்றார்.

 • எப்ப சித்தி பெற்றார்?

1874 தைப்பூசத்தில்.

 • தைப்பூசம் என்றால் என்ன?

கடவுள் அறிவை மானுடர் பெறும் நாள் என்று பொருள்.

 • அடேயப்பா? ஐயா சித்தி பெறல! காலமாகி விட்டார்கள் என்கிறார்களே?

அதுதப்புக்கணக்கு அனைத்துதெய்வங்களும் அனைத்து தேவர்களும் அனைத்து மகான்களும் மூக்கின் மேல் விரல் வைக்கும் படிச் சாகா (உடலோடு) சித்தியைப் பெற்றாங்க.

 • அப்படீன்னா?

ஐஸ் கட்டி நீராவியாகிப் போவது நம் கண்களுக்குத் தென்படாது. அது போல வாழும் சித்தி பெற்றவர்கள்.

 • மாற்றிச்சொல்லும்?

கற்பூரம் காற்றில் கரைவது போல, (அ) எரிந்து சுவடில்லாமல் போவது போல ஐயா மாயை குறைவுள்ள உடம்பிலிருந்துமாயையற்ற உடம்பு பெற்று உசந்துட்டாங்க எனலாம்.

 • அது என்ன உடம்பு?

சுத்த உடம்பு, பிரணவ உடம்பு, ஞான உடம்பு.

 • சற்றே விளக்கவும்?

ஒளி உடல்-ஒலி உடல்-வெளி உடல் பெற்றார் என விளக்கலாம்.

 • சரி இப்ப என்ன நடக்கிறது?

ஐயா எண்ணப்படி அனைத்துயிரும் மேம்பட்ட அறிவுபெற்றுப்பரிணாமம் அடைந்தபடியே உள்ளது.

 • அந்த மவுசு ஐயாவுக்கு எப்படிக் கிடைத்தது?

ஆருயிர்க்கெல்லாம் அன்பு காட்டியதால் கிடைச்சுது.

 • நாம் காட்ட முடியாதா?

எதிர் வீட்டுப் பிள்ளைக்கு மூக்கு ஒழுகுது? என்ன செய்வோம்?

 • ஓடு, ஓடு! வீட்டிற்குப்போய்த் துடைத்துக் கொண்டு வா என்போம்?

நாம் துடைத்துவிட மாட்டோமில்லையா?

 • அது சங்கட மாச்சே?

அப்ப நீர் தேரமாட்டீர்.

 • அடப்பாவமே! என்ன செய்ய வேண்டும்?

காருணயத் தடைகளைத் தகர்த்து எறியும்!

அப்பதான்………..?

 • அப்பதான்?

கடைத்தேருவீர்!

 • சரி! இனியாவது அப்படியே நடக்க முயல்கிறேன்.

நன்றி, வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *